தாராகர் கோட்டை, அஜ்மீர்

இராஜஸ்தானின் கோட்டைகள்

தாராகர் கோட்டை (Taragarh Fort) என்பது இந்தியாவின் இராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் நகரில் செங்குத்தான மலைப்பகுதியில் கட்டப்பட்ட கோட்டையாகும். இது 8 ஆம் நூற்றாண்டில் முதலாம் அஜயராஜன் என்ற அரசனால் (721-734) [1] கட்டப்பட்டது. இது முதலில் அஜய்மேரு துர்க்கம் [2] என்று அழைக்கப்பட்டது.

தாராகர் கோட்டை
ஆள்கூறுகள்26°26′32″N 74°37′06″E / 26.442154°N 74.618288°E / 26.442154; 74.618288
இடம்அஜ்மீர், ராஜஸ்தான், இந்தியா
வகைFort
கட்டியவர்முதலாம் அஜயராஜன்

வரலாறு தொகு

இந்த கோட்டை அதன் வலிமை மற்றும் மூலோபாய முக்கியத்துவத்திற்காக அறியப்பட்டது. கி.பி 1024 இல் கசினியின் முகமது என்பவரால் இந்த கோட்டையின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் கோட்டையை முற்றுகையிட்டாலும் கோட்டையை கைப்பற்றத் தவறிவிட்டார். [3]

மேவாரின் மகாராணா ரைமாலின் மகனும் ராணா சங்காவின் மூத்த சகோதரனுமான பிருத்விராஜன், 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஆளுநர் மல்லு கானைக் கொன்ற பிறகு, அஜ்மீரின் தாராகர் கோட்டையைக் கைப்பற்றினார். [4] [5] [6] இந்த கோட்டை தாராகர் என்றும் அழைக்கப்படுகிறது. இது பிருத்விராஜனின் மனைவி தாராபாய் என்பவரால் பெயரிடப்பட்டது. [7] இது மேவாரின் கட்டுப்பாட்டில் இருந்தது, பின்னர் மகாராணா சங்கா இதை கரம்சந்த் பன்வாருக்கு வழங்கினார் [8]

கட்டிடக்கலை தொகு

இலட்சுமி போல், பூடா தர்வாசா மற்றும் ககுடி கி பாதக் எனவும் அழைக்கப்படும் இக்கோட்டைக்கு மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இந்தக் கோட்டையின் சுவரில் 14 கொத்தளங்கள் இருந்தன. இந்த நுழைவாயில்களின் பெரும்பாலான பகுதிகள் தற்போது சிதிலமடைந்துள்ளன. பீம் புர்ஜ் என்று அழைக்கப்படும் 16 ஆம் நூற்றாண்டின் கோட்டை அதன் போர்முனைகளில் மிகப்பெரியது. அதன் மீது ஒரு காலத்தில் கர்ப் குஞ்சம் அல்லது 'கர்ப்பத்திலிருந்து இடி' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பீரங்கி ஏற்றப்பட்டது. கோட்டையில் நீர் தேக்கங்களும் உள்ளன.

பொ.ச 1202-இல் இராஜபுத்திரர்களின் தாக்குதலின் போது உயிர் இழந்த மீரான் சாஹேப் கி தர்காவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயமும் இந்த கோட்டையில் உள்ளது. அவர் பல இசுலாமியர்களுடன் கொல்லப்பட்டார்.

தாரிகி தௌடியின் கூற்றுப்படி, கிபி 1544 இல் சேர் சா சூரி கோட்டைக்கு வருகை செய்தபோது தர்கா அப்போது கட்டப்படவில்லை. இந்த இடத்திற்கு முக்கியத்துவமும் இல்லை. பின்னர் அது தர்காவாக உருவாக்கப்பட்டது. [9]

மேலும் படிக்க தொகு

சான்றுகள் தொகு

  1. Tomars of Delhi by Harihar Niwas Dwivedi. Gwalior: Vidya Mandir Publication. 1983. பக். 175. 
  2. Ajmer, Historical and Descriptive, pp. 50
  3. Ajmer, Historical and Descriptive, pp. 50
  4. Dhoundiyal 1966, ப. 54.
  5. Maharana Sanga The Hindupat, p28
  6. Ajmer:Historical and Descriptive, p45
  7. Rajawat 1991, ப. 87.
  8. Dhoundiyal 1966, ப. 55.
  9. Ajmer, Historical and Descriptive, pp. 56
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராகர்_கோட்டை,_அஜ்மீர்&oldid=3606908" இலிருந்து மீள்விக்கப்பட்டது