அம்மா திருவடி கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அம்மாதிருவடி கோயில் (Ammathiruvadi Temple) அல்லது வலயதீஸ்வரி கோயில் என்பது கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில் ஊரகம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இந்த அற்புதமான பண்டைய தேவி கோயிலானது திருச்சூர் நகரத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், திருச்சூர் நோக்கி பயணிக்கும் போது இரிஞ்ஞாலகுடா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட அதே தோலைவிலும் அமைந்துள்ளது.
அம்மாதிருவடி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | திருச்சூர் மாவட்டம் |
அமைவு: | ஊரகம், திருச்சூர் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளம் |
இங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற கோயிலானது, முக்கியமான 108 துர்க்கை கோயில்களில் முதன்மையானது, இது "அம்மாதிருவாடி கோயில்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
ஊரகம் அம்மதிருவாடி கோயிலானது அதன் கம்பீரமான இராஜகோபுரம், மதில்கெட்டு (மதில் சுவர்கள்), ஊதுபுரா (உணவு மண்டபம்), நாலம்பலம் (கருவறையை ஓட்டி சுற்றியுள்ள கட்டிடம்), இரட்டை அடுக்கு மாடி ஸ்ரீகோவில் (கருவறை ) ஆகியவற்றைக் கொண்ட ஒரு கட்டடக்கலை அற்புதம்..
கேரளத்தின் 108 துர்காலயங்களில் (துர்கை கோயில்களில்) முதன்மையானது வலயதீஸ்வரி கோயில் அல்லது ஊரகம் அம்மதிருவாடி கோயில் என்று அழைக்கப்படுகிறது. புராணங்களின் கூற்றுப்படி, கேரளத்தை மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் கடலில் இருந்து மீட்டு தனது பரசு (கோடரியை) கன்னியாகுமரியிலிருந்து கோகர்ணத்துக்கு எறிந்து இந்த நிலத்தை 64 கிராமங்களாகப் பிரித்தார். இந்த பார்கவா நிலத்தின் செழிப்புக்கும், நல்வாழ்வுக்கும், துர்கையின் தீங்கற்ற ஆசீர்வாதம் பெறுவது அவசியம் என்பதை உணர்ந்த அவர், துர்கை கோயிலுக்கு 108 இடங்களை அடையாளம் கண்டார். இந்த கோயில்களின் இருப்பிடங்கள் பரமசிவனின் மனைவியான சதி தேவியின் உடல் பாகங்கள் சிதறிய இடங்களைக் குறிக்கின்றன, தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி தட்சனின் யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார்.
கோயில் வரலாறு
தொகுகடுமையான இயற்கை சீற்றத்தில் சிக்கியபோது ஒரு மரியாதைக்குரிய நம்பூதிரி குடும்பம் இந்த கோயிலை நிறுவியதாக கருதப்படுகிறது. இங்கு கருவறையில் உள்ள அம்பிகையை மயிலிறகால் மட்டுமே தூய்மைப்படுத்துவார்கள்.