அயன் பீம்
அயன் பீம் (Iron Beam) என்பது ஒரு நேரடி ஆற்றல் ஆயுதமும் வான் பாதுகாப்பு முறையும் ஆகும். இது சிங்கப்பூர் வான் கண்காட்சியின்போது பெப்ரவரி 11, 2014,[1] அன்று காட்சிப்படுத்தப்பட்டதும் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தித் துறையான இரபாயெல் மேம்பட்ட பாதுகாப்பு முறையால் ஆகஸ்து 17, 2020 அன்று ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் ஆகும்.[2][3][4] இது குறுகிய தூர ஏவுகணைகள், எறிகணைகள், சிறு பீரங்கிகள் என்பவற்றை அழிக்க வடிவமைக்கப்பட்டது. இது 7 km (4.3 mi) வரையான வீச்செல்லையுடன், எறிபொருட்களை திறமையாகக் தடுக்கும் அயன் டோம் முறைக்கு மிகவும் நெருக்கமானது.[4][5] அத்துடன் இது ஆளில்லாத வானூர்திகளையும் எதிர்கொள்ளக்கூடியது.[6] அயன் பீம் இஸ்ரேலின் ஒருங்கமைக்கப்பட்ட வான் பாதுகாப்பு முறையின் ஐந்தாவது மூலமாக[4] அரோ 2, அரோ 3, தாவீதின் கவன், அயன் டோம் ஆகியவற்றுடன் இணையவுள்ளது.[7] ஆயினும், இது தனியாக பயன்படுதத்தப்பட்டுள்ளது.[6]
Light Beam | |
---|---|
வகை | சீரொளி வான் பாதுகாப்பு முறை |
அமைக்கப்பட்ட நாடு | இஸ்ரேல் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2020-தற்போது |
பயன் படுத்தியவர் | இஸ்ரேல் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | இரபாயெல் மேம்பட்ட பாதுகாப்பு முறை |
வடிவமைப்பு | 2014 |
உசாத்துணை
தொகு- ↑ http://www.rafael.co.il/Marketing/195-1951-en/Marketing.aspx
- ↑ "Israel deploys first-of-its-kind laser system to Gaza border to fight incendiary balloons".
- ↑ Hana Levi Julian (11 August 2020). "Israel Deploys 'Light Saber' Anti-Balloon Laser to Shoot Down Threats from Gaza". https://www.jewishpress.com/news/israel/idf/israel-deploys-light-saber-anti-balloon-laser-to-shoot-down-threats-from-gaza/2020/08/11/.
- ↑ 4.0 4.1 4.2 Williams, Dan (Jan 19, 2014). "Israel plans laser interceptor 'Iron Beam' for short-range rockets". JERUSALEM: Reuters. https://www.reuters.com/article/us-arms-israel-interceptor-idUSBREA0I06M20140119.
- ↑ Israeli company to unveil laser defense | UTSanDiego.com
- ↑ 6.0 6.1 RAFAEL Develops a New High Energy Laser Weapon | Defense Update:
- ↑ Israel's Rafael to unveil laser-based defense system – Diplomacy and Defense Israel News | Haaretz