அயர்லாந்து கால்பந்துச் சங்கம்
அயர்லாந்து கால்பந்துச் சங்கம் (Irish Football Association, IFA), வடக்கு அயர்லாந்தின் சங்கக் கால்பந்து நிர்வாக அமைப்பாகும்; வழமையாக அயர்லாந்து தீவு முழுமைக்குமான கால்பந்து நிர்வாக அமைப்பு இதுவாகும். 1921 வரை (அல்லது 1950 வரை - எடுத்துக்கொள்ளப்படும் கால்பந்துப் போட்டியைப் பொறுத்து) அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை தேர்ந்தெடுத்து நிர்வகித்தது இச்சங்கமேயாகும்; அதன்பிறகு, வடக்கு அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை தேர்ந்தெடுத்து நிர்வகிக்கும் பொறுப்பு இதன் பணியாகவுள்ளது.
யூஈஎஃப்ஏ | |
---|---|
தோற்றம் | 1880 |
ஃபிஃபா இணைவு | 1911 |
யூஈஎஃப்ஏ இணைவு | 1954 |
ஐஎஃப்ஏபி இணைவு | 1886 |
தலைவர் | Jim Shaw |
இணையதளம் | www.irishfa.com |
பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தின் உறுப்புச் சங்கமான அயர்லாந்து கால்பந்துச் சங்கம், ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளது.
இதனை, அயர்லாந்துக் குடியரசு கால்பந்துச் சங்கத்துடன் (Football Association of Ireland) குழப்பிக்கொள்ளக்கூடாது.
குறிப்புதவிகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Official Irish FA Website
- Official Irish FA Youtube Channel
- Official Irish FA Bebo page
- Northern Ireland Women's Football Association
- Northern Ireland பரணிடப்பட்டது 2014-01-25 at the வந்தவழி இயந்திரம் at FIFA site
- Northern Ireland at UEFA site