அமர் குமார் பௌரி
அமர் குமார் பௌரி (Amar Kumar Bauri) (பிறப்பு :1978) ஒரு இந்திய அரசியல்வாதியும் சார்க்கண்டு சட்டமன்றத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான இவர் சார்க்கண்டு அமைச்சராக இருந்தார். முன்னதாக இவர் 2014 இல் சார்க்கண்டு சட்டப் பேரவைத் தேர்தல் வரை பாபுலால் மராண்டி தலைமையிலான சார்க்கண்டு விகாசு மோர்ச்சாவுடன் தொடர்புடையவர் ஆவார்.[1] போகாரோ மாவட்டத்தில் பட்டியலினத் தொகுதியான சந்தன்கியாரி தொகுதியில் சார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் 1978 இல் இராம் நாத் பௌரிக்கு மகனாகப் பிறந்தார். 1994 இல் சாம்செட்பூர் ஆர். டி. டாடா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன், 1997 இல் ஜாமஷெட்பூர் கூட்டுறவுக் கல்லூரியில் இன்டர், அதே சாம்செட்பூர் கூட்டுறவுக் கல்லூரியில் பட்டப்படிப்பு மற்றும் 2005 இல் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2008 இல் வினோபா பாவே பல்கலைக்கழகத்தில் ஹசாரிபாக் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியையும் முடித்தார்.