அம்மன் காசு

அம்மன் காசு என்பது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் மன்னர்கள் வெளியிட்ட நாணயம் ஆகும். இந்த நாணயத்தின் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் அதற்குபுதுக்கோட்டை அம்மன் காசு என்ற பெயர் ஏற்பட்டது.[1] இக்காசை புதுக்கோட்டை அம்மன் சல்லி என்றும் அழைப்பார்கள்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒரு அம்மன் காசு (1889-1906)

மதிப்பீடு

தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம். இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள் என்றும், அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டுவந்ததாக கூறிக்கொண்டனர்.

குறிப்புகள்

தொகு
  1. "அம்மன் காசு!". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 9, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்_காசு&oldid=3924512" இலிருந்து மீள்விக்கப்பட்டது