அம்பா பிரசாத்து
அம்பா பிரசாத்து (Amba Prasad (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சார்கண்ட்டு மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்ககானில் போட்டியிட்டு சார்க்கண்ட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] 2019 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இவர் இளைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[4]
அம்பா பிரசாத்து Amba Prasad | |
---|---|
சார்க்கண்ட்டு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2019 - பதவியில் | |
முன்னையவர் | நமிதா தேவி |
தொகுதி | பர்ககாவுன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | பெக்ரா, அசாரிபாக்கு |
முன்னாள் கல்லூரி | வினோபா பாவே பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅம்பா பிரசாத்து பார்ககாவுன் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யோகேந்திர சாவோவின் மகளாவார். இவரது தாயார் நிமலா தேவியும் பர்ககாவுன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தார். அம்பா பிரசாத்து 2007 ஆம் ஆண்டில் அசாரிபாக்கிலுள்ள கார்மல் பெண்கள் பள்ளியில் தொடக்கக் கல்வியும் 2009 ஆம் ஆண்டில் அசாரிபாக்கில் உள்ள டி.ஏ.வி பொதுப் பள்ளியில் இடைநிலைப் படிப்பையும் முடித்தார். 2014 ஆம் ஆண்டில் சேவியர் சமூக சேவை நிறுவனத்தில் மேலாண்மை பாடத்தில் முதுநிலை பட்டயம் படித்து தேர்ச்சி பெற்றார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டில் அசாரிபாக்கு வினோபா பாபே பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டம் முடித்தார் [5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Barkagaon Election Result Updates: INC's Amba Prasad currently leading - Elections News". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ "For first time, 10 women MLAs get entry into Jharkhand Assembly". uniindia.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ "Father, mother and now daughter: Meet Jharkhand's Barkagao MLA Amba Prasad of Congress | Elections News". India TV. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ Joshi, Manas (2019-12-24). "Father, mother and now daughter: Meet Jharkhand's Barkagao MLA Amba Prasad of Congress". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
- ↑ "Amba Prasad : पिता जेल में और मां तड़ीपार, जानिए कौन हैं झारखंड की घोड़ेवाली विधायक". navbharattimes. 9 March 2022. https://navbharattimes.indiatimes.com/state/jharkhand/hazaribagh/amba-prasad-kaun-hain-who-is-congress-mla-amba-prasad-know-about-jharkhand-horse-rider-mla/articleshow/90105629.cms.
- ↑ "Jharkhand: Ex-minister Yogendra Sao, MLA Nirmala Devi convicted in Barkagaon shooting case". avenuemail. 22 March 2022. https://avenuemail.in/jharkhand-ex-minister-yogendra-sao-mla-nirmala-devi-convicted-in-barkagaon-shooting-case/.