முதலாம் பிருத்விராஜா

சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்

முதலாம் பிருத்திவிராசா (Prithviraja I) (ஆட்சி சுமார் 1090-1110 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராசத்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

முதலாம் பிருத்விராஜா
பரம-பட்டாரக மகாராசாதிராசா பரமேசுவரன்
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1090-1110 பொ.ச.
முன்னையவர்மூன்றாம் விக்கிரகராசா
பின்னையவர்இரண்டாம் அசயராசா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் தனது தந்தை மூன்றாம் விக்ரகராஜாவுக்குப் பிறகு சகமான சிம்மாசனத்தில் அமர்ந்தார். [1] பொ.ச.1105 தேதியிட்ட ஜினமாதா கல்வெட்டு இவரது பட்டத்தை "பரம-பட்டாரக மகாராஜாதிராஜா பரமேசுவரன்" என்று வழங்குகிறது. இது இவர் ஒரு சக்திவாய்ந்த அரசர் என்பதைக் குறிக்கிறது. [2]

இராணுவ வெற்றிகள்

தொகு

பிருத்விராஜாவின் ஆட்சியின்போது பிராமணர்களைக் கொள்ளையடிக்க 700 சோலாங்கியர்களைக் கொண்ட ஒரு குழு புஷ்கர தீர்த்தத்திற்கு வந்ததாக பிருத்விராஜ விஜயம் என்ற நூல் கூறுகிறது. சகமான அரசன் அவர்களை தோற்கடித்து கொன்றதகத் தெரிகிறது. இந்த புராணக்கதை குசராத்தின் சோலாங்கி மன்னர்களான கர்ணன் அல்லது செயசிம்ம சித்தராசனுடன் பிருத்விராஜாவின் மோதலைக் குறிப்பிடுவதாக இருக்கலாம். [3] இருப்பினும், உரை எந்த கூடுதல் தகவலையும் வழங்காததால், இதை உறுதியாகக் கூற முடியாது. [4]

பிரபந்த கோசம் என்ற நூல் இவரை ஒரு பாகுலி ஷாவின் "கைகளை விலக்கினார்" என்று கூறுகிறது. [3] இது அநேகமாக கசனவித்களின் படையெடுப்பை இவர் முறியடித்ததைக் குறிக்கிறது. மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி, தனது தபகாத்-இ நசிரியில், மூன்றாம் மசூத் ஆட்சியின் போது, கசனவித்து ஆட்சியாளர் ஹாஜிப் தகாதிகின் கங்கை நதிக்கு அப்பால் சென்று இந்தியாவைத் தாக்கியதாகக் குறிப்பிடுகிறார். பாகுலி ஷா ஹாஜிப் தகாதிகின் துணை அதிகாரியாக இருந்திருக்கலாம். [5]

மத நடவடிக்கைகள்

தொகு

பிருத்விராஜ விஜயம் இவரை ஒரு சைவனாகக் காட்டுகிறது. [4] இவர் யாத்ரீகர்களுக்காக சோமநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையில் உணவு விநியோக மையத்தை ( அன்ன-சத்திரம் ) கட்டினார். [3]

இவர் சமண மதத்தையும் ஆதரித்தார். விஜயசிம்ம சூரியின் உபதேசமாலாவ்ரித்தி (கி.பி. 1134) மற்றும் சந்திர சூரியின் முனிசுவ்ரத சரிதம் (கி.பி. 1136) ஆகிய நூல்கள், ரந்தம்பூரில் உள்ள சைனக் கோயில்களுக்கு தங்க கலசங்களை ( குப்போலாக்கள் ) நன்கொடையாக அளித்ததாகக் கூறுகின்றன. [4]

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு
  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பிருத்விராஜா&oldid=3584480" இலிருந்து மீள்விக்கப்பட்டது