அமிர்தம் சூர்யா

அமிர்தம் சூர்யா (Amirtham Surya) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று நடராசன் சரோஜா இணையருக்கு மகனாக இவர் பிறந்தார். எழுத்தாளர், இலக்கிய மேடைப்பேச்சாளர், கவிஞர், இதழாளர் என்று பன்முகத்துடன் இலக்கிய உலகில் இயங்கி வருகிறார்.[1] 14 ஆண்டுகள் கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக பணியாற்றினார். இயற்பெயர் இரா.ந.கதிரவன். அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியதால் அமிர்தம் சூர்யா என்ற புனைப்பெயர் தோன்றியது. கணையாழி, கோடு, கோடாங்கி, கவிதாசரண், நவீன விருட்சம் என பல்வேறு இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழகம் முழுதும் கல்லூரிகளுக்கு சென்று தமிழ் வளர்ச்சி மற்றும் இலக்கிய மன்றச் சொற்பொழிவு[2] நூல் விமர்சன உரை என மாணவர்களிடையே பரவலாக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

எட்டாம் வகுப்பு வரை சென்னை தங்கசாலை சாரதா வித்யாலயாவிலும் எட்டு முதல் பத்து வரை தங்கசாலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை சென்னை கன்னிகா புரத்தில் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியிலும் முடித்தார். சென்னை தியாகராஜா கல்லூரி வேதியியல் பிரிவில் பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார். சென்னை தங்கசாலையில் இயந்திரபணியாளர் என்ற பிரிவில் தொழிற்கல்வியை முடித்தார். மனைவியின் பெயர் லதா என்பதாகும். இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தொழில்

தொகு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திரப்பணியாளர், அண்ணா நகர் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளர், கூடுவாஞ்சேரியில் ஒரு நிறுவன மேலாளர், வியாசர்பாடி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேலாளர், கல்கி வார இதழில் 14- ஆண்டுகள் தலைமை துணை ஆசிரியர் என பல்வேறு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். முழுநேர எழுத்து பணியுடன் தற்பொழுது இயங்கி வருகிறார்.

படைப்புகள்

தொகு

கவிதை

தொகு
  1. உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை[3]
  2. பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு
  3. வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்
  4. ஓவிய ப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்[4]

கட்டுரை

தொகு
  1. முக்கோணத்தின் நாலாவது பக்கம்(2001) [5]
  2. சாகரம்[6]
  1. கடவுளை கண்டுபிடிப்பவன் (சிறுகதைகள்)
  2. பல்லி (நாவல்)

பத்திரிகைத் தொடர்கள்

தொகு
  1. ஆசிபெறலாம் வாங்க (16 வாரத் தொடர், கல்கி)
  2. தவணைமுறை தற்கொலை (16 வாரத் தொடர், கல்கி)

விருதுகள்

தொகு
  1. திருப்பூர் தமிழ் சங்க விருது
  2. தினகரன் பரிசு
  3. பாரத மாநில வங்கி விருது
  4. எழுச்சி அறக்கட்டளை விருது
  5. சி.கனகசபாபதி விருது
  6. அன்னம் விருது
  7. செளமா விருது

மேற்கோள்கள்

தொகு
  1. E, Balaji, "'கருமாண்டி ஜங்ஷன்' 7 நிமிடங்களில் இலக்கியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா", tamil.indianexpress.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-21
  2. இலக்கிய சொற்பொழிவு
  3. "கவிதை என்பது மெளனமாக நிகழ்வது". அந்திமழை. https://www.andhimazhai.com/web-series/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81. பார்த்த நாள்: 21 June 2024. 
  4. "நல்வரவு: சாதனைச் செம்மல் ச.வே.சு", Hindu Tamil Thisai, 2017-08-05, பார்க்கப்பட்ட நாள் 2024-06-21
  5. "'கடவுளைக் கண்டுபிடிப்பவன்' - அமிர்தம் சூர்யா". Archived from the original on 2010-11-10. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
  6. சாகரம் (பெண் சித்தர்களின் குறிப்புகள்) – அமிர்தம் சூர்யா – வேரல் புக்ஸ் – Veral Books (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-21

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தம்_சூர்யா&oldid=4081632" இலிருந்து மீள்விக்கப்பட்டது