அம்மர் லாகசு
அம்மர் லாகசு (Hammar Lacus ) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும்[1]
48.6°வ மற்றும் 308.29° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் [2] டைட்டனின் மேற்பரப்பில், குறுக்களவில் 200 கிலோமீட்டர் விட்டமும், 18600 கிலோமீட்டர் 2 பரப்பளவும்[3] கொண்டுள்ளதால் டைட்டனில் உள்ள மூன்றாவது பெரிய ஏரியாக அம்மர் ஏரி கருதப்படுகிறது. திரவ ஈத்தேனும் மீத்தேனும் [4] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. ஈரான் நாடிலுள்ள அம்மர் ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு அம்மர் லாகசு என்று பெயரிடப்பட்டது. உலகளாவிய வானியல் ஒன்றியம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 3 இல் இப்பெயரை அங்கீகரித்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Map of the liquid bodies in the north polar region of Titan.
- ↑ 2.0 2.1 "Hammar Lacus". Gazetteer of Planetary Nomenclature. International Astronomical Union (IAU) Working Group for Planetary System Nomenclature (WGPSN). 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
- ↑ Shannon M. MacKenzie; Jason W. Barnes; Christophe Sotin; Jason M. Soderblom; Stéphane Le Mouélic; Sebastien Rodriguez; Kevin H. Baines; Bonnie J. Buratti et al. (2014-10-02). "Evidence of Titan's climate history from evaporite distribution". Icarus 243: 195. doi:10.1016/j.icarus.2014.08.022. Bibcode: 2014Icar..243..191M. http://www.barnesos.net/publications/papers/2014.11.Icarus.MacKenzie.EvaporiteDistribution.pdf. பார்த்த நாள்: 2015-10-16.
- ↑ Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.