அம்மோனியம் பெர்புரோமேட்டு

வேதிச் சேர்மம்

அம்மோனியம் பெர்புரோமேட்டு (Ammonium perbromate) என்பது NH4BrO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். அம்மோனியம் பெர்குளோரேட்டுடன் ஒத்த பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறது ஆனால் இதை தனிமைப்படுத்துவது கணிசமாக மிகவும் கடினமாகும். மேலும் சிதைவடைவதில் சிக்கலான வழிமுறையைக் கொண்டுள்ளது.[1][2][3]

அம்மோனியம் பெர்புரோமேட்டு
அம்மோனியம் நேர்மின் அயனியும் பெர்புரோமேட்டு எதிர் மின் அயனியும்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசேனியம் பெர்புரோமேட்டு
வேறு பெயர்கள்
அம்மோனியம் பெர்புரோமேட்டு
இனங்காட்டிகள்
28037-93-6
ChemSpider 13687751
InChI
  • InChI=1S/BrHO4.H3N/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);1H3
    Key: MMQCMMVCGMXMPN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23293222
  • [NH4+].[O-]Br(=O)(=O)=O
பண்புகள்
NH4BrO4
வாய்ப்பாட்டு எடை 161.94 கி/மோல்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

அம்மோனியம் பெர்புரோமேட்சு அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும். அம்மோனியம் பெர்குளோரேட்டைப் போன்ற கரைதிறன்களையும் கொண்டிருக்கிறது. அம்மோனியம் பெர்குளோரேட்டுடன் ஒப்பிடுகையில் அம்மோனியம் பெர்புரோமேட்டு மிகக் குறைவான நீருறிஞ்சும் தன்மையைப் பெற்றுள்ளது. அதிக ஈரப்பதம் உள்ள வளிமண்டலத்தில் பராமரிக்கப்படும் போது எடை அதிகரிப்பை காட்டுகிறது.[2]

அம்மோனியம் பெர்புரோமேட்டு 170 மற்றும் 180 பாகை செல்சியசுக்கு இடைப்பட்ட வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்குகிறது. மேலும் சில சமயங்களில் வெடிப்பதையும் அவதானிக்க முடிந்தது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Hull, Katherine L.; Cairns, Amy J.; Haq, Marium (19 February 2019). "Bromate Oxidation of Ammonium Salts: In Situ Acid Formation for Reservoir Stimulation". Inorganic Chemistry 58 (5): 3007–3014. doi:10.1021/acs.inorgchem.8b02891. பப்மெட்:30777427. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.8b02891. பார்த்த நாள்: 31 August 2024. 
  2. 2.0 2.1 2.2 Keith, James N.; Solomon, Irving J. (16 May 1969). "Ammonium Perbromate". Inorganic Chemistry 9 (6): 1560–1561. doi:10.1021/ic50088a051. https://pubs.acs.org/doi/10.1021/ic50088a051. பார்த்த நாள்: 31 August 2024. 
  3. Pisarenko, Aleksey N.; Young, Robert; Quiñones, Oscar; Vanderford, Brett J.; Mawhinney, Douglas B. (22 July 2011). "Two New Methods of Synthesis for the Perbromate Ion: Chemistry and Determination by LC-MS/MS". Inorganic Chemistry 50 (18): 8691–8693. doi:10.1021/ic201329q. பப்மெட்:21780765. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic201329q. பார்த்த நாள்: 31 August 2024.