அமீர் சுபானி
அமீர் சுபானி (Amir Subhani) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார்.[2] 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற இவர்[3] தற்போது பீகார் அரசின் தலைமைச் செயலாளராக உள்ளார்.
அமீர் சுபானி Amir Subhani | |
---|---|
தலைமைச் செயலாளர், பீகார் அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 01 சனவரி 2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 ஏப்ரல் 1964 பகுவாரா, பர்காரியா, சீவான், பீகார்[1] |
கல்வி | M.A.(புள்ளியியல்) |
தொழில்
தொகுஅமீர் சுபானி துணைக் கோட்ட அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். 1993 ஆம் ஆண்டில் போச்பூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1994 ஆம் ஆண்டு பாட்னா மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 2005 ஆம் ஆண்டு இவர் பீகார் மாநில பால் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவரானார். சுபானி பீகார் அரசாங்கத்தில் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.[4] சிறுபான்மைக் குழுவிலிருந்து பீகாரின் தலைமைச் செயலாளராக பதவி வகித்த முதல் நபர் என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "'जानें कैसी है सुबहानी की 'कहानी'". www.abplive.com (in இந்தி). 2021-12-31. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "Civil List IAS". easy.nic.in.
- ↑ www.ETGovernment.com. "Top IAS Amir Subhani to be new Bihar chief secretary, Government News, ET Government". ETGovernment.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "SUPREMO Complete Biodata". supremo.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "1987-batch IAS officer Amir Subhani is Bihar's first chief secretary from minority group". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.