அமோனியம் சயனேட்டு
அமோனியம் சயனேட்டு (Ammonium cyanate) என்பது NH4OCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற திண்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
22981-32-4 | |
ChemSpider | 2339431 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9793686 |
| |
பண்புகள் | |
CH4N2O | |
வாய்ப்பாட்டு எடை | 60.06 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் சயனேட்டு உப்பின் கட்டமைப்பு எக்சு கதிர் படிகவியல் ஆய்வின் மூலம் சரிபார்க்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள C−O மற்றும் C−N பிணைப்பு இடைவெளிகள் 1.174(8) மற்றும் 1.192(7) Å, ஆகும். consistent with the O=C=N− என்ற பிணைப்புடன் இது உறுதியாக உள்ளது. NH4+ forms நைட்ரசனுடன் சேர்ந்து ஐதரசன் பிணைப்பை உருவாக்குகிறது. ஆனால் ஆக்சிசனுடன் இப்பிணைப்பை இது உருவாக்குவதில்லை. கனிம வினைபடு பொருள்கள் வினைபுரிந்து, யூரியா என்ற கரிமச் சேர்மம் உருவாகும் வினையான வோலர் செயல்முறைக்கு முன்னோடியாக இச்சேர்மம் கருதப்படுகிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ MacLean, Elizabeth J.; Harris, Kenneth D. M.; Kariuki, Benson M.; Kitchin, Simon J.; Tykwinski, Rik R.; Swainson, Ian P.; Dunitz, Jack D. (2003). "Ammonium cyanate shows N-H···N hydrogen bonding, not N-H···O". Journal of the American Chemical Society 125: 14449–14451. doi:10.1021/ja021156x.