அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்: 18) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜீவன் ஜியோத் கவுர் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 39,679 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்துவை 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அமிர்தசரஸ் கிழக்கு
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரஸ் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅமிர்தசரஸ் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,68,300
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஜீவன் ஜியோத் கவுர்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேற்கோள்கள் தொகு

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.