அமோனியம் அயோடைடு
அமோனியம் அயோடைடு (Ammonium iodide) என்பது NH4I என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இச்சேர்மம் ஒளிப்பட வேதியியல் மற்றும் மருந்தளிப்பு மருத்துவம்[1] போன்ற துறைகளில் பயன்படுகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் அமோனியாவை வினைபுரியச் செய்து அமோனியம் அயோடைடைத் தயாரிக்கலாம். தண்ணிரில் இது எளிமையாகக் கரைந்து கனசதுரங்களாகப் படிகமாகிறது. எத்தனாலிலும் இது நன்கு கரைகிறது. ஈரக்காற்றில் இது மெதுவாக சிதைவடைந்து அயோடினை வெளியேற்றி மஞ்சளாக மாறுகிறது.
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
12027-06-4 | |||
ChemSpider | 23785 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 25487 | ||
| |||
UNII | OZ8F027LDH | ||
பண்புகள் | |||
NH4I | |||
வாய்ப்பாட்டு எடை | 144.94 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மை படிகத் தூள் | ||
அடர்த்தி | 2.51 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 551 °C (1,024 °F; 824 K) (பதங்கமாகிறது) | ||
கொதிநிலை | 235 °C (455 °F; 508 K) (வெற்றிடத்தில்) | ||
155 கி/100 மி.லி (0 °செ) 172 கி/100 மி.லி (20 °செ) 250 கி/100 மி.லி (100 °செ) | |||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் புளோரைடு அமோனியம் குளோரைடு அமோனியம் புரோமைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் அயோடைடு பொட்டாசியம் அயோடைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமோனியா அல்லது அமோனியம் ஐதராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலம் அல்லது ஐதரயோடிக் வாயுவைச் சேர்த்து வினைப்படுத்தி ஆய்வகங்களில் அமோனியம் அயோடைடு தயாரிக்கப்படுகிறது. NH3 + HI → NH4I NH4OH + HI → NH4I + H2O அமோனியமேற்றப்பட்ட நைட்ரசன் மூவயோடைடை (வெடி பொருள்) சிதைவுக்கு உட்படுத்தியும் அமோனியம் அயோடைடு தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Holleman, A. F.; Wiberg, E. Inorganic Chemistry Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.