அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி

அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரியில் செயற்பட்டுவரும் ஆண்களுக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) B++ தரத்துடன் செயற்பட்டு வருகிறது. பேராசிரியர் பி. இரவிக்குமார் இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.

அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி
குறிக்கோளுரையாதும் ஊரே யாவரும் கேளிர்
வகைஅரசினர் ஆடவர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1964
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
முதல்வர்பி. இரவிக்குமார்
அமைவிடம், ,
இணையதளம்gacmenkrishnagiri.org

கல்லூரி வரலாறு தொகு

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி 1964-ம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய இப்பகுதியில், உயர்கல்வி பயில ஒரு கல்லூரி தொடங்க வேண்டுமென்ற ஆர்வமும், அதற்காக பொதுமக்கள் வழங்கிய நன்கொடையும், தமிழக அரசு இக்கலைக் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்தன. 15.10.1964-ல் மாண்புமிகு முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் அவர்களால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.

1982-83 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி ஆய்வு நிறுவனமாக சென்னைப் பல்கலைக் கழகத்தினரால் அறிந்தேற்பு செய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்