அம்பை - 11 (நெல்)

அம்பை - 11 (ASD 11) பிரபலமாக ஒட்டு கிச்சிலி (Ottu kichili) எனப்படும் இந்த நெல் வகை, ஜி இ பி - 24 நெல் இரகத்தையும், பீ டீ பி - 15 நெல் இரகத்தையும், (GEB24 / PTB15) இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 11
ASD 11
வேளாண் பெயர்
ஒட்டு கிச்சிலி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
150 - 155 நாட்கள்
மகசூல்
4500 கிலோஎக்டேர்
வெளியீடு
1995
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1995 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

தொகு

நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

தொகு

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 11 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

தொகு
  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 4500 கிலோவரை ( 4.5 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர், சாகுபடி செய்ய பிசாணப் பருவம் மிகவும் உகந்தது.
  • காலங்கடந்த நடவு முறைக்கு ஏற்ற நெல் வகையாகும்.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் மிதமான சன்ன வடிவில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.
  2. 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 11". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_11_(நெல்)&oldid=3793750" இலிருந்து மீள்விக்கப்பட்டது