கசானவித்துப் பேரரசு

துருக்கிய மம்லுக் வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் வம்சம்
(கசனவித்துகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கசனவித்து வம்சம் (Ghaznavids) என்பது துருக்கிய மம்லூக் வம்சாவளியைச் சேர்ந்த பாரசீக முஸ்லிம் வம்சமாகும்.[6][b] [8] ஈரான், ஆப்கானித்தான், திரான்சோக்சியானாவின் பெரும்பகுதி, வடமேற்கு இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி ஆகியவற்றை பொ.ச. 977 முதல் 1186 வரை ஆட்சி செய்தது. [9] குராசானிலுள்ள இந்து குஷ் மலைத்தொடருக்கு வடக்கே பால்கிலிருந்த சமனிட் பேரரசின் முன்னாள் தலைவராக இருந்த அவரது மாமனார் ஆல்ப் டிகின் இறந்த பிறகு கசுனி மாகாணத்தின் ஆட்சிக்கு வந்த சபுக்திகின் என்பவரால் வம்சம் நிறுவப்பட்டது.

கசனவித்து பேரரசு
غزنویان Ġaznaviyān
பொ.ச.977–பொ.ச.1186
பொ.ச.1030இல் மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருந்த பேரரசு.[1]
பொ.ச.1030இல் மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருந்த பேரரசு.[1]
நிலைபேரரசு
தலைநகரம்காசுனி
(977–1163)
லாகூர்
(1163–1186)
பேசப்படும் மொழிகள்பாரசீகம்[a] (அலுவல், அரசவை மொழி; பிரான்கா)
அரபு (இறையியல்)
துருக்கி (இராணுவம்)[3]
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்வாரிசு வழி மன்னராட்சி
சுல்தான் 
• பொ.ச. 977–997
சுபுக்திகன் (முதலாமவர்)
• பொ.ச.1160–1186
குசுரு மாலிக் (கடைசி)
பிரதம மந்திரி 
• 998–1013
Abu'l-Hasan Isfaraini (first mentioned)
• 12th century
Abu'l-Ma'ali Nasrallah (last mentioned)
வரலாற்று சகாப்தம்நடுக்காலம்
• தொடக்கம்
பொ.ச.977
• முடிவு
பொ.ச.1186
பரப்பு
1029 estimate[4][5]3,400,000 km2 (1,300,000 sq mi)

வம்சம் நடு ஆசிய துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தது என்றாலும், அது மொழி, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் முற்றிலும் பாரசீகமயமாக்கப்பட்டது. [c] [11] [d] [13] எனவே இது "பாரசீக வம்சமாகவே" கருதப்படுகிறது.[14]

சபுக்திகினின் மகன், கசினியின் மகுமூது சமனிட் பேரரசில் இருந்து சுதந்திரம் அறிவித்தார் [15] மேலும் கசனவித் பேரரசை கிழக்கில் ஆமூ தாரியா, சிந்து ஆறு மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கில் இரே மற்றும் அமாதான் வரை விரிவுபடுத்தினார். முதலாம் மசூத்தின் ஆட்சியின் கீழ், கசனவித்து வம்சம் தண்டநாகன் போருக்குப் பிறகு செல்யூக் வம்சத்திடம் அதன் மேற்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது. இதன் விளைவாக நவீன ஆப்கானிஸ்தான், பாக்கித்தான் ( பஞ்சாப் மற்றும் பலுச்சிசுத்தானம் ) ஆகியவற்றிற்குள் அதன் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன. [16] [17] 1151 இல், சுல்தான் பஹ்ராம் ஷா கசினியை கோரி அரசர் அலா அல்-தின் ஹுசைனிடம் இழந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "உண்மையில், பத்தாம் நூற்றாண்டில் கசனவித்துகள் அரசு உருவானது முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கஜார்களின் வீழ்ச்சி வரை, ஈரானிய கலாச்சாரப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் துருக்கிய மொழி பேசும் வம்சங்களால் ஆளப்பட்டன. அதே நேரத்தில், உத்தியோகபூர்வ மொழி பாரசீக மொழியாகும். அரசவை இலக்கியம் பாரசீக மொழியில் இருந்தது. மேலும் பெரும்பாலான அரசர்கள், அமைச்சர்கள் மற்றும் மாண்டரின்கள் பாரசீக மொழி பேசுபவர்களாக உயர்ந்த கற்றல் மற்றும் திறன் கொண்டவர்களாக இர்டுந்தனர்."[2]
  2. கசனவித்துகள் துருக்கிய அடிமை-சிப்பாய்களின் வம்சத்தினர்...[7]
  3. "கசனவித்துகள் சமனிட் நிர்வாக, அரசியல் மற்றும் கலாச்சார மரபுகளைப் பெற்றனர். மேலும், வட இந்தியாவில் ஒரு பாரசீக மாநிலத்திற்கான அடித்தளத்தை அமைத்தனர். ..."[10]
  4. நிஜாம் அல்-முல்க் பாரசீக கசனவித்துகளின் மாதிரியின்படி செல்யூக் நிர்வாகத்தை ஒழுங்கமைக்க முயன்றார்.[12]

சான்றுகள் தொகு

  1. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 146, map XIV.2 (l). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
  2. Katouzian 2003, ப. 128.
  3. Bosworth 1963, ப. 134.
  4. Turchin, Adams & Hall 2006, ப. 223.
  5. Taagepera 1997, ப. 496.
  6. Levi & Sela 2010.
  7. Levi & Sela 2010, ப. 83.
  8. Bosworth 1963.
  9. Bosworth 2006.
  10. Ziad 2006, ப. 294.
  11. Ziad 2006.
  12. Meisami 1999, ப. 143.
  13. Meisami 1999.
  14. Spuler 1970.
  15. Bosworth 1975, ப. 170.
  16. Amirsoleimani 1999, ப. 243.
  17. Spuler 1991, ப. 1051.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசானவித்துப்_பேரரசு&oldid=3716103" இலிருந்து மீள்விக்கப்பட்டது