அமஸ்ய மாகாணம்

அமஸ்யா மாகாணம் (Amasya Province, துருக்கியம்: Amasya ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இது நாட்டின் வடக்கே கருங்கடல் பிராந்தியத்தில் யேசில் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ளது.

அமஸ்ய மாகாணம்
Amasya ili
துருக்கியில் அமஸ்ய மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் அமஸ்ய மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமேற்குக் கருங்கடல்
துணைப் பகுதிசாம்சூன்
அரசு
 • தேர்தல் மாவட்டம்அமஸ்ய
 • ஆளுநர்முஸ்தபா மசாட்லே
பரப்பளவு
 • மொத்தம்5,520 km2 (2,130 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்3,37,508
 • அடர்த்தி61/km2 (160/sq mi)
இடக் குறியீடு0358
வாகனப் பதிவு05

இதன் மாகாணத் தலைநகரம் அமஸ்யா நகராகும். பேரரசர் அலெக்சாந்தர் காலத்திய ஆவணங்களில் பழங்கால அமேசியா குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புவியியலாளரும், வரலாற்றாசிரியருமான இசுட்ராபோவின் பிறப்பிடமும் இது ஆகும். உதுமானியப் பேர்ரசு காலத்தில், அமஸ்யா அதன் மதராசாக்களுக்காக நன்கு அறியப்பட்டிருந்தது.

நிலவியல்

தொகு

கருங்கடலுக்கும் உள் அனதோலியாவிற்கும் இடையில் உள்ள அமஸ்யா, யெசிலர்மக், செகெரெக், டெர்சகன் போன்ற ஆறுகள் பாயும் வளமான சமவெளிகளின் மையத்தில் அமைந்துள்ளது. கருங்கடலுக்கு அருகில் இருந்தபோதிலும் அமாஸ்யாவில் வெப்பமான கோடை மற்றும் மிதமான குளிர்காலம் உள்ளது. அமஸ்யா வேளாண்மையை முதன்மையாக கொண்ட மாகாணமாகும், இது நாட்டில் நன்கு ஆப்பிள் விளையும் மாகாணம். மேலும் புகையிலை, பீச், செர்ரி, ஓக்ரா ஆகியவற்றை விளைகிறது. [2]

மாவட்டங்கள்

தொகு

அமஸ்யா மாகாணம் ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (மாவட்டத் தலைநகர் தடிமனாக குறிப்பிடபடுள்ளது):

  • அமஸ்யா
  • கெய்னசெக்
  • ஜிமியாக்கரி
  • ஹமாமா
  • மெர்சிஃபோன்
  • சுலுவா
  • டகோவா

குறிப்புகள்

தொகு
  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. "Amasya". Archived from the original on 2012-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமஸ்ய_மாகாணம்&oldid=3070453" இலிருந்து மீள்விக்கப்பட்டது