அயோடின் சல்பேட்டு

வேதிச் சேர்மம்

அயோடின் சல்பேட்டு (Iodine sulfate) என்பது I2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடினும் கந்தக அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அயோடின் சல்பேட்டு இள மஞ்சள் நிறத்தில் படிகங்களாகக் காணப்படும். தண்ணீருடன் வினைபுரியும்.[1]

அயோடின் சல்பேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அயோடின்(III) சல்பேட்டு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • [I3+].[I3+].[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-]
பண்புகள்
I2(SO4)3
தோற்றம் இளம் மஞ்சள் நிறப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஈரயோடோசில் சல்பேட்டு சேர்மத்துடன் கந்தக டிரையாக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து அயோடின் சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது.:[2][3][4]

(IO)2SO4 + 2SO3 -> I2(SO4)3

தனிமநிலை அயோடின், அயோடின் பெண்டாக்சைடு ஆகியவை கந்தக டிரையாக்சைடுடன் வினைபுரிந்தாலும் அயோடின் சல்பேட்டு உருவாகும்.[5]

இயற்பியல் பண்புகள்

தொகு

இளம் மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக அயோடின் சல்பேட்டு உருவாகிறது.[2][3][6]

வேதிப் பண்புகள்

தொகு

அயோடின் சல்பேட்டு கரிமக் கரைப்பான்களில் கரையும்.[3] நீரற்ற மற்றும் வலுவான அமில கரைப்பான்களில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[6] வளிமண்டல ஈரப்பதத்தின் செல்வாக்கின் கீழ் இது அயோடின் வெளியீட்டின் காரணமாக கருமையாகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Kasumov; Koz'min; Zefirov (1997). "Chemistry of inorganic sulfonates and sulfates of polyvalent iodine". Russian Chemical Reviews 66 (10): 843-857. doi:10.1070/RC1997v066n10ABEH000282. 
  2. 2.0 2.1 2.2 Fichter; Kappeler (1915). "Neue Beobachtungen an Jodisalzen". ZAAC 91: 134-144. doi:10.1002/ZAAC.19150910109. 
  3. 3.0 3.1 3.2 Argument, Cyril (1944). "The iodous sulphates". Durham theses (Durham University). https://etheses.dur.ac.uk/9113/. "According to the equation: (IO)2SO4 + 2SO3 = I2(SO4)3 ... the yellow crystals could be isolated. They showed properties typical of a neutral iodine salt, being specially sensitive to moisture. [Fichter et al.] showed that the compound was mainly neutral iodine sulphate I2(SO4)3 ... the neutral salts have a much lighter yellow colour[,] a greater solubility in organic liquids and a greater sensitivity to water.". 
  4. Selte, Kari; Kjekshus, Arne (1971). "Iodine Oxides. Part IV. Solid Compounds Formed in the Systems H2O—SO3—I2On (n=3, 4, and 5)". Acta Chem. Scand. 25 (2): 751-752. doi:10.3891/acta.chem.scand.25-0751. 
  5. Lehmann, Hans-Albert; Hesselbarth, Heinz (1959). "Zur Chemie des Schwefeltrioxyds. XI. Zur Kenntnis der SO3-Verbindungen des J2O5 und J2O4". ZAAC 299 (1-2): 51-57. doi:10.1002/zaac.19592990107. 
  6. 6.0 6.1 Kraszkiewicz, Lukasz; Skulski, Lech (2008). "Facile Syntheses of Symmetrical Diaryliodonium Salts from Various Arenes, with Sodium Metaperiodate as the Coupling Reagent in Acidic Media". Synthesis 15: 2373-2380. doi:10.1055/s-2008-1067169. https://archive.org/details/sim_synthesis_2008-08-01_15/page/n79. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_சல்பேட்டு&oldid=4174499" இலிருந்து மீள்விக்கப்பட்டது