அமா துமா

அமா துமா (Hama Tuma 1949) என்பவர் எத்தியோப்பியாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். [1] அம்காரியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி வருகிறார்.

அமா துமா அட்டிசு அபாபாவில் பிறந்தார். அட்டிசு அபாபா பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தார். சனநாயகம், நீதி, நியாயம் ஆகியவற்றுக்காக எழுதி வருகிறார். இதன் காரணமாக எத்தியோப்பிய அரசுகள் இவரைத் தடை செய்தன. இவருடைய எழுத்துப் படைப்புகள் ஆங்கிலம் இத்தாலி பிரெஞ்சு ஈப்ரு போன்ற மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. அமா துமா பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். தற்சமயம் தம் மனைவியுடனும் மகளுடனும் பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.

சான்றாவணம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமா_துமா&oldid=2693235" இருந்து மீள்விக்கப்பட்டது