அமோனியம் பெரிக் சிட்ரேட்டு

அமோனியம் பெரிக் சிட்ரேட்டு (Ammonium ferric citrate) என்பது (NH4)5[Fe(C6H4O7)2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிக் சிட்ரேட்டுகள் தண்ணீரில் அவ்வளவு நன்றாகக் கரைவதில்லை என்ற நிலையில் அமோனியம் பெரிக் சிட்ரேட்டு தண்ணீரில் மிக நன்றாகக் கரைகிறது என்பது இச்சேர்மத்தின் தனித்தன்மையாகும்[1].

அமோனியம் பெரிக் சிட்ரேட்டு

(NH4)5[Fe(C6H4O7)2]•2H2O வின் படிகக் கட்டமைப்பு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-டிரைகார்பாக்சிலேட்டு, அமோனியம் இரும்பு(3+) உப்பு
வேறு பெயர்கள்
பெரிக் அமோனியம் சிட்ரேட்டு
அமோனியம் இரும்பு(III) சிட்ரேட்டு
அமோனியம் பெரிக் சிட்ரேட்டு
இரும்பு அமோனியம் சிட்ரேட்டு
பெரிசெல்ட்சு
இனங்காட்டிகள்
1185-57-5 Y
ChEBI CHEBI:31604
ChEMBL ChEMBL1200460 N
EC number 214-686-6
InChI
  • InChI=1S/C6H8O7.Fe.H3N/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;;/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);;1H3/q;+3;/p-2 Y
    Key: FRHBOQMZUOWXQL-UHFFFAOYSA-L Y
  • InChI=1/C6H8O7.Fe.H3N/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;;/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);;1H3/q;+3;/p-2
    Key: FRHBOQMZUOWXQL-NUQVWONBAA
KEGG D01644[2]
பப்கெம் 44134719
9881826
118984355
14457
பண்புகள்
C6H8O7xFe3+yNH3
தோற்றம் மஞ்சள் படிகங்கள்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

படிகக் கட்டமைப்பில் ஒவ்வொரு சிட்ரிக் அமில பகுதிக்கூறும் நான்கு புரோட்டான்களை இழக்கின்றன. புரோட்டன் நீக்கமடைந்த ஐதராக்சில் குழுக்கள் நான்கு கார்பாக்சிலேட்டு குழுக்களுடன் சேர்ந்து ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன. இரண்டு கார்பாக்சிலேட்டு குழுக்கள் பெரிக் அயனியுடன் ஒருங்கிணைவு கொள்வதில்லை.

பயன்கள் தொகு

அமோனியம் பெரிக் சிட்ரேட்டு பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டதாக உள்ளது.

  • ஓர் உணவுசேர் பொருளாகவும் அமிலத்தன்மை முறைப்படுத்தியாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய எண் 381 எனவும் இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இசுக்காட்லாந்து நாட்டில் ஒரு வகை மதுபானத்தில் இதை பயன்படுத்துகிறார்கள்.
  • தண்ணீரை தூய்மையாக்கும் செயல்முறையில் இது பயன்படுகிறது.
  • தங்கம் வெள்ளி போன்ற குறைவான செயல்திறன் கொண்ட உலோக உப்புகளின் ஒடுக்கம் முகவராக செயல்படுகிறது.
  • பொட்டாசியம் பெரிசயனைடுடன் சேர்க்கப்பட்டு புகைப்படத் தொழிலில் இதை பயன்படுத்துகிறார்கள்.
  • நுண்ணுயிரி வளர்சிதை மாற்றத்தில் ஐதரசன் சல்பைடு உற்பத்தியைத் தீர்மானிக்க அமோனியம் பெரிக் சிட்ரேட்டு பயன்படுகிறது.
  • மருத்துவப்படிமவியலில் அம்மோனியம் பெரிக் சிட்ரேட் வேருபடுத்திக் காட்டும் ஓர் ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • இரத்த செல்கள் உற்பத்திக்கு உதவும் ஒரு ஊட்டச்சத்தாகவும் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Matzapetakis, M.; Raptopoulou, C. P.; Tsohos, A.; Papaefthymiou, V.; Moon, N.; Salifoglou, A. (1998). "Synthesis, Spectroscopic and Structural Characterization of the First Mononuclear, Water Soluble Iron−Citrate Complex, (NH4)5Fe(C6H4O7)2•2H2O". J. Am. Chem. Soc. 120 (50): 13266–13267. doi:10.1021/ja9807035. 
  2. "KEGG DRUG: Ferric ammonium citrate".