அமீர் மெகதி

அமீர் மெகதி (சில சமயங்களில் அமீர் மகதி என்றும், அன்சா மெகதி என்றும் அழைக்கப்படுகிறார்) இவர் ஒரு பாக்கித்தானிய மலையேறுபவர் மற்றும் சுமை தூக்குபவர் ஆவார். இவரது பணி 1953 ஆம் ஆண்டில் நங்க பர்வதத்தின் முதல் வெற்றிகரமான ஏற்றம் மற்றும் 1954 இல் கே 2 மலைச்சிகரத்திற்கு இத்தாலிய குழுக்களுடன் மலையேறியது போன்ற பணிகளுக்காக நன்கு அறியப்படுகிறார். இவர், 1954 இல் கே 2 இல் இத்தாலிய மலையேறுபவர் வால்டர் பொனாட்டியுடன் சேர்ந்து, ஒரு இரவில் மிக உயர்ந்த 8,100 மீட்டர்கள் (26,600 அடி) மலையுச்சியில் பனிக்கட்டிக்குள் மாட்டிக்கொண்டுத் தப்பித்ததற்காகவும் அறியப்படுகிறார். [1] [2]

அமீர் மெகதி
பிறப்பு1913
இறப்பு1999
தேசியம்பாகிஸ்தானியர்

நங்க பர்வதம் (1953) தொகு

சூலை 1953 இல் ஒரு ஜெர்மன்-ஆஸ்திரிய அணி நங்க பர்வதத்துக்கு பயணம் மேற்கொண்டது. இந்த பயணத்தை மியூனிக் பகுதியைச் சேர்ந்த வில்லி மேர்க்கலின் தந்தை வழி சகோதரர் கார்ல் ஹெர்லிகோஃபர் ஏற்பாடு செய்தார். அதே நேரத்தில் 1932 மற்றும் 1934 முயற்சிகளில் பங்கேற்ற இன்ஸ்ப்ரூக்கைச் சேர்ந்த பீட்டர் அஷென்ப்ரென்னர் இந்த பயணத்தின் தலைவராக இருந்தார். இக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஹெர்மன் புல் அதை முதலிடம் பிடித்தார் மற்றும் மலையுச்சியை அடைந்த முதல் நபர் ஆனார். அவருக்கு அன்சா பகுதியைச் சேர்ந்த அமீர் மெக்தி மற்றும் ஆஜி பேய்க் என்ற இரு சுமை தூக்குபவர்கள் உதவி புரிந்தார்கள். புல் கீழிறங்கும்போதும் உறைபனியால் ஏற்படும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட போது அவருக்கு உதவி செய்தனர். [3]

கே 2 (1954) தொகு

 
1954 ஆம் ஆண்டின் கே 2 ஏறும் போது அமீர் மெகதி பயன்படுத்திய ஐஸ் கோடாரி

இத்தாலிய குழுவின் பயணத்தின் போது, இவரும் வால்டர் பொனாட்டியும் அச்சில் காம்பாக்னோனி மற்றும் லினோ லாசெடெல்லி ஆகியயோர் உறைபனியில் சிக்கிக் கொண்டனர். அதிகம் பாதிக்கப்பட்ட போனாட்டியை மலையுச்சிக்கு வருவதை அவர்கள் தடுக்க விரும்பினர். மேலும் 8,100 மீட்டர்கள் (26,600 அடி) கொண்ட மிக உயரத்தில் ஒரு பனிக்கட்டியில் பதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திறந்தவெளி. [1] மெகதி நிலையான இராணுவத்தினர் பயன்படுத்தும் காலணியை அணிந்திருந்ததால், பனிக்கட்டிக்கு கால்விரல்கள் அனைத்தையும் இழந்து 8 மாதங்கள் மருத்துவமனையில் சேர்ந்து சோதனையிலிருந்து மீண்டார்.

போனாட்டியும் மெகதியும் மலைச் சிகரத்தை சேருவதைத் தடுக்க விரும்பியதால் காம்பாக்னோனி வேண்டுமென்றே முகாமை நகர்த்தியுள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது. இளமையாகவும், உடல் தகுதி உடையவராகவும் போனாட்டி இருந்தார். மேலும் பிராணவாயு உபகரணங்கள் இல்லாமல் மலை ஏறுவதன் மூலமும் ஒருவேளை வெற்றி பெற்றுவிடப் போகிறார் என்று காம்பாக்னோனி அஞ்சியிருக்கலாம். காம்பாக்னோனி, மெகதி மற்றும் போனாட்டி ஆகிய இருவரும் பனிக்கட்டிக்குள் அமைத்த தற்காலிக கூடாரத்திலிருந்து மலையின் கீழே அமைந்துள்ள முகாமுக்குத் திரும்பவும் விரும்பினார். ஆனால் இரவு தொடங்கிவிட்டது. மேலும் மெகதி கீழே இறங்குவதற்கான நிலையில் இல்லை. எனவே மற்ற இருவரும் அங்கேயே உறை பனியில் தங்க வேண்டியிருந்தது.

அவரது இத்தாலிய சகாக்களைப் போலல்லாமல், மெகதிக்கு சரியான மலையேறும் பனிக் காலணிகள் வழங்கப்படவில்லை. அவர் வழக்கமான இராணுவக் காலணிகளையே அணிந்திருந்தார். அவருடைய காலணிகள் இரண்டின் அளவுகளும் அவரது கால்களுக்கு மிகச் சிறியவை என சில அறிக்கைகளின்படித் தெரிகிறது. எனவே, அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். மேலும் அவர் கீழ் முகாமை அடைந்த நேரத்தில் நடக்க முடியவில்லை. அவரை [[ஸ்கர்டு நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 'ஸ்ட்ரெச்சரில்' கொண்டு செல்ல வேண்டியிருந்தது, அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டத. அங்கிருந்து ராவல்பிண்டியில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குடலிறக்கம் பரவாமல் தடுக்க அவரது கால்விரல்கள் அனைத்தையும் வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. அவர் எட்டு மாதங்கள் மருத்துவமனையில் கழித்து பின்னர் வீடு திரும்பினார்.

மெகதி அன்சாவில் உள்ள தனது கிராமத்திற்கு வீடு திரும்பியபோது, தனது பனி கோடரியைத் தூக்கி எறிந்துவிட்டு, அதை ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் கூறினார். [4]

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

கே 2 முயற்சிக்குப் பிறகு மெகதி மலையேறுதலை விட்டு வெளியேறினார். இத்தாலி அரசாங்கம் அவருக்கு ஓய்வூதியம் வழங்கிவதாகக் கூறியது. ஆனால் அவரது மகன் இதை மறுத்துவிட்டார். அமீர் தனது சொந்த ஊரான அசனாபாத்தில் தனது மீதமான வாழ்நாளில், பாக்கித்தானின் அரசாங்க ஊழியராக சிலகாலம் பணியாற்றினார்.

மெகதி வயதான காலத்தில் 1999 இல் அன்சாவில் இறந்தார்.

விருதுகள் மற்றும் தலைப்புகள் தொகு

  • இத்தாலிய அரசாங்கம் அவருக்கு குதிரைப்படை தரத்தை வழங்கியது. [1]
  • மெகதி இத்தாலிய சிவில் பதக்கமான அல் வாலர் விருதினையும் பெற்றார்.
  • 1953 ஆம் ஆண்டில் நங்கபர்வதம் ஏறும் போது செய்த சேவைகளுக்காக மெகதிக்கு 'அன்சாவின் புலி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. [5]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்_மெகதி&oldid=3541307" இருந்து மீள்விக்கப்பட்டது