அமீதா பானு (மல்யுத்த வீராங்கனை)

இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை

அமீதா பானு (Hamida Banu) இந்தியாவின் முதல் பெண் மற்போர் வீராங்கனை ஆவார். 1937 இல் அறிமுகமான நேரத்தில் இருந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மல்யுத்த சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இவர், அபாரமான வலிமை மற்றும் உறுதிக்காக அறியப்பட்டார். பானு 'அலிகரின் அமேசான்' என்றும் அழைக்கப்பட்டார்.[1] இவர் அந்த நேரத்தில் பல இந்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிராக சவால் விடுது போட்டியில் வெற்றி பெற்றார். ஐரோப்பாவில் மல்யுத்தப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

மல்யுத்தம் பெண்களுக்குத் தடையாக இருந்த சமயத்தில், ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதால், பர்தா வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, இவர் பல பாலின மற்றும் மத நிலைப்பாடுகளை எதிர்த்துப் போராடி அதை உடைத்தார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

1920 களின் முற்பகுதியில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகரில் பிறந்த அமீதா பானு [3] தனது 10வது வயதில் நாதர் பகெல்வான் என்ற பிரபல மல்யுத்த வீரரால் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெறத் தொடங்கினார். பானுவின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.[4]

மல்யுத்த வாழ்க்கை மற்றும் குறிப்பிடத்தக்க போட்டிகள்

தொகு

அமீதா பானு, மல்யுத்த வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நேரத்தில் இந்தியாவில் பெரும்பாலான விளையாட்டுகள் குறிப்பாக மல்யுத்தம் ஆண் ஆதிக்கம் நிறைந்த இடமாக இருந்தது. சலாம் பகெல்வான் என்ற உள்ளூர் மல்யுத்த வீரரின் கீழ் அலிகரில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.[1]

மல்யுத்தப் பயிற்சி இடங்களுக்குள் பெண்களின் நுழைவு பெரும்பாலும் தடைசெய்யப்பட்டதால், பானு ஆண் மல்யுத்த வீரகளின் உதவியை நாடினார். இது பெரும் விமர்சனத்தைப் பெற்றது.[5] இந்த போட்டிகளில், அமீதா ஆண்களைப் போலவே விளையாட்டு உடையை அணிந்திருந்தார்.[2] இது பழமைவாத ஆண்களின் எதிர்ப்பைத் தூண்டியது. பெண்கள் சண்டைக்கு தகுதியானவர்கள் அல்ல என்று அவர்கள் கருதினர். இதனால் இவருக்கு எதிராக மல்யுத்தம் செய்ய மறுத்துவிட்டனர். [5] அதே நேரத்தில், பாபா பகெல்வான் போன்ற ஆண் மல்யுத்த வீரர்கள், இவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அல்லது ஒரு மல்யுத்த போட்டியில் தங்களை தோற்கடிக்குமாறு சவால் விடுத்தனர் .

பல ஆண் மல்யுத்த வீரர்களுக்கு எதிரான தனது போராட்டத்தில் பானு வெற்றி பெற்றாலும், பஞ்சாபில் உள்ள மரபுவழி சமூகம் மல்யுத்தத்தின் மீதான இவரது ஆர்வத்தை ஏற்க மறுத்து, அவமானங்கள் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களால் இவரை குறிவைத்தது. விரைவில், அதிலிருந்து இவர் தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.[2]

மல்யுத்தம் ஒரு மனிதனின் விளையாட்டு என்ற பரவலான கருத்து பானுவின் வாழ்க்கைக்கு தடையாக இருந்த வேறு இரண்டு அறியப்பட்ட நிகழ்வுகளும் இருந்தன. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துப்படி, ஆண் மல்யுத்த வீரர் ராம்சந்திர சாலுங்கே உடனான ஒரு போட்டியை உள்ளூர் மல்யுத்த கூட்டமைப்பு எதிர்த்ததால் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு முறை அமீதா ஒரு ஆண் எதிரியைத் தோற்கடித்தபோது பொது கூச்சலிட்டு இவர் மீது கல்லெறிந்த சம்பவமும் நடைபெற்றது. இறுதியில் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு வன்முறையைத் தடுத்தனர்.[1]

பானு 1930-1950 வரையிலான தனது வாழ்க்கையில் 320 மல்யுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்றதாக அறியப்படுகிறது. 1937[2] ஆண்டு ஆக்ராவில் இலாகூர் மல்யுத்த வீரர் ஃபெரோஸ் கானுடன் இவர் மோதிய முதல் மல்யுத்தப் போட்டி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

1954 இல், பானு மும்பையின் வல்லபாய் படேல் விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிமிடத்திற்குள் உருசிய மல்யுத்த வீரரான வேரா சிஸ்டிலினை தோற்கடித்தார்.[6] அதே வருடத்தின் பிற்பகுதியில், இவர் சிங்கப்பூரின் பெண் மல்யுத்த வீரரான ராஜா லைலாவுடன் மல்யுத்தம் செய்தார். அதன்பின் ஐரோப்பிய மல்யுத்த வீரர்களுக்கு சண்டைக்கு சவால் விடுத்தார்.

மல்யுத்தத்திற்கு பிந்தைய வாழ்க்கை

தொகு

ஐரோப்பாவில் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட மல்யுத்தப் போட்டிகளுக்குப் பிறகு, பானு மல்யுத்த அரங்கத்திலிர்நுது மறைந்தார். சலாம் பகெல்வான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறியப்படுகிறது. பானு தனது கணவரிடமிருந்து குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். பானு ஐரோப்பாவிற்கு செல்வதைத் தடுக்க இவரை அடித்தார். இதன் விளைவாக இவரது கைகள் உடைந்தன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.[1]

பானும் இவரது கணவரும் மும்பை மற்றும் கல்யாண் போன்ற இடங்களில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இறுதியில், சலாம் பகெல்வான் அலிகர் திரும்பினார். பானு கல்யாணில் தங்கினார். பானு பால் விற்பது, கட்டிடங்களை வாடகைக்கு விடுவது, வீட்டில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை விற்பது போன்றவற்றில் ஈடுபட்டார்.[1]

இறப்பு

தொகு

அமீதா பானு 1986 இல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Hamida Banu: The incredible life of India's 'first' woman wrestler" (in en-GB). 2023-05-25. https://www.bbc.com/news/world-asia-india-65630615. 
  2. 2.0 2.1 2.2 2.3 editorpaperclip (2023-04-25). "Uncovering the Legacy of Hamida Banu: The Fearless Female Wrestler of Colonial India". Paperclip. (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-27.
  3. Dsouza, Krystelle (2023-06-03). "How The Legendary Hamida Banu Paved the Way for Female Wrestlers in Colonial India". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-27.
  4. "Times top10". https://timesofindia.indiatimes.com/gender-may-15-2023/coronabytes/msid-100158040.cms. 
  5. 5.0 5.1 Gupta, Radhika (2023-04-28). "Hamida Banu: The First Woman Wrestler | #IndianWomenInHistory". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-27.
  6. Sen, Ronojoy (October 2015). Nation at Play (in English). Penguin Random House India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231164900.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)