அமர் பூசண்
அமர் பூசண் (Amar Bhushan) எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய உளவுத்துறையில் பணியாற்றிய இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். மேலும் இவர் வெளிநாட்டு உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பில் 24 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2005ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெறும் வரை இந்திய அமைச்சரவை செயலகத்தில் சிறப்புச் செயலாளர் பதவி வகித்தார்.[1]
படைப்புகள்
தொகுவெளிநாட்டு உளவுப் பணிகள் குறித்து இவர் எழுதிய நூல்கள்[2]:
- The Zero-Cost Mission/The Wily Agent[3]
- Escape to Nowehere
- Inside Nepal/The Walk In and Terror in Islamabad.