அயோலோசைட்டு

சோடியம் பிசுமத் சல்பேட்டு கனிமம்

அயோலோசைட்டு (Aiolosite) என்பது Na4Bi(SO4)3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் இக்கனிமத்தை Aio என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[1] அரியவகை சோடியம் பிசுமத்து சல்பேட்டு கனிமம் என்றும் இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள வல்கேனோ தீவில் அயோலோசைட்டு கனிமம் காணப்படுகிறது. ஏயோலசு என்ற கிரேக்க புராணக் கதாபாத்திரத்திலிருந்து இக்கனிமத்திற்கான அயோலோசைட்டு என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது..[2]

அயோலோசைட்டு கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் ஒரே இடம்

மேற்கோள்கள்

தொகு
  1. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  2. Aiolosite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோலோசைட்டு&oldid=4128552" இலிருந்து மீள்விக்கப்பட்டது