அயோத்தி படைவீரர் குடியிருப்பு
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஒரு குடியிருப்பு பகுதி
அயோத்தி படைவீரர் குடியிருப்பு (Ayodhya Cantonment) இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகரத்திற்கு அருகில் உள்ளது. 1858ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நகரம் இன்று முதலாம் தர இராணுவ முகாமாக உள்ளது.[3][4][5] 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் பைசாபாத் படைவீரர் குடியிருப்பு நகரம் என்ற பெயரை அயோத்தி படைவீரர் குடியிருப்பு நகரம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியது.
அயோத்தி படைவீரர் குடியிருப்பு Ayodhya Cantonment | |
---|---|
படைவீரர் குடியிருப்புப் பகுதி | |
ஆள்கூறுகள்: 26°47′47″N 82°08′01″E / 26.796444°N 82.133665°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | அயோத்தி மாவட்டம் |
தோற்றுவித்தவர் | பிரித்தானிய இந்திய இராணுவம் |
அரசு | |
• வகை | படைவீரர் குடியிருப்பு வாரியம் |
• நிர்வாகம் | அயோத்தி படைவீரர் குடியிருப்பு வாரியம், பாதுகாப்புத் துறை அமைச்சகம்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 19.68 km2 (7.60 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 12,391 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி, அவதி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | யூபி 42 |
இணையதளம் | faizabad |
மக்கள்தொகை
தொகுஇந்திய அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அயோத்தி படைவீரர் குடியிருப்பு நகரத்தில் 2,014 வீடுகளில் 12,391 மக்கள் வசித்து வந்தனர்.[6]
- இதில் 7,744 ஆண்களும் 4,647 பெண்களும் இருந்தனர்.</ref>பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 600.1 பெண்கள் என்ற அளவில் இருந்தது.
- ஆறு மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் 1,368 பேர் இருந்தனர்.[6] இதில் 716 சிறுவர்களும் 652 சிறுமிகளும் இருந்தனர். சிறுவர்களுக்கான பாலின விகிதம் 1,000 சிறுவர்களுக்கு 910.6 சிறுமிகள் என்ற அளவாக இருந்தது.
- மொத்த மக்கள் தொகையில் 9, 783 பேர் அதாவது மொத்த மக்கள் தொகையில் 89 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்ற ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். 6,595 ஆண்கள் மற்றும் 3,188 பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களின் பட்டியலில் இருந்தனர்.
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Home page", Ayodhya Cantonment Board, Ministry of Defence,
The Cantonment Board Ayodhya (CBA) is an autonomous body under the control of Ministry of Defence, Govt. of India and discharges obligatory and discretionary functions as per the provisions of Cantonment Act 2006.
- ↑ 2.0 2.1 2.2 "A-04: Citys and urban agglomerations classified by population size class in 2011 with variation between 1901 and 2011 - Class I (population of 100,000 and above)", 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, Office of the Registrar General & Census Commissioner, India
- ↑ "Faizabad Cantt to be renamed as Ayodhya Cantt, Defence Minister approves the proposal". The Free Press Journal. 4 October 2022. https://www.freepressjournal.in/india/faizabad-cantt-to-be-renamed-as-ayodhya-cantt-defence-minister-approves-the-proposal.
- ↑ "Rajnath Singh approves renaming of Faizabad Cantt as Ayodhya Cantt". தி எகனாமிக் டைம்ஸ். 4 October 2022. https://economictimes.indiatimes.com/news/defence/rajnath-singh-approves-renaming-of-faizabad-cantt-as-ayodhya-cantt/articleshow/94646406.cms.
- ↑ "Defence Minister Approves Renaming Faizabad Cantt As Ayodhya Cantt: Report". NDTV. 4 October 2022. https://www.ndtv.com/india-news/defence-minister-rajnath-singh-approves-renaming-faizabad-cantt-as-ayodhya-cantt-report-3402901.
- ↑ 6.0 6.1 "Basic Population Figures of India, States, Districts, Sub-District and City (Without Ward), 2011", 2011 Census of India, Office of the Registrar General & Census Commissioner, India
- ↑ "PCA REL: Primary Census Abstract - By religion – Uttar Pradesh", 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, Office of the Registrar General & Census Commissioner, India
புற இணைப்புகள்
தொகு- படைவீரர் குடியிருப்பு வாரியம், வலைத்தளம்
- cbfaizabad.org