அமர்ந்தியங்கும் வாழ்முறை
அமர்ந்தியங்கும் வாழ்முறை என்பது வழமையான உடற்பயிற்தி தரும் செயற்பாடுகள் அல்லாத வாழ்முறையைக் குறிக்கின்றது. இந்த வாழ்முறைக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு தொழில் புரிவது, பொழுது போக்குவது, மற்றும் வாழ்வின் பிற கடமைகளைச் செய்கின்றார்கள். கணினி, தொலைக்காட்சி, தொலைதொடர்பு போன்ற புதிய அல்லது புதுவரவுத் தொழில்நுட்ப வசதிகள் உட்கார் வாழ்முறையை ஏதுவாக்கின்றன. மேற்கத்தைய நாடுகளிலேயே இவ்வாழ்முறை மிகவும் ஆழமாக பரவிவருகின்றது.
மேலும், இவ்வாழ்வுமுறையில் இருப்போர் உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் தகுந்த முக்கியத்துவம் அல்லது அக்கறை தர வேண்டும் எனவும் இல்லாவிடில் உடல்நலம் குன்றும் அளவுக்கும் உடல் பருமன் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.[1][தொடர்பிழந்த இணைப்பு]. அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டு நடுவணகம் அண்மையில் வெளியிட்ட செய்தியின் படி 44 மில்லியன் அமெரிக்கவாழ் மக்கள் அளவுக்கு மீறிய உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றார்கள் என்றும், 1991 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் வரையிலும் ஆன கால இடைவெளியில் கணக்கிட்ட புள்ளிவிவரத்தின் படி உடல்பருமானவர்கள் எண்ணிக்கை 74% உயர்ந்துள்ளது [2][தொடர்பிழந்த இணைப்பு]. . ஒருவருடைய உயர எடைக் குறியெண் 30க்கும் அதிகமாக இருந்தால் அவர் அளவுக்கு மீறிய உடல்பருமன் உடையவர் எனக்கொள்ளப்படும்.