அமோனியம் டைமாலிப்டேட்டு

அமோனியம் டைமாலிப்டேட்டு (Ammonium dimolybdate) என்பது (NH4)2Mo2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் வகை சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு திண்மமாக இது காணப்படுகிறது. தாதுக்களிலிருந்து மாலிப்டினம் சேர்மங்கள் தயாரிக்கும்போது ஒர் இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்மம் உருவாகிறது. குறிப்பாக தாதுக்களை வறுக்கும்போது சுத்தம் செய்யப்படாத மாலிப்டினம்(VI) ஆக்சைடுகள் உற்பத்தியாகின்றன. இவற்றிலிருந்து அமோனியம் மாலிப்டேட்டை உருவாக்குவதற்கான நீர்த்த அமோனியா பிரித்தெடுக்கப்படுகிறது. அமோனியம் மாலிப்டேட்டு கரைசலை சூடுபடுத்துவதன் மூலமாக அமோனியம் டைமாலிப்டேட்டு உருவாகிறது. இதை தொடர்ந்து சூடேற்றுவதால் சிதைவடைந்து மாலிப்டினம் டிரையாக்சைடு உருவாகிறது :[1]

அமோனியம் டைமாலிப்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமோனியம் இருமாலிப்டேட்டு
இனங்காட்டிகள்
27546-07-2
பண்புகள்
H8N2Mo2O7
தோற்றம் வெண்மை நிறத் திண்மம்
அடர்த்தி 2.97 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
(NH4)2Mo2O7 → 2 MoO3 + 2 NH3 + H2O.

கட்டமைப்பைப் பொறுத்தவரை அமோனியம் டைமாலிப்டேட்டு ஒரு பலபகுதிச் சேர்மமாகும். இதில் உருக்குலைந்த எண்முக மாலிப்டினம் மையங்கள் நான்முக மாலிப்டேட்டு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Roger F. Sebenik et al. "Molybdenum and Molybdenum Compounds" in Ullmann's Encyclopedia of Chemical Technology 2005; Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_655
  2. Armour, A.W.; Drew, M.G.B.; Mitchell, P.C.H. "Crystal and molecular structure and properties of ammonium dimolybdate" Journal of the Chemical Society, Dalton Transactions,1975, p1493-p1496. {{DOI: 10.1039/DT9750001493}}

.