அம்மோனியம் புளோரைடு
அம்மோனியம் புளோரைடு (Ammonium fluoride) என்பது NH4F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது சிறிய நிறமற்ற பட்டகங்களாகப் படிகமாகிறது. கூர்மையான உப்பு சுவை கொண்டது. மேலும் தண்ணீரில் அதிகம் கரையும். அனைத்து புளோரைடு உப்புகளைப் போலவே, இதுவும் கடுமையான மற்றும் நாள்பட்ட அளவுக்கதிகமான அளவுகளில் மிதமான நச்சுத்தன்மை கொண்டிருக்கும்.[3]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் புளோரைடு
| |||
வேறு பெயர்கள்
நடுநிலை அம்மோனியம் புளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
12125-01-8 | |||
ChEBI | CHEBI:66871 | ||
ChemSpider | 23806 | ||
EC number | 235-185-9 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 25516 | ||
வே.ந.வி.ப எண் | BQ6300000 | ||
| |||
UNII | 4QT928IM0A | ||
UN number | 2505 | ||
பண்புகள் | |||
NH4F | |||
வாய்ப்பாட்டு எடை | 37.037 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் நீர் உறிஞ்சும் திறன் | ||
அடர்த்தி | 1.009 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) (சிதையும்) | ||
83.5 கி/100 மி.லிட்டர் (25 °செல்சியசு)[1] | |||
கரைதிறன் | ஆல்ககாலில் சிறிதளவு கரையும், நீர்ம அமோனியாவில் கரையாது | ||
−23.0×10−6 செ.மீ3/மோல் | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | ஊர்ட்சைட்டு கட்டமைப்பு (அறிகோணம்) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1223 | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயன் | ||
H301, H311, H314, H330, H331 | |||
P260, P261, P264, P270, P271, P280, P284, P301+310, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் குளோரைடு அமோனியம் புரோமைடு அமோனியம் அயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் புளோரைடு பொட்டாசியம் புளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
படிகக் கட்டமைப்பு
தொகுஅம்மோனியம் புளோரைடு ஊர்ட்சைட்டு படிகக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இக்கட்டமைப்பில் அம்மோனியம் நேர்மின் அயனிகள் மற்றும் புளோரைடு எதிர்மின் அயனிகள் இரண்டும் ABABAB... போன்ற அடுக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் நான்முகி வடிவில் ஒன்று மற்ற நான்கு அணுக்களால் சூழப்பட்டுள்ளன. எதிர்மின் அயனிகள் மற்றும் நேர்மின் அயனிகளுக்கு இடையே N−H···F ஐதரசன் பிணைப்புகள் உள்ளன.[4] இந்த அமைப்பு பனிக்கட்டியின் கட்டமைப்பை மிகவும் ஒத்திருக்கிறது. அம்மோனியம் புளோரைடால் மட்டுமே தண்ணீருடன் சேர்ந்து கலப்பு படிகங்களை உருவாக்க முடியும்.[5]
வினைகள்
தொகுஐதரசன் புளோரைடு வாயுவை அதிக அளவில் அம்மோனியம் புளோரைடு உப்பு வழியாக அனுப்பும்போது, அம்மோனியம் புளோரைடு ஐதரசன் புளோரைடு வாயுவை உறிஞ்சி அம்மோனியம் பைபுளோரைடு சேர்மத்தை உருவாக்குகிறது. பின் வரும் வினை ஏற்படுகிறது:
- NH4F + HF → NH4HF2
சூடுபடுத்தும் போது அம்மோனியம் புளோரைடு பதங்கமாகிறது. இது அம்மோனியம் உப்புகளில் பொதுவான ஒரு பண்பாகும். பதங்கமாதலின் போது அம்மோனியம் புளோரைடு உப்பு அம்மோனியா மற்றும் ஐதரசன் புளோரைடாக சிதைகிறது. மேலும் இரண்டு வாயுக்களும் மீண்டும் இணைந்து அம்மோனியம் புளோரைடையும் கொடுக்கும். அதாவது இவ்வினை மீளக்கூடியது:
- [NH4]F ⇌ NH3 + HF
பயன்கள்
தொகுஇந்த வேதிப்பொருள் பொதுவாக "வணிக அம்மோனியம் புளோரைடு" என்று அழைக்கப்படுகிறது. அமில உப்பு (NH4HF2) என்பதற்கு மாறாக நடுநிலை உப்பைக் குறிக்க "நடுநிலை" என்ற சொல் [NH4]F சில நேரங்களில் "அம்மோனியம் புளோரைடு" உடன் சேர்க்கப்படுகிறது. அமில உப்பு பொதுவாக கண்ணாடி மற்றும் தொடர்புடைய சிலிக்கேட்டுகளின் செதுக்கலில் நடுநிலை உப்புக்கு மாற்றாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த பண்பு அனைத்து கரையக்கூடிய புளொரைடுகளுக்கும் பகிரப்படுகிறது. இந்த காரணத்திற்காக, ஆய்வக வேலையின் போது கண்ணாடி சோதனை குழாய்கள் அல்லது கருவிகளில் இதை கையாள முடியாது.
மரத்தைப் பாதுகாக்கவும், அந்துப்பூச்சி தடுப்பு முகவராகவும், துணிகள் அச்சிடுதல் மற்றும் சாயமிடுதல் மற்றும் மதுபான ஆலைகளில் கிருமி நாசினியாகவும் அம்மோனியம் புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium Fluoride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Ammonium Fluoride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Fluoride Toxicity - an overview | ScienceDirect Topics". www.sciencedirect.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
- ↑ A. F. Wells, Structural Inorganic Chemistry, 5th ed., Oxford University Press, Oxford, UK, 1984.
- ↑ Brill, R.; Zaromb, S. (1954). "Mixed Crystals of Ice and Ammonium Fluoride". Nature 173 (4398): 316–317. doi:10.1038/173316a0. Bibcode: 1954Natur.173..316B. https://archive.org/details/sim_nature-uk_1954-02-13_173_4398/page/n53.
- ↑ Aigueperse, Jean; Paul Mollard; Didier Devilliers; Marius Chemla; Robert Faron; Renée Romano; Jean Pierre Cuer (2005). "Fluorine Compounds, Inorganic". In Ullmann (ed.). Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30673-0.