அய்யாசாமி தருண்
அய்யாசாமி தருண் (Ayyasamy Dharun, திசம்பர் 31, 1996) 400 மீட்டர்கள் மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி நிகழ்வுகளில் சிறப்புப் பயிற்சி செய்யும் இந்திய மெய்வல்லுநர். 2016 இரியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 4 × 400 மீட்டர்கள் தொடரோட்டத்தில் பங்கு பெறத் தகுதிபெற்றுள்ளார்.
தனித் தகவல்கள் | |
---|---|
பிறந்த நாள் | 31 திசம்பர் 1996 |
பிறந்த இடம் | திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகள விளையாட்டு |
நிகழ்வு(கள்) | 400 மீட்டர்கள், 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி |
சாதனைகளும் பட்டங்களும் | |
தன்னுடைய சிறப்பானவை | 400 மீ: 48.24 வினாடிகள் (பெங்களூர் 2013) 400 மீ தடை: 50.51 வினாடிகள் (பெங்களூர் 2016) |
இளமை வாழ்க்கை
தொகுதருண் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி அருகில் உள்ள இரவுத்தம்பாளையத்தில் திசம்பர் 31, 1996இல் பிறந்தார்.[1] அவர் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே காச நோயால் தந்தையை இழந்தார். தருணின் அன்னை பள்ளி ஆசிரியையாக உள்ளார். தருணின் தமக்கை சத்தியாவும் தமிழ்நாட்டு கைப்பந்தாட்ட அணியில் விளையாடுகின்றார்.[2][3]
தருண் கர்நாடகாவின் மூடுபிதிரியில் உள்ள ஆல்வா கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.[4] தடகள விளையாட்டுக்களுக்கு மாறுவதற்கு முன்னதாக பத்தாம் வகுப்பில் தமிழ்நாடு கோ-கோ அணியில் விளையாடியுள்ளார்.[2][5]
விளையாட்டு
தொகுதருண் 2016ஆம் ஆண்டு குவகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்; இதனை 50.54 வினாடிகளில் கடந்தார்.[6]
சூலை 2016இல் பெங்களூரில் நடந்த தகுதிப் போட்டிகளில் தருண் தேசிய 4 × 400 மீட்டர் தொடரோட்டப்போட்டியில் வென்ற அணியில் அங்கம் பெற்றிருந்தார். தருண், மொகமது அனாசு, குஞ்ஞு மொகமது மற்றும் ஆரோக்கிய ராசீவ் அடங்கிய நால்வரணி 3:00:91 நேரத்தில் கடந்து சாதனை புரிந்தது; இது இவர்களே துருக்கியில் நான்கு வாரங்களுக்கு முன்பாக எடுத்திருந்த 3:02.17 நேரத்தை விடக் குறைவானதாகும். இந்த செயல்திறனால் இந்த தொடரோட்ட அணி உலகத் தரவரிசையில் 13ஆம் இடத்தை எட்ட முடிந்தது.[7] ஒலிம்பிக் போட்டி ஒன்றில் இந்திய ஆண்கள் தொடரோட்ட அணி பங்கு பெறுவது மூன்றாம் முறையாகும்; முன்னதாக 1964இலும் 2000இலும் பங்கேற்றுள்ளனர்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Exporters' assn gives 1 lakh to Olympian". The Times of India. 23 July 2016. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Exporters-assn-gives-1-lakh-to-Olympian/articleshow/53349563.cms. பார்த்த நாள்: 4 August 2016.
- ↑ 2.0 2.1 RSI, Prasad (14 July 2016). "From Tamil Nadu bylanes to Rio track". The Times of India. http://timesofindia.indiatimes.com/indiario/athletics/From-Tamil-Nadu-bylanes-to-Rio-track/articleshow/53203475.cms. பார்த்த நாள்: 4 August 2016.
- ↑ "Ayyasamy Dharun Profile: 4x400m Relay". The Indian Express. 1 August 2016. http://indianexpress.com/sports/rio-2016-olympics/ayyasamy-dharun-profile-india-400m-relay-medal-records-2947842/. பார்த்த நாள்: 4 August 2016.
- ↑ Kumar, R Vimal (23 July 2016). "Youth from Avinashi qualifies for Olympics". The Hindu (PressReader). http://www.pressreader.com/india/the-hindu/20160723/282531542758299. பார்த்த நாள்: 4 August 2016.
- ↑ Swaminathan, Swaroop (12 July 2016). "Run that has changed quarter-miler Dharun’s world". The New Indian Express. http://www.newindianexpress.com/sport/Run-that-has-changed-quarter-miler-Dharun%E2%80%99s-world/2016/07/12/article3524687.ece. பார்த்த நாள்: 4 August 2016.
- ↑ "South Asian Games: India Win 11 Out of 12 Medals in Athletics". NDTV. 11 February 2016 இம் மூலத்தில் இருந்து 25 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160825204039/http://sports.ndtv.com/othersports/news/255399-south-asian-games-india-win-11-out-of-12-medals-in-athletics. பார்த்த நாள்: 4 August 2016.
- ↑ "India's 4x400m relay teams qualify for Rio Olympics". Rediff. 10 July 2016. http://www.rediff.com/sports/report/impressive-indias-mens-4x400m-relay-team-qualify-for-rio-olympics/20160710.htm. பார்த்த நாள்: 2 August 2016.
வெளி இணைப்புகள்
தொகு- IAAF profile
- Rio 2016 profile பரணிடப்பட்டது 2016-08-06 at the வந்தவழி இயந்திரம்