முதலாம் இராசதர் மாணிக்கியா

திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளார்

முதலாம் இராசதர் மாணிக்கியா (Rajdhar Manikya I) (இராஜதர மாணிக்கியா என்றும் உச்சரிக்கப்படுகிறது) 1586 முதல் 1600 வரை திரிபுரா இராச்சியத்தின் மாணிக்கிய வம்ச ஆட்சியாளராக இருந்தார். ஒரு போர் வீரனாக இருந்த இவர் தனது தந்தையின் ஆட்சியின் போது வித்தியாசமாகப் போராடி, அரியணை ஏறியவுடன், இதுபோன்ற விஷயங்களில் அதிக அக்கறை காட்டவில்லை. மாறாக மத விஷயங்களில் ஈடுபட்டார். திரிபுராவின் வீழ்ச்சி இவருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

முதலாம் இராசதர் மாணிக்கியா
முதலாம் இராசதர் மாணிக்கியா காலத்திய நாணயம் (1586-1599 கி.பி.).
திரிபுரா இராச்சியத்தின் அரசன்
ஆட்சிக்காலம்1586–1600
முன்னையவர்அமர் மாணிக்கியா
பின்னையவர்ஈசுவர் மாணிக்கியா
பிறப்புஇராசதர் நாராயணன்
இறப்பு1600
பட்டத்தரசிசத்யவதி[1]
குழந்தைகளின்
பெயர்கள்
மரபுமாணிக்கியா வம்சம்
தந்தைஅமர் மாணிக்கியா
மதம்இந்து சமயம்

வாரிசாக தொகு

நாராயணன் என்ற பெயரில் பிறந்த இவர், மகாராஜா அமர் மாணிக்கியாவின் இரண்டாவது மகனாவார். இவரது மூத்த சகோதரர் இராஜதுர்லபாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து, இராசதர் அவருக்குப் பதிலாக வெளிப்படையான வாரிசாக பெயரிடப்பட்டார். மேலும், இவருக்கு யுவராஜ் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[3]

இவரது இளைய சகோதரர்களான அமரதுர்லபா மற்றும் ஜுஜார் சிங் ஆகியோருடன், இராசதர் தனது தந்தையின் இராணுவப் போர்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.[4] 1581 ஆம் ஆண்டில், அமரின் ஆட்சியின் முதல் பயணத்தில், ராஜ்தர், தாராபின் கீழ்ப்படியாத ஜமீந்தாரான சையத் மூசாவுக்கு எதிராக அனுப்பப்பட்டார். மூசா சில்ஹெட்டின் ஆட்சியாளரான பதே கானிடம் தப்பிச் சென்றபோது, இராசதர் ஒரு வலிமையான இராணுவப் படையை அப்பகுதிக்கு அனுப்பினார். தொடர்ந்து நடந்த போரில் கான் தோற்கடிக்கப்பட்டு சையத் மூசா கைது செய்யப்பட்டார்.[5][6] ராஜ்தர் பதே கானை உதய்ப்பூருக்கு அழைத்துச் சென்றார்.[7] அங்கு அவர் மன்னனின் அதிகாரத்திற்கு அடிபணிந்தார்.[8]

அரக்கானிய மன்னர் மின் பலாங் நவகாளி மற்றும் சிட்டகொங்கைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இராசதர், ஒரு பெரிய படைக்கு தலைமை தாங்கி, எதிரிகளை விரட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றார். [9] அரக்கானிய மன்னன் மின் பலாங் நவகாளி மற்றும் சிட்டகாங்கைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, படையெடுப்பாளர்களை விரட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமர் மாணிக்கியாவால் ஒரு பெரிய குழு அனுப்பப்பட்டது.[10] அரக்கானியர்கள் இராணுவத்தின் பலமான தாக்குதல் காரணமாக இவரது படைகள் பின்வாங்கியது. இதன் விளைவாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், சிட்டகொங்கை அடைந்ததும், இராணுவம் மறுசீரமைக்கப்பட்டு எதிர் தாக்குதலைத் தொடங்கியது. எதிரிகளின் ஏழு கோட்டைகளைக் கைப்பற்றி பின்வாங்கச் செய்தது. [11]

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, சிட்டகொங்கின் இரண்டாவது படையெடுப்பு மின் பாலாங் என்பவர் தலைமையில் தொடங்கப்பட்டது. போரில் அமரின் மகன் ஜுஜார் சிங் கொல்லப்பட்டார் . மேலும், இராசதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நடந்த மோதலில் திரிபுரா இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. அரக்கானியர்கள் திரிபுராவையே ஆக்கிரமித்து, உதய்ப்பூர் வரை ஊடுருவி, அதை சூறையாடி கொள்ளையடித்தனர். இந்த அவமானத்தின் விளைவாக, இவரது தந்தை அமர் மாணிக்கியா தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி உடன்கட்டை ஏறினார்.[12][13]இவருக்குப் பின் முதலாம் இராசதர் மாணிக்கியா பதவிக்கு வந்தார்.[12][13]

ஆட்சி தொகு

அரக்கானியர்கள் கொள்ளையடித்து சென்ற பிறகு தலைநகர் கைவிட்டப்பட்ட நிலையில், இராசதர் திரும்பி வந்து தனது தந்தையின் அரியணையைக் கைப்பற்றி, "மாணிக்கியா" என்ற பாரம்பரிய அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார். இவரது ஆட்சி [14] 1586இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

இராசதர் தன்னை ஆன்மிக ஆட்சியாளராக நிரூபித்தார். [15] போர்க்களத்தைத் தவிர்த்தல் மற்றும் தனது ராச்சியத்தின் நிர்வாகத்தில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்தார். அதற்குப் பதிலாக மத விஷயங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். வைணவம் இவரது ஆட்சியின் கீழ் திரிபுரா முழுவதும் கணிசமாக பரவியது. உதய்ப்பூரில் விஷ்ணுவிற்கு ஒரு கோவில் கட்டப்பட்டது . எட்டு பிராமணர்கள் கோயிலில் பக்தி பாடல்களை பாடுவதற்கு பணியமர்த்தப்பட்டனர்.[16][17] கோயிலில் பூந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. மகாராஜா தினமும் அதைப் பார்வையிட்டார். இராசதர் பிராமணர்கள் மீதான மிகுந்த மரியாதைக்காகவும் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்பட்டார். இவரது அரசவையில் 200 பேருடன் மத விவாதங்களில் பங்கேற்றார். தனது பிரபுக்களின் எதிர்ப்பையும் மீறி பிராமணர்களுக்கு கணிசமான அளவு நிலங்களை விநியோகித்தார்.[18]

இந்த நேரத்தில் வங்காளத்தின் ஆட்சியாளர் திரிபுரா மீது படையெடுத்தது இராசதரின் பக்தியின் காரணமாக இருக்கலாம். ஆனால் நடைமுறைக் காரணம் ராச்சியத்தின் யானைகளை அணுகுவதற்கான வாய்ப்பாக இருந்தது. இந்தப் போரி இறுதியில் தோல்வியடைந்தது. எதிரியின் தாக்குதல் மூத்த தளபதி சந்திரதர்பா-நாராயணனால் முறியடிக்கப்பட்டது. படையெடுப்பாளரின் உண்மையான அடையாளம் நிச்சயமற்றது. இருப்பினும் பெரும்பாலும் இப்பகுதியின் முகலாய ஆளுநரான மான் சிங் என அடையாளம் காணப்படுகிறார்.[19]

இறப்பு தொகு

கோமதி நதிக்கரையில் நடந்து கொண்டிருந்த இராசதர், தியானத்தில் இருந்தபோது, விஷ்ணுவின் சிலையை கழுவிய ஆற்று நீரில் மூழ்கி, இறந்து போனார்.[20] இவரது மரணம் 1600 இல் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.[21]

திரிபுராவின் வரலாற்று நூலான ராஜ்மாலாவில் இவர் ஒரு கருணையுள்ள மன்னராகவும், அன்பான மற்றும் மத எண்ணம் கொண்டவராகவும், பிராமணர்கள் மற்றும் தனது குடிமக்களுக்குத் தொண்டு புரிபவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[21] இருப்பினும், இவரது ராச்சியத்தை நடத்துவதில் இவர் ஒதுங்கியதன் மூலம் திரிபுராவின் வீழ்ச்சி தொடங்கியது. அரச அதிகாரம் குறைந்து போனது. இழந்த பிரதேசம் மீண்டும் பெறப்படவில்லை, இராணுவத்தின் மன உறுதியும் குறைக்கப்பட்டது. இது இவரது மகன் யசோதர் மாணிக்கியாவின் ஆட்சியின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது. அவர் இறுதியில் வெளிப்புற ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு பலியானார்.[22][16][23]

இராசதருக்குப் பிறகு ஈசுவர் மாணிக்கியா பதவிக்கு வந்தார். இராசதருடனான இவவருடைய தொடர்பு நிச்சயமற்றது. [24]

சான்றுகள் தொகு

  1. Majumdar (1974), ப. 361.
  2. Sarma (1987), ப. 90.
  3. Bhattacharyya (1986).
  4. Sarma (1987), ப. 86.
  5. Sarma (1987), ப. 77–78.
  6. Sarma (1978), ப. 12.
  7. Bhattasali (1928), ப. 42.
  8. Sarma (1987), ப. 78.
  9. Khan (), ப. 23.
  10. Khan (1999), ப. 23.
  11. Sarma ().
  12. 12.0 12.1 Sarma (1987), ப. 82–84.
  13. 13.0 13.1 Long (1850), ப. 550.
  14. Sarma (1987).
  15. Chib (1988), ப. 10.
  16. 16.0 16.1 Das (1997), ப. 16.
  17. Roychoudhury (1983), ப. 23.
  18. Sarma (1987), ப. 88.
  19. Sarma (), ப. 87–88.
  20. Long (1850), ப. 551.
  21. 21.0 21.1 Sarma (1987), ப. 87.
  22. Majumdar (1948), ப. 243.
  23. Khan (1977), ப. 38.
  24. Roychoudhury (1983).

உசாத்துணை தொகு