அடிநா அழற்சி

அடிநாச் சதை அழற்சி, தொண்டைச் சதை அழற்சி

அடிநா அழற்சி (tonsillitis) என்பது தொண்டைக்கு மேல் அடிநாச் சதைகளில் ஏற்படும் ஒரு நோய்த்தாக்கமாகும். இத்தாக்கம் முனைப்பானதாகவோ நாட்பட்டதாகவோ அமையலாம்.[8][9][2] முனைவான அடிநா அழற்சி வேகமாக வரும்.[10] அது அடிக்கடி தொண்டைப் புண், காய்ச்சல், அடிநாத் தடிப்பு, விழுங்குவதில் சிக்கல், கழுத்து சுற்றியுள்ள நிணநீர்க்கணுத் தடித்தல் பொன்றவற்றை ஏற்படுத்தும். [1][2] ஏற்படும் சிக்கலாக, வயிற்றறைச் சீழ்க்கட்டி ஏற்படலாம்.[1][3]

அடிநா அழற்சி
tonsillitis
மஞ்சட் கசிவுள்ள தொண்டைப் பின்புறத்தில் பெரிய நிணநீர்த் திசுக்களின் இணைகள்
16 அகவையினர் ஒருவரின் அடிநா அழற்சிக் கசிவுடன் தொண்டை அழற்சி சதைக் காட்சி
பலுக்கல்
சிறப்புதொற்றுநோய்ப் புலம்
அறிகுறிகள்கழுத்தைச் சுற்றிலும் தொண்டைக் கரகரப்பு, காய்ச்சல், வீங்கிய நிணநீர்த்திசு இணைகள், விழுங்கற் சிக்கல், வீங்கிய நிணநீர்க் கணுக்கள்[1][2]
சிக்கல்கள்தொண்டைச் சதைச் சீழ்க்கட்டி[1][3]
கால அளவு~ 1 வாரம்[4]
காரணங்கள்நச்சுயியிரித் தொற்று, நுண்ணுயிரித் தொற்று[1][5][6]
நோயறிதல்அறிகுறி சார்ந்து, தொண்டைச் சளி எடுத்தல், விரைந்த சங்கிலி நுண்ணுயிரித் தொற்று ஓர்வு[1][5]
மருந்துபாராசிட்டாமுல் (அசெட்டாமினொஃபென்), இபுபுரோஃபென், பென்சிலின்[1][5]
நிகழும் வீதம்7.5% ( ஏதாவதொரு மும்மாதத்தில்)[7]
அடிநா அழற்சி
வீங்கிய, சிவப்புத் தொண்டைச் சதைகள், வெண்கசிவுத் திட்டுகளுடன்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகுடும்ப மருத்துவர், infectious diseases, otolaryngology
ஐ.சி.டி.-10J03., J35.0
ஐ.சி.டி.-9463
நோய்களின் தரவுத்தளம்13165
பேசியண்ட் ஐ.இஅடிநா அழற்சி
ம.பா.தD014069

அடிநா அழற்சி வழக்கமாக, பேரளவில் நச்சுயிரித் தொற்றாலேயே ஏற்படுகிறது; குச்சுயிரித்(நுண்ணுயியிரித்) தொற்றும் 5% முதல் 40% அளவுக்கு அடிநா அழற்சி நேர்வுகளை உருவாக்குகிறது.[1][5][6] ஏ வகை சங்கிலி நுண்னுயிரியால் ஏற்படும் நோய் சங்கிலி நுண்ணுயிரி அடிநா அழற்சி எனப்படும்.[11] இது தொண்டைக் குச்சுயிரித் தொற்று எனவும் அழைக்கப்படும்.[12] அரிதாக, நைசீரியா வெட்டைநோய், கோரின்குச்சுயிரி தொண்டை அடைப்பான், அல்லது குருதிக் குச்சுயிரிக் குளிர்காய்ச்சல் வகைநுண்ணுயிரிகளும் இந்நோய்க்குக் கரணமாகலாம்.[5] இந்தத் தொற்று மக்களிடையே வழமையாக காற்று ஊடாகவே பரவுகிறது.[6] சென்ட்டார் மதிப்பெண் முறை தனியான காரணங்களைப் பிரித்துணர வழிவகுக்கும்.[1][5] இதை தொண்டைப்பத வளர்ச்சி ஓர்வாலோ விரைந்த ஏ வகைச் சங்கிலி நுண்ணுயிரி ஓர்வாலோ உறுதிப்படுத்தலாம்.[1][5]

நோய் அறிகுறிகளையும் நோய்ச்சிக்கல்களையும் குறைக்கவும் மருத்துவம் செய்யப்படுகிறது.[5] வலியைக் குறைக்க பாராசிட்டாமுல்(அசெட்டாமினோஃபென்), இபுப்புரோஃபென் மருந்துகளைப் பயன்படுத்தலாம்.[1][5] தொண்டை கரகரப்புடனுள்ள அழற்சிக்கு வாய்வழி பெனிசிலின் உட்கொள்ளல் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[1][5] பெனிசிலின் ஒவ்வாமை உள்ளவருக்கு, செஃபலோபோரின்களையோ மேக்கிரோலைடுகளையோ பயன்படுத்தலாம்.[1][5] சிறுவர்களில் அடிக்கடி அடிநா அழற்சி ஏற்படுகையில் அடிநாச் சதை நீக்க அறுவை ஓரளவு எதிர்கால நோய்ப்பீடிப்பு வாய்ப்பைக் குறைக்கிறது.[13]

ஆண்டின் ஏதாவதொரு பருவத்தில்(மும்மாதத்தில்) ஏரக்குறைய 7.5% பேருக்கு தொண்டைக் கரகரப்பு ஏற்படுகிறது. இவர்களில் 2% பேர் அடிநா அழற்சிக்காக மருத்துவரை ஒவ்வோராண்டும் செல்கின்றனர்.[7] இது பள்ளிச் சிறாருக்குக் குளிர்பருவத்தின் மிகக் குளிர்ந்த மாதங்களில் ஏற்படுகிறது.[5][6] The majority of people recover with or without medication.[1][5] பொதுவாக ஒரு வாரத்துக்குள் அறிகுறிகள் 82% பேருக்கு மறைந்துவிடுகிறது. நோய்த்தொற்று நச்சுயிரிவகையாகவோ குச்சுயிரிவகையாகவோ இருக்கலாம்.[4] உயிர்க்கொல்லி மருந்துகள் தொண்டைக் கரகரப்பையும் தலைவலியையும் குறைக்கின்றன[ ஆனால், அறிகுறிகளின் குறைதலுக்கும் உயிர்க்கொல்லிகளின் இடர்தரு வல்லமைக்கும் இடையில் உள்ள சமனிலையைக் கவனிக்க வேண்டும்.[4]

வகைகள்

தொகு

இரு வகையான அடிநா அழற்சிகள் இருக்கின்றன: அவை கடும் நா அழற்சி, நாட்பட்ட நா அழற்சி என்பனவாகும். கடும் அடிநா அழற்சி நச்சுயிரிகளால் (தீ நுண்மங்களால்) தோன்றுகின்றன. குறைந்த கடுமை குறைந்த அடிநா அழற்சி ஆக்டினோமைசெசு தொற்றால் ஏற்படுகிறது. நாட்பட்ட அடிநா அழற்சிக்கு மருத்துவம் ஏதும் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் நீண்ட காலத்துக்கு அது நீடித்திருக்கும், ஆடிநா அழற்சிகள் பெரும்பாலும் பெரும்பாலும் நுண்ணுயிரி (குச்சுயிரி) சார்ந்த தொற்றால் ஏற்படுகின்றன.

நோய்க்குறிகளும் அறிகுறிகளும்

தொகு
 
இயல்பு அடிநா உடற்கூறும் அடிநா அழற்சி நிலையும்


அடிநா அழற்சியின் நோய் அறிகுறிகளில் கடும் தொண்டைப் புண் (காதுவலி ஏற்படலாம்), விழுங்குதல் நிகழ்வில் வலி, இருமல், தலைவலி, தசைபிடிப்பு நோய் (தசை வலிகள்), காய்ச்சல், குளிர்நடுக்கம் ஆகியன உள்ளடங்கும்..[1][14][15].அடிநா அழற்சி சிவந்த, வீங்கிய அடிநாச் சதையால் அறியப்படுகிறது, அதில் சீழ்க்குரிய கசிவு வெள்ளைத் திட்டுகளின் மேற்பூச்சாகக் காணப்படும் (அதாவது சீழ்ப்பூச்சு அமையும்). கண்கள், முகம், கழுத்தில் வீக்கங்கள் ஏற்படலாம்.[1][15][16]]]

சில நிலைமைகளில் அடிநா அழற்சியின் நோய் அறிகுறிகள், பேச்சு வழக்கில் இது மானோ (அமெரிக்கா) அல்லது நாளக் காய்ச்சல் (மற்ற இடங்களில்) என்றழைக்கப்படும் தொற்று ஒற்றைக் கலக்கரு அழற்சி(மானோநியூக்ளியோசிஸ்) நோய் அறிகுறிகளுடன் குழப்பிக்கொள்ளப்படும். சுரப்பிக்குரிய காய்ச்சலுக்கான பொதுவான நோய் அறிகுறிகளில் அடங்குபவை பசியின்மை, மண்ணீரல் பருத்தல், நிணநீர் கணுக்கள் தடித்தல், கடும் தொண்டைப் புண், சிலநேரங்களில் சீழ்க் கசிவின் திட்டுகள் ஆகியன உடனிருக்கும்..[1][15].[17] அடிநா அழற்சியை உருவாக்கும் குச்சுயிரித் (நுண்ணுயிரித்) தொற்றுகள் காய்ச்சலும் தடிப்பும், வாந்தி, அடிநாச் செம்பொட்டுகள், சீழ் ஆகியவற்றை உருவாக்கும்.[1][18]

அடிநா அழற்சியை உருவாக்கும் பல நச்சுயிரித் தொற்றுகள்l இருமல் தொடர்மூக்கொழுகல், கரகரத்த குரல் அல்லது வாய், தொண்டை வெடிப்புகளை உருவாக்குகின்றன.[18]

கடும் அடிநா அழற்சி நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் இரண்டினாலும் ஏற்படுகிறது, மேலும் அது விழுங்கும்போது காது வலி, தீ நாற்றம், ஒழுகற் தொண்டைப் புண், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இந்த நிலையில் அடிநாச் சதையின் மேற்புறம் நல்ல சிவப்பு நிறமாக இருக்கும் அல்லது சாம்பல்நிற வெள்ளை மேற்பூச்சைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில கழுத்தில் இருக்கும் நிணநீர் கணுக்கள் வீக்கமடைந்திருக்கும். [19] கடுமையான அடிநா அழற்சியின் மிகப் பொதுவான வடிவமாக இருப்பது ஸ்ட்ரெப் தொண்டை, இதை தோல் வெடிப்பு, சளிக் காய்ச்சல், காது நோய்த்தாக்கம் போன்ற நோய்அறிகுறிகளால் அறியலாம். இந்தக் குறிப்பிட்ட அடிநா அழற்சி இடர்ப்பாட்டுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இதய வால்வுகள் மற்றும் சிறுநீரகங்கள் சேதமடையும் பாதிப்பினை ஏற்படுத்தும். நிணநீர் கணுக்கள், மூக்கு அடிச்சதை வளர்ச்சி பெரிதாவதுடன் இந்த நிலைமைகளில் உச்சநிலையிலான சோர்வு மற்றும் மனஉலைவும் கூட ஏற்படும்.

நாட்பட்ட அடிநா அழற்சி என்பது அடிநாச் சதையில் இருக்கும் ஒரு தொடர்நிலை நோய்த்தாக்கமாகும். இந்த நோய்த்தாக்கம் மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், அடிநாச் சதையில் சிறு பள்ளம் அல்லது குழி உண்டாகி அதில் நுண்ணுயிரித் தொற்று தங்கிவிடும். அடிக்கடி சிறிய தீநாற்றமுடைய கட்டிகள்இந்தச் சிறு பள்ளங்களில் காணப்படுகின்றன, இவை உயர் அளவிலான சல்ஃபாவால் உருவாக்கப்படுகிறது. இந்தக் கற்கள் முழுத் தொண்டை அல்லது தொண்டையின் பின்புறத்தில் ஏதோவொன்று சிக்கிக்கொண்ட அறிகுறிகளை ஏற்படுத்தும். அழுகின முட்டையைப் போன்ற வாசனையுடைய (சல்ஃபா காரணமாக) அருவருப்பான மூச்சுயிர்ப்பு கூட இந்த நிலைமைக்கான ஒரு நோய் அறிகுறி. அடிநா அழற்சியின் காரணமாக அதனுடன் பொதுவாகத் தொடர்புடைய இதர நோய் அறிகுறிகளில் குறட்டைவிடுதலும் அமைதிகுலைந்த தூக்க முறைகளும் அடங்கும். அடிநாச் சதை பெரிதாகி தொண்டையின் இதரப் பகுதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தத் தொடங்கியதும் இந்த நிலைமைகள் உருவாகின்றன. இந்த வகையான நோய் காரணமாக ஒரு நபரின் குரல்வளம் பொதுவாக தாக்கமுறுகிறது, மேலும் ஒரு தனியரின் வழக்கமானக் கொண்டிருக்கும் குரல்பாங்கை மாற்றிவிடுகிறது. ஒருவருக்குத் தொண்டை கரகரப்பு மட்டுமே ஏற்படலாம், ஆனால் அடிநாச் சதையில் வீக்கம் இருக்கும்போது அல்லது வெப்பமூட்டத்துடன் இருக்கும்போது தொண்டை அதிகமாகக் பயன்படுத்தப்பட்டால் குரல்வளை அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அடிநா அழற்சியுடன் ஏற்படும் இதர பொதுவற்ற நோய் அறிகுறிகளில் வாந்தி, மலச்சிக்கல், மயிர் ஒட்டிக்கொண்டதாக அல்லது பஞ்சுபோன்று இருப்பதாக உணரும் நாக்கு, வாய் திறப்பதில் கடினம், தலைவலிகள், உலர்ந்த அல்லது பஞ்சடைத்த வாய் போன்ற உணர்வு ஆகியவை அடங்கும்.

அடிநா அழற்சி உருவாகும் தனியர்களில் 10% பேருக்கு அடிநா அழற்சிக் கட்டிகளும் உருவாகின்றன.

காரணங்கள்

தொகு
 
குச்சுயிரிகளும் நச்சுயிரிகளும் அடிநா அழற்சியை உருவாக்குகின்றன.

இயல்பான சூழ்நிலைகளின் கீழ், நச்சுயிரித் தொற்றுகள், நுண்ணுயிரித் தொற்றுகள் மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் நுழையும்போது அவை அடிநாச் சதையில் வடிகட்டப்படுகின்றன. அடிநாச் சதை அவற்றை குருதிஉவெள்ளை உயிர்க்கலங்கள் சூழ்ந்து தொற்றுகளை எதிர்த்து வேலை செய்கிறது; இது உடலில் காய்ச்சல் உருவாவதற்கான காரணமாக ஆகிவிடுகிறது; காய்ச்சல் சிறுவர்களிடத்தில் மிக அதிகமாக உயர்ந்துவிடக்கூடும். நோய்த்தாக்கத்தால், அடிநாச் சதை வெப்பமடைந்து அதிக நோவுடையாதாகிவிடும். இந்த நோய்த்தாக்கம் தொண்டை அதன் சுற்றுவட்டாரங்களில் கூட நிலைகொண்டு அடித்தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.[20] தொண்டையின் பின்புறத்தில் இருக்கும் இந்தப் பகுதிதான் குரல்களை அடிநாச் சதைக்கு இடையில் அடங்கியிருக்கிறது.

நச்சுயிரித் தொற்றுகளே40 முதல் 60% வரையிலான அடிநா அழற்சியை உருவாக்குகின்றன.[14] பல நச்சுயிரிகள் அடிநா அழற்சியையும் சில ஏனைய தொண்டைப்பகுதி அழற்சியையும் உருவாக்குகின்றன. இவற்றில் அடினோ நச்சுயிரி, இரீனொ நச்சுயிரி, , கரோனா நச்சுயிரி, இன்ஃப்ளுவென்சா நச்சுயிரி, இணை இன்ஃப்ளுவென்சா நச்சுயிரி, இடுப்புவீக்க நச்சுயிரி, சின்னம்மை நச்சுயிரி, எப்சுட்டைன் பார் நச்சுயிரி, உயிர்க்கல வீக்க நச்சுயிரி, மூச்சுயிர்ப்பு சிங்சியல் நச்சுயிரி, சிற்றக்கி நச்சுயிரி ஆகியன அடங்கும். மாந்த ஏம நச்சுயிரித் தொற்றுக்கான தொடக்கநிலை துலங்கலாகக் கூட அடிநா அழற்சி தோன்றலாம்.எப்சுட்டைன் பார் நச்சுயிரி 1 முதல் 10% வரையிலான அடிநா அழற்சியை உருவாக்குகிறது.[15]

அடிநா அழற்சி குச்சுயிரிகளாலும் ஏற்படலாம். குறிப்பாக, ஏ வகை பீட்டாக் க்ருதிச்சிதைவுச் சங்கிலிவகை நுண்ணுயிரிகளால் தொண்டைத் தொற்ரு உருவாகலாம்.[1][14] அடிநா அழற்சி நுண்ணுயிரிகளால் தொடக்கநிலை நச்சுயிரித் தொற்று உள்ளபோது உருவாகிறது.[15] சங்கிலிவகை நுண்ணுயிர்க்கொல்லி மருத்துவத்துக்குப் பிறகு, அடிநா அழற்சி மீண்டால், இது அதே சங்கிலிவகை நுண்ணுயிரியாலேயே ஏற்படும்; இது மருத்துவம் போதுமானதாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.[1][21] அரிதாகவே அமையும் சில வழக்கமான நுண்ணுயிரித் தொற்றுகளாக, சங்கிலி நுண்ணுயிரிக் குளிர்க்காய்ச்சல்]', பூஞ்சைக் கணியக் குளிர்க்காய்ச்சல், கிளாமிடியா குளிர்க்காய்ச்சல், போர்டெடெல்லா கக்குவான், ஊசியுரு நுண்ணுயிரித் தொற்று சிவ., கோர்னி நுண்ணுயிரித் தொண்டை அடைப்பான், திருகுநூல் தொற்ரு நோய்(கிரந்தி நோய்), நைசீரியா வெப்புநோய் ஆகியன ஏற்படலாம்.[22][23][24][25]

உயிரகவெறுப்பு நுண்ணுயிரிகள் அடிநா அழற்சியின் கடுமையைத் தூண்டுவதில் பங்கேற் பதாக பல மருத்துவமனை ஆய்வுகள் அறிவித்துள்ளன.[26]

சிலவகை அடிநா அழற்சி சுருள்நுண்ணுயிரிகளாலும் திருகுநூற் குச்சுயிரிகளாலும் அடிநா அழற்சி உருவாகலாம். இவை வின்செட் தொண்டை அடைப்பு அல்லது பிளவுட்-வின்சென்ட் நெஞ்சுவலி எனப்படுகின்றன.[27]

அடிநாச் சதைக் குருதி வெள்ளுயிர்க்கலங்களின் எதிர்ப்பாற்றல் ஏ2 வகை பாசுப்போ கொழுப்புச் சிதைப்பு நொதி போன்ற உயிர்க்கல இயக்கிகளை உருவாக்கி நச்சுயிரிகளையும் நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றன.[28] இதனாலும் காய்ச்சல் ஏற்படும்.[29][30] இத்தொற்று தொண்டையிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலும் இருப்பதோடு அழற்சி குரல்வளைக்கும் பரவும்.[1][31]

நோயறியும் முறைகள்

தொகு

அடிநா அழற்சிக்கும் தொண்டைக்குழியிலும் அதற்கு அருகாமையிலும் ஏற்படும் தொற்றுகள் உருவாக்கும் அழற்சிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடேதும் அமைவதில்லை.[1][32]மெனவே, கடும் கரகரப்புள்ள தொண்டை நோயை அடிநா அழற்சி, தொண்டைக்குழி அழற்சி, அல்லது அடிநா- தொண்டை அழற்சி ( அல்லது தொண்டை, அடிநா அழற்சி என) மருத்துவ நோய்நாடல் சார்ந்து பலஆறு அழைக்கலாம்.[1]

 
தொண்டைத் திசு எடுத்தல்.

முதனிலைக் கவனிப்பு மருத்துவ நிலையங்களில், கடும் அடிநா அழற்சியின் ஏ வகைமைப் பீட்டா குருதிச் சிதைவு சங்கிலி குச்சுயிரித்(நுண்ணுயிரித்) (GABHS) தொற்றுப் பரவலைத் தீர்மானிக்கவும் நோயாற்றுகையில் தகுந்த உயிர்க்கொல்லி மருந்துகளைத் தேர்ந்தெடுக்கவும் சென்ட்டார் வரன்முறை பயன்படுத்தப்படுகிறது.[1][15] அகவை முதிர்ந்தவருக்கான துல்லியமான நோய்நாடலை மேற்கொள்வதில் சென்ட்டார் வரன்முறை வலுவீனங்களைக் கொண்டுள்ளது. மேலும், சிறுவருக்கும்ஈரன்டாம் நிலைக் கவனிப்பு மருத்துவ நிலையங்களிலும் அடிநா அழற்சியின் நோய்நாடலில் சென்ட்டார் வரன்முறை விளைவற்றதாகவே அமைகிறது.[15] எனவே, 1998 முறையைத் திருத்திய சென்ட்டார் வரன்முறை நோயறியப் பயன்படுத்தப்படுகிறது. முதல் சென்ட்டர் முரையில் நான்கு முதன்மையான வரன்முறைகள் அமைய, திருத்திய சென்ட்டார் முறையில் ஐந்து வரன்முறைகல் அமைகின்றன. அவை பின்வருமாறு :

  1. அடிநாச் சதைக் கசிவு இருத்தல்
  2. வலியுள்ள கழுத்து நிணநீர்க்கணுக்கள்
  3. காய்ச்சல் வரலாறு
  4. 5 முதல் 15 இடையிலான அகவை
  5. இருமல் இல்லாமை

ஏ வகைப் பீட்டா சங்லிலிக் குச்சுயிரித்(GABHS) தொற்றுவழி ஏற்படும் அடிநா அழற்சி நோயறிய தொண்டைப்பதம் எடுத்து அதை குருதி அகார் ஊடகத்தில் இட்டு ஆய்வு செய்து உறுதிப்படுத்தலாம். ஓர்வுகளின் தன்னியபுகளாலும் உயிரிக்கொல்லி மருந்து ஓர்வுக்கு முன் உட்கொண்டிருந்தாலும் ஆய்வு முடிவுகள் சற்றே எதிர்மறையாக அமைய வாய்ப்புள்ளது. நோயின் அடையாளத்தை உறுதி 24 முதல் 48 மணி நேரப் பத ஆய்வு தேவை. 10 முதல் 60 மணித்துளி விரைவு சலிப்பு ஓர்வுகளும் உள்ளன. அவற்றின் அறிதிறம் 85–90% ஆக அமைகிறது. அறிகுறிகளே இல்லாத 40% அளவு பேருக்கு தொண்டைப்பத ஆய்வு நோயுள்ளதாக காட்டுகிறது. எனவே, மருத்துமனை நடைமுறையில் வழக்கமாக தொண்டைப்பத ஆய்வு ஏ வகைப் பீட்டா சங்லிலிக் குச்சுயிரித்(GABHS) தொற்றை அறிய பயன்படுத்துவதில்லை.[15]

ஏ வகைப் பீட்டா சங்லிலிக் குச்சுயிரித்(GABHS) தொற்றுவழி ஏற்படும் அடிநா அழற்சி நோயறியும் விரைந்த சலித்தல் ஓர்வுகளின் தொண்டைப்பத முடிவுகள் எதிர்மறையாக அமையும்போது குச்சுயிரி வளர்ச்சி ஓர்வு கட்டாயமாகிறது.[33] ஏ வகைப் பீட்டா சங்லிலிக் குச்சுயிரித்(GABHS) தொற்று முன்னர் இருந்தமையை தெளிவாக உறுதிப்படுத்தும் சான்றாக, கடும் தொற்றுக்குப் பின் செய்யப்படும் ASO எனும் சங்கிலிக் குச்சுயிரிஎதிர்ப்பொருள் வடிப்புமுறை அமையும். இதில் ஓ வகை சங்கிலி நுண்ணுயிரி சிதைவின் உயர்வே முன்பு இவ்வகைத் தொற்று இருந்ததைச் சுட்டுகிறது. இந்த ஆய்வு ஏ வகைப் பீட்டா சங்லிலிக் குச்சுயிரித்(GABHS) தொற்றைத் தெளிவாக உறுதிப்படுத்தும் வழிமுறையானாலும், இது அடிநா அழற்சியை உறுதிப்படுத்தாது.[34]

ஒற்றைக் கலக்கருமிகை அல்லது நாளக்காய்ச்சல் நோய் உள்ள நிலையில் முழுக் குருதிக்கல எண்ணிக்கையில் நிணநீர்க்கல எண்ணிக்கை கூடுவதைக் க்கன்டறிய, எப்சுட்டைன் பார் நச்சுயிரி (ஊணீரியல்) ஓர்வை மேற்கொள்ளலாம். [15] சிரையூடாக உயிர்க்கொல்லி தர மருத்துவமனையில் சேர்த்தவருக்கு மட்டுமே குருதி ஆய்வுகள மேர்கொள்ளப்படும்.[15]

வலியும் விழுங்கற்சிக்கலும் உள்ளபோது, குரல்வளை அழற்சித் திரையும் மீக்குரல்வளை அழற்சியும் நிலவலை அறிய, மூக்குள்நோக்கியால் ஆய்வு செய்யலாம். நோயறிதலில் சிறுவருக்கு மூக்குள்நோக்கியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.[15]

மருத்துவ முறைகள்

தொகு

வலி, காய்ச்சல், கரகரப்பு குறைக்க பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்:[1][23][24][25][31]

  • வலியும் காய்ச்சலும் குறைக்க, பாராசிடாமுல், அசெட்டாமினோஃபென், இபுப்புரோஃபென் மருந்தகள் தரப்படும்.
  • தொண்டைக் கரகரப்பு குறைய, வெந்நீர், தேன் தரலாம்; உப்புநீர் கொப்பளிக்கலாம்.

அடிநா அழற்சி நச்சுயிரிகளால் உருவானால், மருத்துவம் ஏதும் தேவைப்படாது; ஏனெனில், அடிநா அழற்சி ஒரு நச்சுயிரித் தொற்றால் ஏற்படுமானால், நோய்வாய்ப்படுதலின் நீட்டிப்பு அதில் ஈடுபட்டுள்ள நச்சுயிரித் தொற்றைச் சார்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரே வாரத்திற்குள் முழுமையான உடல் நலம் பெற்றுவிடும்; எனினும், சில அரிதான நோய்த்தாக்கங்கள் இரு வாரங்கள் வரை நீடித்திருக்கும்.[35]

உயிர்க்கொல்லி மருந்துகள்

தொகு

அடிநா அழற்சி சங்கிலி வகை நுண்ணுயிரிகளால் ஏற்பட்டால் நுண்ணுயிர்க்கொல்லிகளைத் தரலாம்; பெனிசிலின், அமாக்சிலின் ஆகியன தரப்படும்.[1][15] நோய்க்கடுமையானால், செபலோசுபோரின், மார்க்கோலைடு ஆகியவை பெனிசிலினுக்க மாற்றாக தருவது நல்லது.[1][36] பெனிசிலின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மார்க்கோலைடுகளான அசித்ரோமைசின் அல்லது எரித்ரோமைசின் தரலாம்.[1] நுண்ணுயிரி அடிநா அழற்சிக்கு பெனிசிலின் மருந்து பொய்த்தால், கிளின்டாமைசின் அல்லது அமாக்சிலின்கிளவுலனேட் மருந்துகளைத் தரலாம்.[37]தொண்டைச் சதை இழையங்களில் வாழும் பால்ம நொதிகளை உருவாக்கும் உயிரக வேட்பு, உயிரக வெறுப்புக் குச்சுயிரிகள், ஏ வகை சங்கிலி நுண்ணுயிரிகளைப் பெனிசிலினிடம் இருந்து காக்கின்றன.[38]அடிநா அழற்சிக்குத் தரும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து வகைகளின் செயற்பாட்டில் வேறுபாடுகள் எதுவும் கணிசமாக அமைவதில்லை.[15] விழுங்கற்சிக்கல் உள்ளவருக்கும் வேறு கடுஞ்சிக்கல்கள் உள்ளவருக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைச் சிரைக்குழலூடாக ஊசிவழி செலுத்தலாம்.மழற்சிக்கான கடுஞ்சிக்கல்கல் குறைந்து, விழுங்கல் எளிதானதும் வாய்வழி நுண்ணுயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.[15] Antibiotic treatment is usually taken for seven to ten days.[1][5]

தொண்டைச் சதை இழையங்களில் வாழும் பால்ம நொதிகளை உருவாக்கும் உயிரக வேட்பு, உயிரக வெறுப்புக் குச்சுயிரிகள், ஏ வகை சங்கிலி நுண்ணுயிரிகளைப் பெனிசிலினிடம் இருந்து காக்கின்றன.[39] அடிநா அழற்சிக்குத் தரும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து வகைகளின் செயற்பாட்டில் வேறுபாடுகள் எதுவும் கணிசமாக அமைவதில்லை.[15] விழுங்கற்சிக்கல் உள்ளவருக்கும் வேறு கடுஞ்சிக்கல்கள் உள்ளவருக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைச் சிரைக்குழலூடாக ஊசிவழி செலுத்தலாம். அழற்சிக்கான கடுஞ்சிக்கல்கல் குறைந்து, விழுங்கல் எளிதானதும் வாய்வழி நுண்ணுயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.[15] 7 முதல் 10 நாட்கலுக்கு உயிரிக்கொல்லி மருந்துகள் வழி ம்ந்ருத்துவம் மேற்கொள்ளலாம்.[1][5]

வலிக்கான மருந்துகள்

தொகு

சிறுவருக்கும் முதிர்ந்தோருக்கும் அடிநா அழற்சியால் ஏற்படும் தொண்டை வலிக்குப் பாராசிட்டாமுலையும் பருவகமல்லாத அழற்சித் தடுப்பு மருந்துகளையும்(NSAID) பயன்படுத்தலாம்.[1][15] கோடைன் மருந்து 12 அகவைக்குக் கீழான சிறுவருக்கும் அடிநாச் சதைநீக்க அறுவை செய்தவருக்கும் தருவதைத் தவிர்க்கவேண்டும்.[40][41]வலிநீக்கத்துக்கு இபுப்புரோஃபென் போன்ற பருவகமல்லாத அழற்சித் தடுப்பு மருந்துகளும் (NSAID) கோடைன், டிராமடோல் போன்ற ஒப்பியியாயிடு மருந்துகளும் சம வல்லமையோடு வலிநீக்கத்தில் நல்ல விளைவுகளைத் தருகின்றன; என்றாலும், வலி மருந்துகளைத் தருகையில் முன்னெச்சரிக்கையோடே செயல்பட வேன்டும். பருவகமல்லாத அழற்சித் தடுப்பு மருந்துகள் (NSAID) மருந்துகள் வயிற்றுப் புண்ணையும் சிறுநீரகச் சிதைவையும் ஏற்படுத்துவனவாகும். ஒப்பியியாயிடுகள் மூச்சுயிர்ப்பு இறக்கத்தை சிலருக்கு தரவல்லது.[15] மயக்க மருந்தால் வாயைக் கழுவியும் நோய் அறிகுறிகளை குறைக்கலாம்.[15]

புறணிப் பருவகங்கள்

தொகு

புறணிப் பருவகங்கள் அடிநா அழற்சி வலியைக் குறைத்து 24 முதல் 48 மணி நேரத்துக்குள் அறிகுறிகளைக் குறைக்கின்றன. மருந்துகளை விழுங்குவதில் சிக்கல் இல்லாதபோது, வாய்வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படும்.[15]

அறுவை மருத்துவம்

தொகு

ஓராண்டில் 5 தடவைகளுக்கு மேல் அடிக்கடி அடிநா அழற்சி ஏற்பட்டாலோ [42] அல்லது விழுங்க முடியாத அளவுக்கு அடிநாச் சதை வீங்கி வலித்தாலோ அடிநாச் சதைகளை அறுவை வழியாக நீக்கலாம்.

சிறுவர்களில் அடிக்கடி ஏற்படும் அடிநா அழற்சிக்கு அறுவையால் அடிநாச் சதைநீக்கல் ஓரளவுக்கே நலம் தருகிறது.[43]

நாட்பட்ட அடிநா அழற்சி நிலைமைகளிலும் அடிநாச் சதைநீக்க அறுவை ஒரு தேர்வாக அமையும்[44].

அடிநா அழற்சியின் பல நிலைமைகளில், வீக்கமேற்பட்ட அடிநாச் சதை ஏற்படுத்தும் வலிக்குத் தற்காலிக தீர்வாக தாக்குதலுக்குட்பட்ட இடத்திற்கான மயக்க மருந்தூட்டம் தேவைப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக விஸ்கோஸ் லிடோகெய்ன் கரைசல்கள் அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகின்றன, மேலும் பென்ஸோகேய்ன், லிக்னோகேய்ன், பென்ஸிடாமைன், ஃப்ளூபிஃபரோஃபென் அடங்கியிருக்கும் தொண்டை மயக்கமருந்து மாத்திரைகள் மருத்துவர் பரிந்துரையில்லாமலேயே பரவலாகக் கிடைக்கப்பெறுகிறது.

அடிநாச் சதைக் கட்டியால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தால் பால், பனிக்குழைவை, தயிர் முதலான குளிர்வான பால்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

நோய் வாய்ப்புகள்

தொகு

பெனிசிலின் 1940 களில் உருவாக்கப்பட்டதும், சங்கிலி நுண்ணுயிரி அடிநா அழற்சியின் கீல்வாதக் காய்ச்சலையும் கட்டற்ற சைடன்காம் நரம்பு வலி, இதய நோயின் பால் அக்காய்ச்சலின் பேரளவு விளைவுகளையும் கட்டுபடுத்தலாகவே உள்ளது .

அரிதான கடுஞ்சிக்கல்களாக, நீரிழப்பும் விழுங்கற்சிக்கலால் சிறுநீரகச் செயலிழப்பும் வீக்கத்தால் மூச்சுக்குழல் அடைப்பும் தொற்றுப் பரவலால் தொண்டைச் சதை அழற்சியும் ஏற்படலாம்.[23][24][25][31]

நோய்த்தாக்கத்தின் போது அடிநாச் சதையின் பக்கவாட்டில் சீழ்க்கட்டி ஏற்படலாம், இது வழக்கமாக அடிநா அழற்சி ஏற்பட்ட பல நாட்கள் கழிந்தபின்னரே உருவாகும். இது தொண்டைச் சதை சீழ்க்கட்டி அல்லது வீக்கம் என்று கூறப்படுகிறது. அரிதாக, இந்த நோய்த்தாக்கம் அடிநாச் சதையையும் தாண்டிப் பரவலாம், இது உள்ளமைந்த கழுத்துப்பெருஞ்சிறைகளில் நோய்த்தாக்கமும் வீக்கமும் ஏற்படுத்தி, இலெமியர்ரெசு நோய்த்தொகை குருதி நச்சுமிகை எனும் நோய்ப் பரவலை அதிகரிக்கும்.

மிக அரிதான நிலைமைகளில், தொண்டைச் சதையழற்சி கீல்வாதக் காய்ச்சலையும் சிறுநீரகத் திறணை வீக்கத்தையும்[45] உருவாக்கும். இந்தச் சிக்கல்கள் வளர்ச்சிபெற்ற நாடுகளில் மிகவும் அரிதாக இருக்கிறது, ஆனால் ஏழை நாடுகளில் அது தொடர்ந்து ஒரு முதன்மைச் சிக்கலாகவே இருக்கிறது.[46][47]

அடிநாச் சதையில் இருக்கும் குழிகளில் சேர்ந்தவிட்ட சளியை உணவாகக்கொள்ளும் நுண்ணுயிரி, வெள்ளை கலந்த மஞ்சள் வண்டற் கற்களை உருவாக்கக்கூடும். விரைவில் ஆவியாகிவிடும் இயல்புள்ள கந்தக கலவைகளின் இருப்பின் காரணமாக, இவை நாற்றத்தை வெளிப்படுத்தும்.

அடிநாச் சதையின் வழக்கத்துக்கு மாறான பெரிதாக்கம், குறட்டைவிடுதல், வாய்வழி மூச்சுவிடுதல், நிம்மதியற்ற தூக்கம், தடங்கலான தூக்க மூச்சு நிறுத்தம் ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும், அவ்வாறான நேரங்களில் நோயாளி மூச்சு விடுவதை நிறுத்திவிடுகிறார். மேலும் குருதி ஓட்டத்தில் இருக்கும் உயிர்வளியின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதற்கு அடிநாச் சதைநீக்கம் பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.

நோய்ப்பரவலியல்

தொகு

இனம், குடிவகை(இனக்குழு) சாராமல் அடிநா அழற்சி உலகில் எப்பகுதிலும் ஏற்படுகிறது.[48] பெரும்பாலான சிறுவருக்கு அவர்களது இளம்பருவத்தில் ஒருமுறை அடிநா அழற்சி வருகிறது.[49] இது இரண்டு அகவைக்கு முன் வருவதில்லை.[48] இது பெரிதும் 4 இல் இருந்து 5 அகவை இடையில் ஏற்படுகிறது. குச்சுயிரித் தொற்று இதற்குப் பிந்தைய ஆண்டுகளில் தோன்றுகிறது.[48]

சமூகமும் பண்பாடும்

தொகு

மக்கள் வழக்கில் தமிழில் இது உள்நாக்கு வளர்ச்சி அல்லது தொண்டைக்குழிச் சதை எனப்படுகிறது. கிரேக்க மொழியில் இது இப்போக்கிரட்டிசு சதை(Hippocratic Corpus) எனப்படுகிறது.[50]

திரும்பி அடிக்கடி வரும் அடிநா அழற்சி குரல்வளத்தைத் தாக்கி, குரல்வளம் சார்ந்த தொழில்முறைகளுகுக் இன்னல் விளைவிக்கிறது.[51][52]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 "Pharyngitis-Tonsillitis in Children and Adults" (PDF). Institut national d'excellence en santé et en services sociaux (INESSS) (in ஆங்கிலம்). Institut national d'excellence en santé et en services sociaux (INESSS). March 2016. Archived from the original (PDF) on 22 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
  2. 2.0 2.1 2.2 "Acute Tonsillitis". NCIthesaurus. பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
  3. 3.0 3.1 "Peritonsillar Abscess: Complication of Acute Tonsillitis or Weber's Glands Infection?". Otolaryngol Head Neck Surg 155 (2): 199–207. August 2016. doi:10.1177/0194599816639551. பப்மெட்:27026737. https://semanticscholar.org/paper/007572b38a590ed9587bf53888aba667548b2210. 
  4. 4.0 4.1 4.2 "Antibiotics for treatment of sore throat in children and adults". Cochrane Database Syst Rev. December 9, 2021. doi:10.1002/14651858.CD000023.pub5. பப்மெட்:34881426. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 "Clinical practice guideline: tonsillitis I. Diagnostics and nonsurgical management". Eur Arch Otorhinolaryngol 273 (4): 973–87. April 2016. doi:10.1007/s00405-015-3872-6. பப்மெட்:26755048. 
  6. 6.0 6.1 6.2 6.3 Lang 2009, p. 2083.
  7. 7.0 7.1 Jones 2004, p. 674.
  8. "ICD-11 for Mortality and Morbidity Statistics Acute tonsillitis". icd.who.int. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
  9. "ICD-11 for Mortality and Morbidity Chronic disorders of tonsils or adenoids Statistics". icd.who.int. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
  10. "Tonsillitis". Archived from the original on 25 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
  11. "ICD-11 for Mortality and Morbidity Statistics Streptococcal tonsillitis". icd.who.int. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
  12. Ferri 2015, p. 1646.
  13. "Clinical practice guideline: tonsillitis II. Surgical management". Eur Arch Otorhinolaryngol 273 (4): 989–1009. April 2016. doi:10.1007/s00405-016-3904-x. பப்மெட்:26882912. 
  14. 14.0 14.1 14.2 "Infections and foreign bodies in ENT". Surgery (Oxf) 36 (10): 555–556. October 2018. doi:10.1016/j.mpsur.2018.08.008. பப்மெட்:32336859. 
  15. 15.00 15.01 15.02 15.03 15.04 15.05 15.06 15.07 15.08 15.09 15.10 15.11 15.12 15.13 15.14 15.15 15.16 15.17 15.18 15.19 "Controversies in the management of acute tonsillitis: an evidence-based review". Clin Otolaryngol 39 (6): 368–74. December 2014. doi:10.1111/coa.12299. பப்மெட்:25418818. 
  16. "Tonsillitis and sore throat in children". GMS Curr Top Otorhinolaryngol Head Neck Surg 13: 3. 2014. doi:10.3205/cto000110. பப்மெட்:25587367. 
  17. "Epstein-Barr virus and its association with disease - a review of relevance to general practice". BMC Fam Pract 20 (1): 62. May 2019. doi:10.1186/s12875-019-0954-3. பப்மெட்:31088382. 
  18. 18.0 18.1 "A Clinical Approach to Tonsillitis, Tonsillar Hypertrophy, and Peritonsillar and Retropharyngeal Abscesses". Pediatr Rev 38 (2): 82. February 2017. doi:10.1542/pir.2016-0072. பப்மெட்:28148705. 
  19. அடிநா அழற்சி மற்றும் மூக்கு அடிச்சதை வளர்ச்சி நோய்த்தாக்கம் மெடிசன்நெட். மீட்டெடுக்கப்பட்டது 25-01-2010.
  20. அடிநா அழற்சி மேலோட்டப்பார்வை மெட்லைன் பிளஸ். மீட்டெடுக்கப்பட்டது 25-01-2010
  21. "Bacterial Persisters and Infection: Past, Present, and Progressing". Annu Rev Microbiol 73: 359–385. September 2019. doi:10.1146/annurev-micro-020518-115650. பப்மெட்:31500532. 
  22. Tonsillopharyngitis at Merck Manual of Diagnosis and Therapy Professional Edition
  23. 23.0 23.1 23.2 Wetmore 2007, pp. 756–57.
  24. 24.0 24.1 24.2 Thuma 2001, p. ???
  25. 25.0 25.1 25.2 Simon 2005, p. ????
  26. "The role of anaerobic bacteria in tonsillitis". Int J Pediatr Otorhinolaryngol 69 (1): 9–19. January 2005. doi:10.1016/j.ijporl.2004.08.007. பப்மெட்:15627441. 
  27. "[Significance of the fusospirillum complex (Plaut-Vincent angina)]" (in nl). Acta Otorhinolaryngol Belg 30 (3): 334–45. 1976. பப்மெட்:1015288.  — fusospirillum complex (Plaut-Vincent angina) Van Cauwenberge studied the tonsils of 126 patients using direct microscope observation. The results showed that 40% of acute tonsillitis was caused by Vincent's angina and 27% of chronic tonsillitis was caused by Spirochaeta
  28. "Circulating phospholipase-A2 activity in obstructive sleep apnea and recurrent tonsillitis.". Int J Pediatr Otorhinolaryngol 76 (4): 471–4. 2012. doi:10.1016/j.ijporl.2011.12.026. பப்மெட்:22297210. 
  29. "The immune response in adenoids and tonsils". Int. Arch. Allergy Immunol. 122 (1): 8–19. May 2000. doi:10.1159/000024354. பப்மெட்:10859465. 
  30. "Immunology of the tonsils". Immunology Today 19 (9): 414–21. September 1998. doi:10.1016/S0167-5699(98)01307-3. பப்மெட்:9745205. https://archive.org/details/sim_immunology-today_1998-09_19_9/page/414. 
  31. 31.0 31.1 31.2 MedlinePlus Encyclopedia Tonsillitis
  32. "Tonsillitis - Symptoms, diagnosis and treatment". BMJ Best Practice. 22 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-11-04.
  33. "Rapid antigen detection testing in diagnosing group A beta-hemolytic streptococcal pharyngitis". Expert Rev Mol Diagn 6 (5): 761–6. 2006. doi:10.1586/14737159.6.5.761. பப்மெட்:17009909. 
  34. "How to use antistreptolysin O titre". Archives of Disease in Childhood: Education and Practice Edition 99 (6): 231–8. December 2014. doi:10.1136/archdischild-2013-304884. பப்மெட்:24482289. 
  35. "Tonsillitis". medlineplus.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  36. "Meta-analysis of cephalosporin versus penicillin treatment of group A streptococcal tonsillopharyngitis in children". Pediatrics 113 (4): 866–882. 2004. doi:10.1542/peds.113.4.866. பப்மெட்:15060239. https://archive.org/details/sim_pediatrics_2004-04_113_4/page/866. 
  37. "The role of beta-lactamase-producing-bacteria in mixed infections". BMC Infect Dis 9: 202. 2009. doi:10.1186/1471-2334-9-202. பப்மெட்:20003454. 
  38. "Microbiology and principles of antimicrobial therapy for head and neck infections". Infect Dis Clin North Am 21 (2): 355–91. 2007. doi:10.1016/j.idc.2007.03.014. பப்மெட்:17561074. https://archive.org/details/sim_infectious-disease-clinics-of-north-america_2007-06_21_2/page/355. 
  39. "Microbiology and principles of antimicrobial therapy for head and neck infections". Infect Dis Clin North Am 21 (2): 355–91. 2007. doi:10.1016/j.idc.2007.03.014. பப்மெட்:17561074. https://archive.org/details/sim_infectious-disease-clinics-of-north-america_2007-06_21_2/page/355. 
  40. US Food and Drug Administration(2013). "Safety review update of codeine use in children; new Boxed Warning and Contraindication on use after tonsillectomy or adenoidectomy: Safety announcement". செய்திக் குறிப்பு.
  41. "Do not use codeine, tramadol in children: FDA". AAP News. 2020-10-29. https://www.aappublications.org/news/2017/04/20/Codeine042017. 
  42. "Tonsillitis". BMJ Clin Evid 2014. July 2014. பப்மெட்:25051184. 
  43. "Tonsillectomy or adenotonsillectomy versus non-surgical treatment for chronic/recurrent acute tonsillitis". Cochrane Database Syst Rev (11): CD001802. November 2014. doi:10.1002/14651858.CD001802.pub3. பப்மெட்:25407135. 
  44. Paradise JL, Bluestone CD, Bachman RZ, et al. (1984). "Efficacy of tonsillectomy for recurrent throat infection in severely affected children. Results of parallel randomized and nonrandomized clinical trials". N. Engl. J. Med. 310 (11): 674–83. பப்மெட்:6700642.  அடிநா அழற்சி சதைநீக்கத்தை அறுவையால் நீக்கிய 187 குழந்தைகளைப் பாராடைசு என்பார்க் ஆய்வுசெய்தார். 91 குழந்தைகள் இலக்கின்றி அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையற்ற பிரிவுகளில் வைக்கப்பட்டனர். இதர 96 குழந்தைகள் பெற்றோர்களின் விருப்பப்படி வைக்கப்பட்டனர். அறுவை சிகிச்சை குழு தங்கள் முதல், இரண்டாம் ஆண்டின் வருகையின்போது பெற்ற தரவுகள் தொண்டை நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்படும் நிலைமையைக் கொண்டிருந்தது. இறுதியில் அறுவை சிகிச்சையற்ற குழுக்கள் நன்றாகவே செயல்பட்டன. அறுவை சிகிச்சை குழுவின் 95 பேரில் 13 நபர்கள் மட்டுமே தங்களுடைய இரண்டாவது ஆண்டு வருகைக்குப் பின்னர் அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டனர்.
  45. "[The course of post-streptococcal glomerulonephritis depending on methods of treatment for the preceding respiratory tract infection]" (in pl). Wiad. Lek. 54 (1–2): 56–63. 2001. பப்மெட்:11344703. 
  46. "Antibiotics for sore throat to prevent rheumatic fever: yes or no? How the Cochrane Library can help". CMAJ 171 (7): 721–3. September 2004. doi:10.1503/cmaj.1041275. பப்மெட்:15451830. 
  47. Danchin, MH; Curtis, N; Nolan, TM; Carapetis, JR (2002). "Treatment of sore throat in light of the Cochrane verdict: is the jury still out?". Medical Journal of Australia 177 (9): 512–5. doi:10.5694/j.1326-5377.2002.tb04925.x. பப்மெட்:12405896. http://www.mja.com.au/public/issues/177_09_041102/dan10028_fm.html.  — Medical Journal of Australia commentary on Cochrane analysis
  48. 48.0 48.1 48.2 Sommers 2015, p. 1078.
  49. Sommers 2015, p. 1077.
  50. Dean-Jones 2013
  51. Sataloff & Hawkshaw 2019.
  52. Stadelman-Cohen 2019, pp. 30–52.

வெளி இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிநா_அழற்சி&oldid=3836277" இலிருந்து மீள்விக்கப்பட்டது