அமுக்கவியலாப் பாய்வு

பாய்ம இயக்கவியலில் அமுக்கவியலாப் பாய்வு (Incompressible flow) எனப்படுவது யாதெனின், பாய்வு முழுமைக்கும் ஒரு நுண்பாய்மத்தொகுதியின் அடர்த்தி மாறாமலிருக்கும் பாய்வைக் குறிப்பதாகும். அமுக்கவியலாத் தன்மையை கணித வடிவத்தில் குறிப்பதாயின், பாய்மத் திசைவேகத்தின் விரிதல் சுழியமாகும்.

அமுக்கவியலாப் பாய்வானது, பாய்மம் அமுக்கவியலாதது என்று குறிப்பதில்லை. மாறாக, அமுக்குமைப் பாய்வுகளும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை (ஒரு குறிப்பிட்ட திசைவேகம் வரை) அமுக்கவியலாததாகப் பாவிக்கப்பட்டு பாய்வுப் புதிர்கள் தீர்க்கப்படலாம் என்பதையே குறிக்கிறது. பாய்வின் திசைவேகத்தோடு நகரும் ஒரு நுண்பாய்மத்தொகுதியின் அடர்த்தி பாய்வில் மாறாமலிருப்பின் அது அமுக்கவியலாப் பாய்வாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுக்கவியலாப்_பாய்வு&oldid=1369765" இலிருந்து மீள்விக்கப்பட்டது