தொலைத்தொடர்பு
தொலைத்தொடர்பு (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் (இருவழித் தொடர்பு உட்பட) கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொடர்பு என்ற சொல், வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தரவுத் தொடர்பு, கணினி வலையமைப்பு போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது.
தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, பரப்பி, ஓர் ஊடகம் (கம்பி), ஓர் அலைவரிசை, ஒரு வாங்கி என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, சைகை எனப்படும் பௌதிகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதிக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சைகைகளில் மாற்றத்தையோ தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றது. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சைகைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய கண்ணாகவோ காதாகவோ இருக்கக்கூடும். வேறு சில சந்தர்ப்பங்களில் கண், காது தவிர்ந்த ஏனைய புலன்கள் கூட இப்பணியைச் செய்கின்றன. இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் மூளையிலேயே நடைபெறுகின்றது.
தொலைத்தொடர்பு, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு அல்லது கடைசியாகக் குறிப்பிடப்பட்டதன் ஒரு வேறுபாடான, பரப்பியிலிருந்து வாங்கிக்கு ஒரு வழியாக மட்டும் செல்லும் ஒலிபரப்பாகக் கூட இருக்கக்கூடும்.
தொலைத்தொடர்புப் பொறியாளர் ஒருவருடைய திறமை, பரப்பும் ஊடகத்தினுடைய பௌதிக இயல்புகளையும் தகவல்களின் புள்ளி விபர இயல்புகளையும் பகுத்தாய்ந்து பொருத்தமான குறியீடாக்கும் (encoding), குறியீடவிழ்க்கும் (decoding) பொறிமுறைகளை வடிவமைப்பதிலேயே தங்கியுள்ளது.
மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் பார்வை, கேள்விப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, மனித உணர்தன்மை தொடர்பான உடலியல், உளவியல் அமிசங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது பொருளியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவதால், பொறியாளர்கள், மக்களுடைய பார்க்கும், கேட்கும் அனுபவங்களில் கூடிய பாதிப்பை உண்டாக்காமல் எந்த அளவுக்குச் சைகைக் குறைபாடுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள்.
மனிதத் (தொலைத்)தொடர்பு - உதாரணம்
தொகுஎளிமையான உதாரணமாக, உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையிலான உரையாடலொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மூளையில் உருவாகும், நீங்கள் உங்கள் நண்பருக்குச் சொல்லவிரும்பும் வசனமே, தகவலாகும். மூலையிலுள்ள மொழி தொடர்பான பகுதிகள், motor cortex, குரல் நாண்கள், larynx மற்றும் பேச்சு எனப்படும் ஒலிகளை எழுப்பும் உங்கள் வாய் என்பனவே பரப்பி (transmitter) ஆகும். பேச்சு எனப்படும் ஒலியலைகளே சமிக்ஞைகள். இவ்வாறான ஒலியலைகளையும், எதிரொலி, பகைப்புலச் சத்தங்கள் (ambient noise), தெறிப்பலைகள் (reverberation) என்பவற்றைக் காவிச்செல்லும் காற்றே சனல் ஆகும். உங்களுக்கும், வாங்கியாகிய உங்கள் நண்பருக்குமிடையில், சமிக்ஞைகளில் திரிபுகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஏற்படுத்தாத வேறு தொழில்நுட்பக் கருவிகளும் (உம்: தொலைபேசி, அமெச்சூர் வானொலி முதலியன) இருக்கக்கூடும். உங்கள் நண்பருடைய காது, கேள்வி நரம்பு, உங்கள் குரலுக்கும் அருகேசெல்லும் வாகனத்தின் சத்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு உங்கள் பேச்சை நீங்கள் சொல்லவிரும்பிய அதே வசனமாக மாற்றக்கூடிய அவருடைய மூளையின் மொழிப்பகுதிகள் என்பனவே இறுதியான வாங்கியாகச் செயல்படுகின்றன.
அருகே செல்லும் வாகனத்தின் சத்தம், சனலின் முக்கிய இயல்புகளிலொன்றான noise என்பதற்கு உதாரணமாகும். சனலின் இன்னொரு முக்கியமான அம்சம் bandwidth என்பதாகும்.
ஏனைய பின்னணிகள்
தொகுபெல் சோதனைச் சாலையைச் சேர்ந்த விஞ்ஞானி குளோட் ஈ ஷனோன் என்பவர், 1948ல், தொடர்பின் கணிதவியற் கோட்பாடு (A Mathematical Theory of Communication) என்பதி வெளியிட்டார். இந்த முக்கியத்துவம்வாய்ந்த வெளியீடு, தகவற் கோட்பாடு என வழங்கப்படும் தொடர்பு முறைமைகளை விபரிப்பதற்குப் பயன்படும் கணித மாதிரியுருக்களை உருவாக்க விழைந்தது.
வரலாறு
தொகுமத்தியகாலத்தில் இருந்து அமைப்புகள்
தொகு1792 ஆம் ஆண்டு பிரான்சியப் பொறியியலாளரான கிளவுடே சப்பே என்பவர் முதலாவது நிலைத்த காட்சியுடன் கூடிய தந்தி முறையை லீலிற்கும் பாரிசிற்கும் இடையில் வடிவமைத்தார். திறமை மிக்க இயக்குபவர்கள் தேவைப்பட்டதாலும் 10-30 கிலோமீற்றர்கள் (6–20 மைல்கள்) இடைவெளியில் விலை உயர்ந்த கோபுரங்களை அமைக்க வேண்டியிருந்ததாலும் இந்த அமைப்பு முறை பாதிக்கப்பட்டது. மின்சாரத் தந்தியின் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட போட்டியின் விளைவாக சுவீடனிலிருந்த ஐரோப்பாவின் இறுதி வர்த்த்க சேமாஃபோர் வரிசை 1880 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.
தந்தி மற்றும் தொலைபேசி
தொகுமின்சாரத்துடன் கூடிய தொலைத்தொடர்பு முறை மீதான பரிசோதனைகள் 1726 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தோல்வியடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்டன. அறிவியலாளர்களான பியர் சிமோன் இலப்லாசு, அம்பியர், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் ஆகியோர் இப்பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
நவீன தொலைத்தொடர்பு
தொகுஉலகளாவிய உபகரணங்கள் விற்பனை
தொகுகாட்னர் மற்றும் ஆர்ஸ் டெக்னிகாவால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் நுகர்வோரின் முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களின் விற்பனை மில்லியன் அலகுகளில்;
உபகரணம் / வருடம் | 1975 | 1980 | 1985 | 1990 | 1994 | 1996 | 1998 | 2000 | 2002 | 2004 | 2006 | 2008 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கணனிகள் | 0 | 1 | 8 | 20 | 40 | 75 | 100 | 135 | 130 | 175 | 230 | 280 |
செல்லிடத் தொலைபேசிகள் | கி/இ | கி/இ | கி/இ | கி/இ | கி/இ | கி/இ | 180 | 400 | 420 | 660 | 830 | 970 |
குறிப்பு: கி/இ என்பது கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிக்கின்றது.
தொலைபேசி
தொகுஅனலாக் தொலைபேசி வலையமைப்பில் அழைப்பவர் அழைப்பினை மேற்கொள்ள வேண்டிய நபரை தொலைபேசி பரிமாற்றங்களின் ஊடாக அடைகின்றார். இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் கண்டுபிடித்தார். இக்கருவி ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றிப் பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுவதன் மூலம் இயங்குகின்றது. இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வகையில் தொழில் நுட்ப வளரச்சி அடைந்துள்ளது.
எடுத்துக்காட்டுகள்
தொகுடிஜிட்டல் சனல் coding முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
தொலைத்தொடர்பு முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
- Semaphore
- தந்தி
- Radioteletype
- உலகத் தொலைபேசி வலையகம் (பொது Switched தொலைபேசி வலையகம் அல்லது PSTN எனவும் அழைக்கப்படுவதுண்டு)
- வானொலி
- தொலைக்காட்சி
- தொலைத்தொடர்புச் செய்மதிகள்
- ஈதர்நெட்
- இணையம்