அயல் திசுக்கட்டி
அயல் திசுக்கட்டி ( teratoma) என்பது ஒரு வகையான கட்டி ஆகும். இது பல இழையங்களில் உருவாகும் தன்மை கொண்டவை.[1] குறிப்பாக முடி, தசை மற்றும் எலும்பு போன்ற பல்வேறு வகைப்பட்ட திசுக்களால்உருவாகும் கட்டிகளாகும். இவை சூலகம், விந்தகம் போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாகவும் மற்ற பகுதிகளில் குறைவாகவும் உருவாகின்றன.[1] கட்டியானது சிறிய அளவில் இருந்தால் அதன் அறிகுறியும் சிறிய அளவில் இருக்கும்.[2] விந்தகத்தில் அயல் திசுக் கட்டிகள் உருவானால் அங்கு வலியற்ற வீக்கம் ஏற்படலாம்.[3] அயல்திசுக் கட்டிகளினால் சூலக முறுக்கு மற்றும் விந்தக முறுக்கு அல்லது பிண்ட நீர்க்கோவை போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.[2][3][4]
அயல் திசுக்கட்டி இருவகைப்படும். அவையாவன முதிர்ந்த அயல் திசுக்கட்டி மற்றும் முதிர்ச்சியற்ற அயல் திசுக்கட்டி ஆகியன ஆகும். முதிர்ந்த அயல்திசுக்கட்டியானது தோல்கட்டி மற்றும் ஆறும்கட்டி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.[5] முதிர்ச்சியற்ற அயல் திசுக்கட்டியானது புற்றுநோய் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.[1][5][6] சூலகத்தில் தோன்றக்கூடிய பெரும்பானமையான அயல் திசுக்கட்டிகள் முதிர்ந்த கட்டிகளாகவே காணப்படுகின்றன.[7] விடலைப் பருவத்தினருக்கு விரைச்சிரையில் தோன்றக்கூடிய அயல் திசுக்கட்டிகளால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.[8] உடல்திசு ஆய்வின் மூலம் இதனைத் துல்லியமாகக் கண்டறியலாம்.[2]
சூலக அயல் திசுக்கட்டி மற்றும் விரைச்சிரையில் தோன்றக்கூடிய அயல் திசுக்கட்டி போன்றவற்றினை குணப்படுத்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.[9][10][11] அயல் திசுக்கட்டிகளுக்கு பொதுவாக வேதிச் சிகிச்சைகள்மேற்கொள்ளபடுகிறது.[7][10]
ஆண்களை விட அதிக அளவில் பெண்களே இத்னால் பாதிக்கப்படுகின்றனர்.[9] நடுத்தர வயதிலேயே சூலக அயல் திசுக்கட்டிகளால் பாதிக்கப்படுவதைக் கண்டறியப்படுகிறது.[7] விரைச் சிரை அயல்திசுக் கட்டிகளானது குழந்தைகள் மற்றும் விடலைப் பருவம் போன்றவர்களைப் பாதிக்கின்றது.[12] இந்த சொல்லானது கிரேக்க வார்த்தையான அரக்கர் (மான்ஸ்டர்) மற்றும் கட்டி போன்ற வார்த்தைகளிருந்து வந்தது.[13]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "NCI Dictionary of Cancer Terms". National Cancer Institute. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Sacrococcygeal Teratoma". NORD (National Organization for Rare Disorders). 2007. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
- ↑ 3.0 3.1 Raja, Shahzad G. (2007). Access to Surgery: 500 single best answer questions in general and systematic pathology (in ஆங்கிலம்). PasTest Ltd. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781905635368.
- ↑ Saba, Luca; Acharya, U. Rajendra; Guerriero, Stefano; Suri, Jasjit S. (2014). Ovarian Neoplasm Imaging (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781461486336.
- ↑ 5.0 5.1 "Mature teratoma". National Cancer Institute. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
- ↑ Noor, Mohd Rushdan Md; Hseon, Tay Eng; Jeffrey, Low Jen Hui (2014). Gynaecologic Cancer: A Handbook for Students and Practitioners (in ஆங்கிலம்). CRC Press. p. 446. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814463065.
- ↑ 7.0 7.1 7.2 Falcone, Tommaso; Hurd, William W. (2007). Clinical Reproductive Medicine and Surgery (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 749. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0323033091.
- ↑ Oyasu, Ryoichi; Yang, Ximing J; Yoshida, Osamu (2009). Questions in Daily Urologic Practice: Updates for Urologists and Diagnostic Pathologists (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9784431728191.
- ↑ 9.0 9.1 Davies, Mark; Inglis, Garry; Jardine, Luke; Koorts, Pieter (2012). Antenatal Consults: A Guide for Neonatologists and Paediatricians - E-Book (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 072958108X.
- ↑ 10.0 10.1 Price, Pat; Sikora, Karol; Illidge, Tim (2008). Treatment of Cancer Fifth Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 713. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780340912218.
- ↑ Hillard, Paula J Adams; Hillard, Paula Adams (2008). The 5-minute Obstetrics and Gynecology Consult (in ஆங்கிலம்). Lippincott Williams & Wilkins. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781769426.
- ↑ McDougal, W Scott; Wein, Alan J; Kavoussi, Louis R; Novick, Andrew C; Partin, Alan W; Peters, Craig A.; Ramchandani, Parvati (2011). Campbell-Walsh Urology 10th Edition Review E-Book (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 663. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1455723177.
- ↑ Chang, Alfred E; Ganz, Patricia A; Hayes, Daniel F; Kinsella, Timothy; Pass, Harvey I; Schiller, Joan H; Stone, Richard M; Strecher, Victor (2007). Oncology: An Evidence-Based Approach (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 848. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387310565.