அமினா தில்பாசி
அமினா பாஷா கிசி தில்பாசி ( Amina Pasha qizi Dilbazi) (பிறப்பு: 1919 திசம்பர் 26 - இறப்பு: 2010 ஏப்ரல் 30) இவர் ஓர் அசர்பைஜான் நாட்டுப்புற நடனக் கலைஞராவார்.
சுயசரிதை
தொகுஇளமைப்பருவம்
தொகுகவிஞர் மிர்வாரித் தில்பாசியின் உறவினர் ஆன, அமினா தில்பாசி கசாக் அருகே ஒரு கிராமப்புற சமூகத்தில் பிறந்தார். ஆனால் பக்கூவில் வளர்ந்தார். அங்கு இவரது மூத்த சகோதரர் இறந்த பிறகு இவரின் குடும்பம் குடியேறியது. இருந்த போதிலும், தில்பாசி அசேரி மொழியை இவரது வாழ்நாள் முழுவதும் ஒரு தனித்துவமான கசாக் பாணியில் மெதுவாக இழுத்து இழுத்துப் பேசிக் கொண்டிருந்தார். [1] 10 வயதில், கடுமையான அடிநா அழற்சியால் பாதிக்கப்பட்ட பின்னர், இளம் வயதான அமீனாவுக்கு பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக இவர் நீண்டகால சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
16 வயதில், இவர் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை உடற்பயிற்சியாளராக இருந்தார். அந்த நேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட அஜர்பைஜான் மாநில நாட்டுப்புற பாடல் மற்றும் நடனக் குழுவில் சேர போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவரது நடன பயிற்றுவிப்பாளர் பாலே ஆசிரியர் இலியா அர்படோவ் என்பராவார். [2] வெறும் மூன்று ஆண்டுகளில், தில்பாசி அந்தக் குழுவின் உதவி பாலே ஆசிரியராக ஆனார். [3]
நாட்டுப்புற நடன நிகழ்ச்சி
தொகுபொதுவுடமைக் கட்சித் தலைவர் மிர் ஜாபர் பாகிரோவ் உட்பட அசர்பைஜானின் ஆளும் உயரடுக்கு அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் துராஜி நாட்டுப்புற நடனத்தை தில்பாசி நிகழ்த்தியபோது இவரது தொழில் வாழ்க்கையின் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. நிகழ்ச்சி ஒன்றின் போது தில்பாசி தனது முழங்காலில் பலத்த காயம் அடைந்தார். மேலும் நடனத்தில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் இவர் இந்த உண்மையை மறைத்து, தனது கால் துண்டிக்கப்படவிருந்த அபாயத்தில் ஒரு வெற்றிகரமான நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிந்த உடனேயே தில்பாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்றார். இந்த ஆபத்தான நிகழ்ச்சியைப் பற்றி நியாசி 1984 இல் தனது மரணப் படுக்கையில் மட்டுமே வெளிபடுத்தி, பின்னர் வருத்தப்பட்டார். [3] துராஜி நடனவகை, தில்பாசியின் விருப்பமான நடனமாக இருந்தது. [4]
நடன ஆசிரியர்
தொகுஒரு பாலே ஆசிரியராக, இவர் தாரகாமா, மிர்சாய் மற்றும் நாஸ் எலமா போன்ற மிகவும் பிரபலமான இன்னாபி பல நாட்டுப்புற நடனங்களை நிகழ்த்தினார். 1949 ஆம் ஆண்டில், பக்கூ நடனப்பள்ளியில் நடனப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். அடுத்த தசாப்தங்களில், 1956 ஆம் ஆண்டின் திரைப்படமான இஃப் நாட் தட் ஒன், தேன் திஸ் ஒன் உட்பட பல அசர்பைஜான் இசைக்கலைஞர்களுக்கான நடன இயக்குனராக இருந்தார். அதில் ஒரு காட்சியில் தில்பாசி நடனத்தை நிகழ்த்தினார்.
மேற்கொண்ட பணிகள்
தொகு1959 ஆம் ஆண்டில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அமினா தில்பாசி அசர்பைஜானின் 'மக்கள் கலைஞர்' என்ற பட்டத்துடன் அங்கீகரிக்கப்பட்டார். நடனக் கலைஞராக ஓய்வு பெற்ற பிறகு, நடனப் பயிற்றுவிப்பாளராகவும், பல நடனக் குழுக்களின் கலை இயக்குநராகவும் தனது பணியைத் தொடர்ந்தார். [5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1940 களின் முற்பகுதியில், தனது கிரோவாபாத் (கஞ்சா நகரச்) நகர சுற்றுப்பயணத்தின் போது, அமினா தில்பாசி தன்னைவிட மூன்று ஆண்டுகள் இளையவராக இருந்த பிக்ரத் அமிரோவை சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் தில்பாசி அவர்களின் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள முடிவு செய்தார். அந்த நேரத்தில் மற்றொரு இளம் இசையமைப்பாளரும் இவரது கலை இயக்குநருமான ஜோவ்தத் காஜியேவ் மீது உணர்வுகளை வளர்த்துக் கொண்டார். காஜியேவ் மற்றும் தில்பாசி ஆகியோர் இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு முன்னர் தங்கள் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக (2002 இல் ஹாஜியேவ் இறக்கும் வரை) மகிழ்ச்சியுடன் இருந்தனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். இவர்களது மூத்த மகன் இஸ்மாயில் காஜியேவ் கனடிய பட்டுப்பாதை இசைக்குழுவின் நடத்துனராவார்.
இறப்பு
தொகு2010 மார்ச் அன்று அமினா தில்பாசி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Karim Karimli, Azer Allahveranov. Əminə Dilbazi – Azərbaycan rəqs sənətinin şah əsəri பரணிடப்பட்டது செப்டெம்பர் 17, 2010 at the வந்தவழி இயந்திரம். 525-ci qazet. 26 December 2009.
- ↑ Bu gün Əminə Dilbazi ilə vida mərasimidir பரணிடப்பட்டது அக்டோபர் 8, 2011 at the வந்தவழி இயந்திரம். Ayna. 1 May 2010.
- ↑ 3.0 3.1 Vugar Imanov. Памяти Великой танцовщицы!. Trend.az. 1 May 2010.
- ↑ Əminə Dilbazi: «Bəlkə məni ölmüş bilirlər?!» பரணிடப்பட்டது சூன் 12, 2010 at the வந்தவழி இயந்திரம். Milli.az. 30 April 2010.
- ↑ Азербайджанская культура понесла тяжелую утрату. Bakinsky Rabochy. 1 May 2010.
- ↑ Əfsanəvi rəqqasə Əminə Dilbazi vəfat etdi பரணிடப்பட்டது மே 3, 2010 at the வந்தவழி இயந்திரம். Milli.az. 30 April 2010.
மேலும் காண்க
தொகு- List of People's Artists of the Azerbaijan SSR