அமுல்யா பட்நாயக்கு

அமுல்யா குமார் பட்நாயக் (Amulya Patnaik) இந்தியாவைச் சேர்ந்த காவல் சேவை அதிகாரி ஆவார். இவர் 21 ஆவது தில்லி காவல்துறை ஆணையராக 30 ஜனவரி 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 30 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி வரை பணியாற்றினார்.[2]

அமுல்யா பட்நாயக்கு
Amulya Patnaik
21 ஆவது தில்லி காவல் துறை ஆணையர்
பதவியில்
31 சனவரி 2017 - 29 பிப்ரவரி 2020
முன்னையவர்அலோக் வர்மா
பின்னவர்எசு.என். சிறீவசுத்தவா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1960 (1960-01-15) (அகவை 64)[1]

கல்வி மற்றும் தொழில்

தொகு

ஒடிசாவைச் சேர்ந்த பட்நாயக், 1960 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று பிறந்தார். 1979 ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற இவர், 1981 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் அதே பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1985 ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசம் கோவா மிசோரம் ஒன்றியப்பிரதேசங்களின் தொகுதி இந்திய காவல் பணி அதிகாரி ஆவார்.[3]

இந்திய காவல் பணி அதிகாரியாக இவரது முதல் பணி தில்லியிலுள்ள நச்சாப்கார் நகரத்தில் அமைந்தது. பாண்டிச்சேரியின் காவல் துறை கண்காணிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இவர் தில்லியின் 21 ஆவது காவல் ஆணையராக ஆனார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணியாற்றினார். அதன்பிறகு எசு. என். சிறீவசுத்தவா பதவியேற்றார்.[4]

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரங்களைக் கட்டுப்படுத்தாததில் இவர் வகித்த பங்கிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல், சவகர்லால் நேரு பல்கலைக்கழக கைகலப்பு, இயாமியா கைகலப்பு மற்றும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 அன்று நடந்த கார்கி கல்லூரி பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் இவரது பதவிக்காலம் விமர்சனங்கள் நிறைந்த காலமானது. [5] 2020 ஆம் ஆண்டு சனவரியில் ஓய்வு பெறவிருந்தார் ஆனால் 2020 தில்லி சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போராட்டங்கள் காரணமாக இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.[6][7] இதற்கு முன்பு, இவர் தில்லி காவல்துறையில் சிறப்பு காவல் ஆணையராக (கண்காணிப்பு மற்றும் நிர்வாகம்) பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "IPS : Query Result(s)". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  2. "Stage set for 'untouchable' Delhi Police Commissioner Amulya Patnaik's grand farewell". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/delhi/2020/feb/28/stage-set-for-untouchable-delhi-police-commissioner-amulya-patnaiks-grand-farewell-2109481.html. பார்த்த நாள்: 26 August 2020. 
  3. "Amulya Patnaik appointed Delhi Police Chief". The Times of India. 30 January 2017. https://timesofindia.indiatimes.com/city/delhi/amulya-patnaik-appointed-delhi-police-chief/articleshow/56874139.cms. 
  4. "Senior IPS Officer SN Shrivastava appointed Delhi Police Commissioner". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/senior-ips-officer-sn-shrivastava-appointed-delhi-police-commissioner/articleshow/74374696.cms. பார்த்த நாள்: 26 August 2020. 
  5. "From JNU to Jamia, Delhi Police chief Amulya Patnaik's stint is marked by many storms he faced" (in en). The Indian Express. 19 January 2020. https://indianexpress.com/article/cities/delhi/a-police-story-amulya-patnaik-delhi-police-commissioner-jamia-violence-tis-hazari-lawyers-clash-6223698/. பார்த்த நாள்: 26 August 2020. 
  6. "Delhi Police's top cop Amulya Patnaik to retire on 31 January after a tumultuous tenure". ThePrint. 14 January 2020. https://theprint.in/india/delhi-polices-top-cop-amulya-patnaik-to-retire-on-31-january-after-a-tumultuous-tenure/349521/. பார்த்த நாள்: 26 August 2020. 
  7. "Delhi Police Commissioner Amulya Patnaik gets one-month extension in 'public interest'; 1985 batch IPS officer was set to retire today". Firstpost. 31 January 2020. https://www.firstpost.com/india/delhi-police-commissioner-amulya-patnaik-gets-one-month-extension-in-public-interest-1985-batch-ips-officer-was-set-to-retire-today-7983911.html. பார்த்த நாள்: 26 August 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுல்யா_பட்நாயக்கு&oldid=4137606" இலிருந்து மீள்விக்கப்பட்டது