இரண்டாம் அஜயராஜன்

சபலக்ச நாட்டின் ஆட்சியாளார்

இரண்டாம் அஜயராஜா (Ajayaraja II) (ஆட்சி சுமார் 1110-1135 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். இவர் மால்வாவின் பரமாரர்களை தோற்கடித்தார். மேலும் கசனவித்துகள் படையெடுப்புகளால் தனது பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளை இழந்த இவர் பின்னர் அவர்களை முறியடித்தார். அஜ்மீர் நகரம் இவரால் நிறுவப்பட்டது.

இரண்டாம் அஜயராஜன்
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1110–1135 பொ.ச.
முன்னையவர்முதலாம் பிருத்விராஜா
பின்னையவர்அர்னோராஜா
இராணிசோமல்லாதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
அர்னோராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்
தந்தைமுதலாம் பிருத்விராஜா

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அஜயராஜா தனது தந்தை முதலாம் பிருத்விராஜாவிற்குப் பிறகு சகமானாவின் அரியணையில் அமர்ந்தார். இவர் சல்கணன் என்றும் அழைக்கப்பட்டார். பிரபந்த கோசம், ஹம்மிர மகாகாவியம் போன்ற நூல்கள் இவரை அல்கணா என்று அழைக்கிறது. இது சல்கணனின் மாறுபாடாகத் தோன்றுகிறது. [1]

சோமலாதேவி, சோமலேகா என்றும் அழைக்கப்படும் சோமல்லாதேவியை மணந்தார். [2]

அஜ்மீரை நிறுவுதல்

தொகு

அஜயமேரு (நவீன அஜ்மீர் ) நகரத்தை இவர் நிறுவியதாக 12 ஆம் நூற்றாண்டின் உரையான பிருத்விராஜ விஜயம் கூறுகிறது. [3] பொ.ச.1113 (1170 VS ) தேதியிட்ட தார் நகரில் நகலெடுக்கப்பட்ட பால்ஹாவின் ஆன்மீகப் பதிவில் நகரத்தின் பெயரைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு இடம்பெற்றதாக வரலாற்றாசிரியர் தசரத சர்மா குறிப்பிடுகிறார். அஜ்மீர் 1113 -க்கு முன்பே நிறுவப்பட்டது என்று இதன் மூலம் தெரிகிறது. [4] நான்காம் விக்ரகராசனின் புகழ் பாடும் கல்வெட்டு அத்தாய் தின் கா ஜோன்ப்ராவில் கண்டெடுக்கப்பட்டது. அதில் அஜயராஜா (அஜயதேவன்) தனது இல்லத்தை அஜ்மீருக்கு மாற்றினார் என குறிப்பிடப்பட்டுள்ளது. [5]

பிற்கால உரையான பிரபந்த-கோசம் 8 ஆம் நூற்றாண்டின் மன்னர் முதலாம் அஜயராஜன் அஜயமேரு கோட்டையை நிறுவினார் என்று கூறுகிறது, இது பின்னர் அஜ்மீரின் தாராகர் கோட்டை, என்று அறியப்பட்டது. [3] வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங்கின் கூற்றுப்படி, முதலாம் அஜயராஜா அனேகமாக இந்த நகரத்தை நிறுவியிருக்கலாம். ஏனெனில் கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [6] இரண்டாம் அஜயராஜா பின்னர் நகரத்தை விரிவுபடுத்தினார். அரண்மனைகளைக் கட்டினார். மேலும் சகமானாவின் தலைநகரை சாகம்பரியிலிருந்து அஜ்மீருக்கு மாற்றினார் என்று சிங் கருதுகிறார். [7]

இராணுவ வாழ்க்கை

தொகு

பரமாரர்களுடன்

தொகு

குசராத்த்தின் சௌளுக்கிய மன்னன் ஜெயசிம்ம சித்தராஜாவின் படையெடுப்புகளால் மால்வாவின் பரமாரா வம்சம் பலவீனமடைந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அஜயராஜா பரமார பிரதேசத்தைக் கைப்பற்றி சகமானா இராச்சியத்தை விரிவுபடுத்தியதாகத் தெரிகிறது. [8] அஜயராஜா சுல்கணனைத் (அல்லது சொல்லனா) தோற்கடித்தார். அவர் ஒருவேளை பரமார மன்னர் நரவர்மனின் தளபதியாக இருக்கலாம். பிஜோலியா பாறைக் கல்வெட்டின் படி, சுல்கணன் ஒரு தண்டநாயகன் அல்லது தளபதியாக இருக்கலாம். சுல்கணன் போரில் பிடிபட்டு, ஒட்டகத்தின் முதுகில் கட்டப்பட்டு, சகமான தலைநகர் அஜ்மீருக்கு கொண்டு வரப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. [9] அஜ்மீரில் உள்ள அதாய் தின் கா ஜோன்ப்ராவில் கிடைத்த கல்வெட்டு, மால்வாவின் ஆட்சியாளரைத் தோற்கடித்த பிறகு அஜயராஜா உஜ்ஜைனி வரையிலான பகுதியைக் கைப்பற்றியதாக பெருமை கொள்கிறது. [7]

சான்றுகள்

தொகு

நூல் பட்டியல்

தொகு
  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • Har Bilas Sarda (1911). "Adhai-Din-ka-Jhonpra". Ajmer: Historical and Descriptive (PDF). Scottish Mission.[தொடர்பிழந்த இணைப்பு]
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அஜயராஜன்&oldid=3429644" இலிருந்து மீள்விக்கப்பட்டது