அமீனா குரிப்

(அமீனா குரிப் பாகிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீபி அமீனா பிர்டோ குரிப்-பாக்கிம் (Bibi Ameenah Firdaus Gurib-Fakim, பிறப்பு: 17 அக்டோபர் 1959)[1] என்பவர் மொரிசியசின் குடியரசுத் தலைவரும், உயிரியற் பல்வகைமையாளரும் ஆவார். 2014 டிசம்பரில் குடியரசுத் தலைவர் பதவிக்கு லெப்பெப் கூட்டணியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2015 மே 29 இல் கைலாசு புரியாக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரதமர் அனெரூட் ஜக்நாத், எதிர்க் கட்சித் தலைவர் பவுல் பெரென்கர் ஆகியோரின் ஆதரவில் தேசியப் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் இவர் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] மொரிசியசின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரும் இவராவார்.

அமீனா குரிப்-பாக்கிம்
Ameenah Gurib-Fakim
AmeenahGurib1.jpg
மொரிசியசு குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 சூன் 2015
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
துணை குடியரசுத் தலைவர் மொனிக் ஒஷான் பெலெப்போ
முன்னவர் கைலாசு புரியாக்
மொரிசியசுப் பல்கலைக்கழக உப-வேந்தர்
பதவியில்
2004–2010
வேந்தர் சர் ரமேசு ஜீவூலால்
தனிநபர் தகவல்
பிறப்பு அமீனா குரிப்
அக்டோபர் 17, 1959 (1959-10-17) (அகவை 61)
சுரிநாம் மொரிசியசு
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) முனை. அன்வர் பாக்கிம் (திருமணம் 1988)
பிள்ளைகள் ஆடம்
இமாம்
படித்த கல்வி நிறுவனங்கள் சரே பல்கலைக்கழகம் (இளங்கலை)
எக்செட்டர் பல்கலைக்கழகம் (முனைவர்)
பியேர் மேரி கியூரி பல்கலைக்கழகம் (DSc)
பணி உயிரியற் பல்வகைமையாளர்
பேராசிரியர்
சமயம் இசுலாம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீனா_குரிப்&oldid=2074714" இருந்து மீள்விக்கப்பட்டது