அமோனியம் அறுபுளோரோபெர்ரேட்டு

வேதிச் சேர்மம்

அமோனியம் அறுபுளோரோபெர்ரேட்டு (Ammonium hexafluoroferrate) என்பது (NH4)3FeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோபெர்ரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]

தயாரிப்பு

தொகு

அமோனியம் அறுபுளோரோபெர்ரேட்டை பெர்ரிக் புளோரைடு டிரை ஐதரேட்டையும் நீரில் கரைக்கப்பட்ட அமோனியம் புளோரைடையும் வினைபுரியச் செய்வதன் மூலம் பெறலாம்.[4]

இயற்பியல் பண்புகள்

தொகு

அமோனியம் அறுபுளோரோபெர்ரேட்டு அலுமினியம் மற்றும் மூவிணைதிற தைட்டானியம், வனேடியம் மற்றும் [[குரோமியம்[[ ஆகியவற்றின் ஒத்த சேர்மங்களுடன் சம உருவத்தைக் கொண்டுள்ளது.[5] இது ஒரு கனசதுரப் படிகத் திட்டத்தில் படிகமாக்குகிறது.[6]

வெப்பச் சிதைவுக்கு உட்படும்போது பெர்ரசு புளோரைடையும் பெர்ரிக் புளோரைடையும் கொடுக்கிறது.[7]

வேதிப் பண்புகள்

தொகு

செனான் இருபுளோரைடுடன் வினைபுரிந்து NH4FeF4, N2, Xe, மற்றும் HF ஆகியவற்றைக் கொடுக்கிறது.[8]

பயன்கள்

தொகு

அமோனியம் அறுபுளோரோபெர்ரேட்டு ஒரு தீத்தடுப்பு வேதிப்பொருளாகப் பயன்படுகிறது. [9]

மேற்கோள்கள்

தொகு
  1. Shinn, Dennis B.; Crocket, David S.; Haendler, Helmut M. (November 1966). "The Thermal Decomposition of Ammonium Hexafluoroferrate(III) and Ammonium Hexafluoroaluminate. A New Crystalline Form of Aluminum Fluoride" (in en). Inorganic Chemistry (journal) 5 (11): 1927–1933. doi:10.1021/ic50045a020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/ic50045a020. பார்த்த நாள்: 22 August 2024. 
  2. Moriya, Keiichi; Matsuo, Takasuke; Suga, Hiroshi; Seki, Syûzô (1 August 1977). "On the Phase Transition of Ammonium Hexafluoroferrate(III)". Bulletin of the Chemical Society of Japan 50 (8): 1920–1926. doi:10.1246/bcsj.50.1920. https://academic.oup.com/bcsj/article-abstract/50/8/1920/7356492?login=false. பார்த்த நாள்: 22 August 2024. 
  3. Pebler, Jurgen (January 1985). "Iron(57) Mo¨ssbauer effect and spin correlation time in ammonium hexafluoroferrate(III)". Journal of Solid State Chemistry 56 (1): 58–65. doi:10.1016/0022-4596(85)90252-X. Bibcode: 1985JSSCh..56...58P. https://www.sciencedirect.com/science/article/abs/pii/002245968590252X. பார்த்த நாள்: 22 August 2024. 
  4. Slivnik, Jože; Družina, Branko; Žemva, Boris (1 November 1981). "Reactions of Some Ammonium Fluorometalates with XeF 2". Zeitschrift für Naturforschung B 36 (11): 1457–1460. doi:10.1515/znb-1981-1119. 
  5. Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V2 (in ஆங்கிலம்). Elsevier. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14543-5. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  6. Ryss, Iosif Grigorʹevich (1960). The Chemistry of Fluorine and Its Inorganic Compounds (in ஆங்கிலம்). State Publishing House for Scientific, Technical and Chemical Literature. p. 681. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  7. Wang, Hong; Zhou, Yuebo; Mo, Chenggang; Zhang, Lina; Cui, Junjun (1 December 2021). "Fluorination of α-Fe2O3 by NH4HF2 to Produce FeF3" (in en). Russian Journal of Inorganic Chemistry 66 (14): 2017–2026. doi:10.1134/S0036023621140060. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-8613. https://link.springer.com/article/10.1134/S0036023621140060. பார்த்த நாள்: 25 August 2024. 
  8. Slivnik, Jože; Družina, Branko; Žemva, Boris (1 November 1981). "Reactions of Some Ammonium Fluorometalates with XeF 2". Zeitschrift für Naturforschung B 36 (11): 1457–1460. doi:10.1515/znb-1981-1119. 
  9. Official Gazette of the United States Patent Office: Patents (in ஆங்கிலம்). The United States Patent Office. 4 January 1972. p. 781. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.