அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)

அமைதியின் அரசி அன்னை மரியா பெருங்கோவில் (St. Mary, Queen of Peace Basilica) என்னும் சீரோ-மலங்கரை கத்தோலிக்க வழிபாட்டிடம் இந்தியாவில் கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நகர்ப் பகுதியான பாளயத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள எட்டு துணைப் பெருங்கோவில்களுள் (minor basilica) இதுவும் ஒன்று.

அமைதியின் அரசி அன்னை மரியா பெருங்கோவில், திருவனந்தபுரம்
"சமாதான இராக்கினி மலங்கரா சிரியானி கத்தோலிக்க பசிலிக்கா"
கோவிலின் முகப்புத் தோற்றம்
அமைதியின் அரசி அன்னை மரியா பெருங்கோவில், திருவனந்தபுரம் is located in கேரளம்
அமைதியின் அரசி அன்னை மரியா பெருங்கோவில், திருவனந்தபுரம்
அமைதியின் அரசி அன்னை மரியா பெருங்கோவில், திருவனந்தபுரம்
8°30′11″N 76°57′00″E / 8.503°N 76.95°E / 8.503; 76.95
நாடுஇந்தியா
சமயப் பிரிவுசீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்Syro-Malankara Catholic Church
வரலாறு
நிறுவனர்(கள்)தலைமைப் பேராயர் மார் இவானியோஸ்
Architecture
பாணிஇந்திய புது கோத்திக்
நிருவாகம்
பங்குதளம்பாளயம்
மறைமாவட்டம்திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டம்
குரு
ஆயர்பசேலியோஸ் கிளேமிஸ் பாவா
குரு(க்கள்)டானியேல் சாருவில்
Chaplain(s)ஜோர்ஜ் மேத்யூ கரூர்

சீரோ-மலங்கரை கத்தோலிக்க சபை சார்ந்த முதல் பசிலிக்கா அல்லது துணைப் பெருங்கோவிலாக இது உள்ளது. இது திருவனந்தபுரம் சீரோ-மலங்கரா கத்தோலிக்க உயர் மறைமாவட்டத்தின் "மறைமாவட்ட துணைக் கோவிலும்" (pro-cathedral) ஆகும். மறைமாவட்டக் கோவில் பாளயத்தில் உள்ள புனித யோசேப்பு கோவில் ஆகும்.

பெருங்கோவில் நிலை பெறுதல்

தொகு

இக்கோவில் 2008, நவம்பர் 10ஆம் நாள் துணைப் பெருங்கோவில் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டது. திருத்தந்தையின் தூதுவர் லியோனார்டோ சாண்ட்ரி (en:Leonardo Sandri)மற்றும் கீழைத் திருச்சபைகளுக்கான பேராயத் தலைவர் அச்செய்தியை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பெயரில் திருவனந்தபுரம் பட்டம் பகுதியில் உள்ள புனித அன்னை மரியா மறைமாவட்டக் கோவிலில் வழங்கினார். 2008, திசம்பர் 7ஆம் நாள், மற்றும் சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பேராயரான கர்தினால் பசேலியோஸ் கிளேமிஸ் பாவா அக்கோவிலைத் துணைப் பெருங்கோவில் என்று அர்ப்பணித்தார்.

அர்ப்பண நிகழ்ச்சிக்கும் பின் நடந்த கூட்டத்திற்கு கேரள அமைச்சர் எம். விஜய குமார் தலைமை தாங்கினார்.[1]

கோவிலின் வரலாறு

தொகு

திருவனந்தபுரத்தின் பாளயம் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் கட்டடம் முன்னாள்களில் ஒரு திரைப்படக் கலையரங்கமாக இருந்தது. பின்னர் அது கோவிலாக மாற்றப்பட்டது. கோவில் 1933, மார்ச்சு 11ஆம் நாள் அர்ச்சித்து அர்ப்பணிக்கப்பட்டது. அதே நாளில் கேரள சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் பேராயராக மார் இவானியோஸ் (Mar Ivanios) அங்கு பதவி ஏற்றார்.

கோவிலின் கூரை தகரத்தால் ஆனது என்றதால் மக்கள் இக்கோவிலை "தகரப் பள்ளி" என்று அழைத்தனர். 1991இல் தகரக் கூரைக் கோவில் இருந்த இடத்தில் ஒரு புதுக்கோவில் கட்டப்பட்டது. பேராயர் மார் இவானியோஸ் அக்கோவிலை "அமைதியின் அரசி அன்னை மரியாவுக்கு" அர்ப்பணித்தார்.

குறிப்புகள்

தொகு
  1. "பசிலிக்கா கோவில் அர்ப்பணம்". Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.

ஆதாரம்

தொகு

Deepika (மலையாள செய்தித்தாள்), December 8, 2008.