அமெரிக்கத் தொழிலாளர் நாள்

இந்தக் கட்டுரை ஐக்கிய அமெரிக்காவின் விடுமுறை நாளைக் குறித்தது. உலகின் பிற பகுதிகளில் கடைபிடிக்கப்படும் தொழிலாளர் நாட்களைக் குறித்துக் காண தொழிலாளர் நாள்.

தொழிலாளர் நாள் (Labor Day) ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு விடுமுறை நாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று கொண்டாடப் படுகிறது. 2012ஆம் ஆண்டில் செப்டம்பர் 3 அன்று இது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொருளியல், சமூகத் துறைகளில் உழைப்பாளிகளின் பங்களிப்பு நினைவுகூரப்படுகிறது. மேலும் இது பல அமெரிக்கர்களால் வேனில் காலத்தின் கடைசி நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பல பேரணிகளும் விருந்துக் கூட்டங்களும் தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன[1]. அமெரிக்கத் தேசிய காற்பந்து லீகின் (NFL) போட்டிகள் இந்த நாளில் துவங்கும். பல மாநிலங்களில் பள்ளிகள் தொழிலாளர் நாளிற்கு அடுத்த நாள் துவங்குகின்றன.

தொழிலாளர் நாள்
தொழிலாளர் நாள் பேரணி, யூனியன் சதுக்கம், நியூயார்க், 1882
கடைபிடிப்போர்ஐக்கிய அமெரிக்கா
வகைகூட்டரசு விடுமுறை (கூட்டாட்சி அரசு, டிசி மற்றும் ஐ.அ. ஆட்சிப்பகுதிகள்); மற்றும் மாநில விடுமுறை (அனைத்து 50 ஐ.அ. மாநிலங்களிலும்)
கொண்டாட்டங்கள்பேரணிகள், வெளிப்புற சமையல் கொண்டாட்டங்கள்
நாள்செப்டம்பர் திங்கள் முதல் திங்கட்கிழமை
தொடர்புடையனதொழிலாளர் நாள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Labor Day or Labour Day Celebrations in USA - United States of America". Archived from the original on 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Labor Day in the United States
என்பதில் ஊடகங்கள் உள்ளன.