அமெரிக்கக் கணிதவியல் சங்கம்
அமெரிக்கக் கணிதவியல் சங்கம் (MAA) என்பது ஒரு தொழில்முறை சமுதாயமாகும். இது கணிதத்தில் பட்டப்படிப்பு மேற்கொள்வார் இதை அணுகலாம். இதில் பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர், பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்கள், தூய மற்றும் கணிதவியலாளர்கள், கணினி விஞ்ஞானிகள் கல்வி அரசு, வணிகம் மற்றும் தொழில் முனைவோர் மற்றும் பலர் அடங்குவர். இச்சங்கம் 1915 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு கணித இதழ்கள் மற்றும் புத்தகங்களை வெளியிடுகிறது.[1]
உருவாக்கம் | 1915 |
---|---|
தலைமையகம் | 1529 18th Street, NW வாசிங்டன், டி. சி. |
உறுப்பினர் | 14,000+ |
President | Deanna Haunsperger |
வலைத்தளம் | www.maa.org |
கட்டங்கள்
தொகுஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் கட்டங்கள் நடத்தப்படும். அமெரிக்க கணிதவியல் சங்கம், கூட்டு கணிதக் கட்டத்துடன் இணைந்து வருடாந்திர புத்தகங்கள் மற்றும் khehL வழங்குகிறது. சமயங்களில் தொழில்துறை மற்றும் பயன்பாட்டு கணிதத்திற்கான சங்கம் இந்த கூட்டங்களில் இணைகிறது. இருபத்து ஒன்பது பிராந்திய பிரிவுகள் வழக்கமான சந்திப்புகளை நடத்துகின்றன.
வெளியீடுகள்
தொகுஅமெரிக்கக் கணிதவியல் சங்கமானது டைலர் & பிரான்சிஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டாக இனைந்து பல்வேறு இதழ்களை வெளியிடுகிறது.[2]:
- அமெரிக்க கணித மாத இதழ்கள்- என்பது கணிதவியலாளர்கள ஆராய்ச்சியாளர்கள், இளங்கலை மாணவர்களின் பரந்த பார்வையாளர்களை இலக்காக் கொண்டது.
- கணிதம் இதழ்கள்- குறிப்பாக இளங்கலை கணித ஆசிரியர்களை இலக்காகக் கொண்டது.
- கல்லூரி கணிதம் பத்திரிகை- – இளங்கலை கணிதவியலாளர்களின் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டது. குறிப்பாக புதியவர் மட்டத்தில்
- கல்லூரிக் கணித பத்திரிக்கை- இளங்கலை மாணவர்களை இலக்காகக் கொண்டது.
- மேத்ஸ் ஆன்லைன் - கணித அறிவியல் டிஜிட்டல் நூலகம் இளங்கலை மாணவர்களுக்காக 2001 இல் இணையத்தில் மட்டுமே படிக்கும் வசதியுடன் தொடங்கப்பட்டது.[3]
போட்டிகள்
தொகுஅமெரிக்க கணிதவியல் சங்கம் பட்டதாரி மாணவர்களுக்கு வில்லியம் லோவெல் புட்னோம் பரீட்சை நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளுக்கு ஸ்பான்ஸர் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் போட்டித் தொடர் நடத்தப்படுகின்றன.
கணித ஒலிம்பியாட் என்ற திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறந்த மாணவர்களை அடையாளம் காணப்படுகின்றனர். இறுதியாக ஆறு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சர்வதேச கணித ஒலிம்பியாட்ஸில் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விருதுகள் மற்றும் பரிசுகள்
தொகு- சல்வென்னட் பரிசு
- கார்ல் பி. அலெக்ஸ்டரெர்பர் விருது
- ட்ரெவர் எவான்ஸ் விருது
- லெஸ்டர் ஆர்போர்டு விருது
- ஜார்ஜ் போல் விருது
- மெர்டென் எம்.nஉறசெஸ் விருது
- யூலர் புக் பரிசு விருது
உறுப்பினர்கள்
தொகுகணிதத்திற்கான கூட்டுக் கொள்கை வாரியத்தில் நான்கு பங்களாளிகளில் அமெரிக்க கணிதவியல் சங்கம் ஒன்றாக உள்ளது. மேலும் கணிதவியல் சம்மேளனத்தின் khehL வாரியத்தில் பதினாறு தொழில்சார் சமூகங்களின் ஒரு குடை அமைப்பாக பங்கேற்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ JSTOR usage statistics பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Newsroom | Taylor & Francis". Archived from the original on 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 2018-01-10.
- ↑ Moore, Lang (May–June 2008). "New MathDL to Debut This Summer" (PDF). Maa Focus (Washington, DC: Mathematical Association of America) 28 (5): 4–5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0731-2040. http://www.maa.org/pubs/may08web.pdf. பார்த்த நாள்: 2008-06-09.
வெளி இணைப்புகள்
தொகு- MAA official website
- In-ter-stel-lar competition website பரணிடப்பட்டது 2016-01-09 at the வந்தவழி இயந்திரம்
- A Guide to the Mathematical Association of America Records, 1916–present: Homepage
- Mathematical Sciences Digital Library (MathDL)
- Convergence, the MAA's Math History and Math Education Magazine (part of MathDL)