அமர் மாணிக்கியா

திரிபுரா இராச்சியத்தின் அரசன்

அமர் மாணிக்கியா (Amar Manikya) 1577 முதல் 1586 வரை திரிபுரா இராச்சியத்தின் மாணிக்கிய வம்ச ஆட்சியாளராக இருந்தார்.

அமர் மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் அரசன்
ஆட்சிக்காலம்1577-1586
முன்னையவர்முதலாம் ஜாய் மாணிக்கியா
பின்னையவர்முதலாம் இராசதர் மாணிக்கியா
இறப்பு1586
குழந்தைகளின்
பெயர்கள்
  • ராஜ்தர்லப மாணிக்கியா
  • முதலாம் ராத் மாணிக்கியா
  • ஜுஜ்கர் சிங்
மரபுமாணிக்கிய வம்சம்
தந்தைதேவ மாணிக்கியா
மதம்இந்து சமயம்

வரலாறு

தொகு

அமர் தேவா என்ற பெயரில் இவர் மகாராஜா தேவ மாணிக்கியாவின் மகனாகப் பிறந்தார். ஆனால் மற்றொரு குடும்பம் அரியணையை கைப்பற்றியதால் இளவரசராகவே இருந்தார்.

திரிபுராவை மறைமுகமாக ஆண்டுவந்த தளபதி ரணகன் நாராயண், அமரின் மக்கள் செல்வாக்கை கண்டு பொறாமைப்பட்டார்.[1] நாராயண் இவரை ஒரு விருந்துக்கு அழைத்து இவரைக் கொல்ல திட்டமிட்டார். இருப்பினும், அமர் தப்பித்து தனது ஆதரவாளர்களைத் திரட்டி நாராயணனைக் கொன்றார். அபோது பெயருக்கு ஆட்சியிலிருந்த முதலாம் ஜாய் மாணிக்கியா, நாராயணின் மரணத்திற்கு விளக்கம் கேட்டபோது, அமர் ஜாய்க்கு எதிராக தனது படைகளை அனுப்பினார். படைகள் வருவதற்கு முன்பு ஜாய் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.[2] ஜாயின் மரணம் 1577 இல் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் சுமார் 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[3] அமர தேவன் பின்னர் அமர் மாணிக்கியா என்ற பெயரில் ஆட்சியைப் பிடித்தார். இதன் மூலம் அரியணையை அசல் ஆளும் வம்சத்திற்கு மீட்டெடுத்தார்.[1]

ஆட்சி

தொகு

அமர் மாணிக்கியா மத காரணங்களுக்காக தனது தலைநகரான உதய்ப்பூரில் தற்போது அமர் சாகர் என்று அழைக்கப்படும் ஒரு குளத்தை தோண்டிக் கொண்டிருந்தார். [4] இந்த பணிக்கு தொழிலாளர்களை வழங்கவும், திரிபுராவுக்கு அஞ்சலி செலுத்தவும் பல்வேறு தலைவர்களிடம் கோரினார்.[5][6] குறைந்தது 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட பரோ-புய்யன்கள் அனைத்து நன்கொடைகளை வழங்கியதாக திரிபுராவின் வரலாற்று நூலான ராஜ்மாலா எடுத்துக்காட்டுகிறது. தாராப்பின் ஜமீந்தாரான சையத் மூசா மட்டுமே தன்னை ஒரு சுதந்திரமான பகுதியாகக் கருதியதால் அத்தகைய கீழ்ப்படிதலை ஏற்க மறுத்த ஒரே ஆட்சியாளர்.[7] இது அமர் மாணிக்கியாவைக் கோபப்படுத்தியது. மேலும் 1581 இல் சுனருகாட் என்னுமிடத்தில் ஒரு போரைத் தொடங்கினார். இது அமரின் ஆட்சியின் முதல் இராணுவப் பயணமாக இருக்கலாம். இதில் அமர் வெற்றி பெற்றார்.[8] இராணுவம் சில்ஹெட் நோக்கி குத்ரைல், தினார்பூர் மற்றும் சுர்மா நதி வழியாகச் சென்றது.[9] அங்கு அவர்கள் தங்கள் யானைகளின் உதவியுடன் பதே கானை தோற்கடித்தனர். கான் கைப்பற்றப்பட்டு துலாலி மற்றும் இட்டா வழியாக உதய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.[10] வெற்றியைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்ட அமர் தன்னை "சில்ஹெட்டின் வெற்றியாளர்" என்று குறிப்பிடும் ஒரு நாணயத்தை கூட அச்சிட்டார். இந்த நாணயம் 20 ஆம் நூற்றாண்டில் வீர் விக்ரம் கிசோர் தெபர்மா மாணிக்ய பகதூர் வசம் இருந்தது.[11]

அரக்கானிய மன்னன் மின் பலாங் நவகாளி மற்றும் சிட்டகாங்கைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, படையெடுப்பாளர்களை விரட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமர் மாணிக்கியாவால் ஒரு பெரிய குழு அனுப்பப்பட்டது.[12] அரக்கானியர்கள் இராணுவத்தின் பலமான தாக்குதல் காரணமாக இவரது படைகள் பின்வாங்கியது. இதன் விளைவாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், சிட்டகொங்கை அடைந்ததும், இராணுவம் மறுசீரமைக்கப்பட்டு எதிர் தாக்குதலைத் தொடங்கியது. எதிரிகளின் ஏழு கோட்டைகளைக் கைப்பற்றி பின்வாங்கச் செய்தது. [13]

இறப்பு

தொகு

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, சிட்டகொங்கின் இரண்டாவது படையெடுப்பு மின் பாலாங் என்பவர் தலைமையில் தொடங்கப்பட்டது. போரில் அமரின் மகன் ஜுஜார் சிங் கொல்லப்பட்டார் . மேலும், மற்றொரு மகன் இராசதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நடந்த மோதலில் திரிபுரா இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. அரக்கானியர்கள் திரிபுராவையே ஆக்கிரமித்து, உதய்ப்பூர் வரை ஊடுருவி, அதை சூறையாடி கொள்ளையடித்தனர். இந்த அவமானத்தின் விளைவாக, அமர் மாணிக்கியா தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி உடன்கட்டை ஏறினார்.[14][15]இவருக்குப் பின் இவரது மகன் முதலாம் இராசதர் மாணிக்கியா பதவிக்கு வந்தார் .

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 (Sarma 1987, ப. 77)
  2. (Long 1850, ப. 547–48)
  3. Roychoudhury, Nalini Ranjan (1983). Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D. Sterling. p. 22.
  4. Saigal, Omesh (1978). "Rulers of Tripura". Tripura, Its History and Culture. p. 35.
  5. Bhattacharya, Apura Chandra (1930). Progressive Tripura. p. 23.
  6. Roychoudhury, Nalini Ranjan (1983). Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D. p. 22.
  7. Sarma, Ramani Mohan (1987). Political History of Tripura. Puthipatra. pp. 77–78. இணையக் கணினி நூலக மைய எண் 246861481.
  8. Sarma (1987). Political History of Tripura.
  9. Fazlur Rahman. Sileter Mati, Sileter Manush (in Bengali). MA Sattar. p. 49.
  10. Fazlur Rahman. Sileter Mati, Sileter Manush. p. 49.
  11. Bhattasali, NK (1929). "Bengal Chiefs' Struggle for Independence in the Reign of Akbar and Jahangir". Bengal: Past and Present: Journal of the Calcutta Historical Society 38: 41. https://archive.org/details/in.ernet.dli.2015.32676. 
  12. Khan (1999), ப. 23.
  13. Sarma ().
  14. Sarma (1987), ப. 82–84.
  15. Long (1850), ப. 550.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_மாணிக்கியா&oldid=3812498" இலிருந்து மீள்விக்கப்பட்டது