அமுக்கிகளின் வேறுபாடு

அமுக்கிகளின் வகைகளில் உள்ள வேறுபாடு

அமுக்கிகளின் வேறுபாடு (Differentiation of compressors ) என்பது அதன் செயற்படு திறமைப் பொறுத்து வேறுபடுகின்றன. இதன் காரணிகளான, வளிமம், ஆவி(vapour) அல்லது இவ்விரண்டின் கலவையின் அழுத்தத்தை உயர்த்தும் எந்திரம் அமுக்க எந்திரம் அல்லது அமுக்கி அல்லது அழுத்தி எனப்படுகிறது. அமுக்கியில் வளிமம் செல்லும்போது அது வளிமத்தின் தன்-பருமனைக் (specific volume) குறைத்து அதற்கு அழுத்தத்தை ஊட்டுகிறது. மைய விலகு விசிறி, அச்சுவழிப் பாய்வு விசிறிகளோடு ஒப்பிடும்போது அமுக்கிகள் உயர்அழுத்த எந்திரங்களாகும். எந்திர விசிறிகள் குறைந்த அழுத்த எந்திரங்களாகும்.

பல தேவைகளுக்காக வளிமம், ஆவி ஆகியவற்றின் அழுத்தத்தை அதிகரிக்க அமுக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றமுக்கிகள் பல இடங்களில் மிகப் பரவலாகப் பயன்படுகின்றன. அமுக்கத்தை ஏற்படுத்தும் இயக்க முறைகளைப் பொறுத்து அமுக்கிகள் ஊடாட்ட, சுழல் தாரை, மையவிலகு, அச்சுப்பாய்வு அமுக்கிகள் (reciprocal, rotary, jet, centrifugal, axial compressors) என வகைப்படுத்தப்படுகின்றன. அமுக்கப்படும் வளிமத்தின்மேல் எந்திர உறுப்புகள் செயல்படும் முறையைப் பொறுத்து அமுக்கிகள் நேரிடப்பெயர்ச்சி (positive displacement) அல்லது இயங்குநிலை (dynamic) அமுக்கிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

வகைகள்

தொகு

அமுக்கி வகைகளில் பல வகைகள் உண்டு. எடுத்துக்காட்டக, பின்வரும் அமுக்கிகள் அதிகம் அன்றாட வாழ்வில் பயனாகின்றன.

நேரிடப்பெயர்ச்சி அமுக்கிகள் : இவைகளில் தொடர்ந்து பாயும் வளிமப்பருமன் ஒரு மூடிய கலனில் கட்டுப்படுத்தப்படுகின்றது. மூடிய கலனில் பருமன் குறையக் குறைய வளிமத்தின் அழுத்தம் உயர்ந்து கொண்டே போகும் இயங்குநிலை அமுக்கிகளில் சுழலும் இதழ்கள் (vanes) அல்லது வாளிகள் பாய்மத்துக்கு அழுத்தத்தையும் விரைவையும்/திசைவேகம் ஊட்டுகின்றன.

ஊடாட்ட அமுக்கிகள் : ஊடாட்ட அமுக்கிகள் நேரிடப் பெயர்ச்சி வகையின. இவற்றில் ஒன்று அல்லது இரண்டு உருளைகள் அமைந்திருக்கும். உருளைகளில் உள்ள உலக்கைகள் அல்லது அழுந்துருள்கள் இணைப்புத் தண்டால் (connecting rod) ஒரு வணரித் தண்டுடன (crank shaft) இணைக்கப்படும். இந்த வணரித்தண்டு சுழலும் பேரிது அழுந்துருள் முன்னும் பின்னும் இயங்கும். ஒவ்வோர் உருளையிலும் ஒரு நுழைவாய் இதழும் வெளியேற்றும் இதழும் எந்திரப்பகுதிகளைக் குளிர்விக்கும் அமைப்புகளும் இருக்கும். உறிஞ்சல் அடியின்போது (suction stroke) உருளைக்குள் வளிமம் உறிஞ்சப்படும். உறிஞ்சல் அடியின் இறுதியில் அழுந்துருள் அல்லது உலக்கை எதிர்த்திசையில் திரும்பும். அப்பொழுது வளிமம் அமுக்கப்பட்டு, வெளியேற்றும் அடியின்போது வெளியேற்றப்படுகிறது. அழுந்துருள் அல்லது உலக்கையின் ஒருபுறம் மட்டும் வளிமத்தை அமுக்கப் பயன்பட்டால் இந்த அமுக்கி ஒற்றைச் செயல்பாட்டு அமுக்கி எனப்படும். அழுந்துருள் அல்லது உலக்கையின் இருபுறமும் வளிமத்தின் மீது செயல்பட்டால் அது இரட்டைச் செயல்பாட்டு அமுக்கி எனப்படும். ஒற்றைச் செயல்பாட்டு அமுக்கியைப்போல ஒவ்வோர் உருளைக்கும் இரு மடங்கு வளிமத்தை இரட்டைச் செயல்பாட்டு அமுக்கி வெளியேற்றும்.

ஒற்றைக்கட்ட அமுக்கிகள் (Single stage Compressors) : ஒற்றைக்கட்ட அமுக்கிகள் (Single stage Compressors). ஒவ்வோர் உருளையிலும் உலக்கையின் ஒவ்வொரு சுழற்சியின்போதும் அது நுழைவாயிலிருந்து வெளியேற்றவாய் வரை வளிமத்தின் அழுத்தத்தை உயர்த்துகின்றது.

இருகட்ட அமுக்கிகள் (Double stage Compressors)  : இவற்றில் முதல் உருளையில் வளிமம் ஓர் இடைநிலை அழுத்தத்துக்கு அமுக்கப்படும். மறு உருளையில் வளிமத்தின் அழுத்தம் இறுதி வெளியேற்ற அழுத்தத்திற்கு அமுக்கப்படும். இரு கட்டங்களுக்கு மேல் அழுத்தம் உருவாக்கப்பட்டால் அந்த அமுக்கி பல கட்ட அணி (multistage unit) எனப்படும்.

குத்து, கிடைநிலை (vertical and horizontal) அமுக்கிகள் : இந்த வகை அமுக்கிகள் ஒற்றை உருளையையோ பல உருளைகளையோ கொண்டு அமையலாம். கோண நிலை அமுக்கிகள் பல உருளைகளை உடையவை. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிடை அல்லது குத்து அமுக்க உறுப்புகள் அமையலாம்.

காட்சியகம்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Compressors
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Mattei Compressors பரணிடப்பட்டது 2010-05-09 at the வந்தவழி இயந்திரம்
  2. Tischer, J., Utter, R: “Scroll Machine Using Discharge Pressure For Axial Sealing,” U.S. Patent 4522575, 1985.
  3. Caillat, J., Weatherston, R., Bush, J: “Scroll-Type Machine With Axially Compliant Mounting,” U.S. Patent 4767293, 1988.
  4. Richardson, Jr., Hubert: “Scroll Compressor With Orbiting Scroll Member Biased By Oil Pressure,” U.S. Patent 4875838, 1989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுக்கிகளின்_வேறுபாடு&oldid=2866438" இலிருந்து மீள்விக்கப்பட்டது