அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர்

பர்கூர் அரசினர் பொறியியற் கல்லூரி (Government College of Engineering, Bargur) 1994–1995ஆம் கல்வி ஆண்டில் அப்போதைய தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில்(தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது) பர்கூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. கல்வி வசதியில் பின் தங்கியிருந்த அம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆணை பிறப்பிக்கப்பட்டு, அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் அனுமதி பெறப்பட்டு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]

அரசினர் பொறியியற் கல்லூரி பர்கூர்
வகைபொறியியல் கல்லூரி, இருபாலர், அரசு
உருவாக்கம்1994
முதல்வர்பி. திருமால்
அமைவிடம், ,
வளாகம்50 ஏக்கர்கள் (200,000 m2)
சுருக்கப் பெயர்GCE, Bargur
இணையதளம்http://www.gcebargur.ac.in

இருப்பிடம்

தொகு

முதன்முதலாக இக்கல்லூரி 09-11-1994 அன்று முதல் கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இரண்டு துறைகளுடன் செயல்படத் துவங்கியது. பிறகு இந்த கல்லூரியானது பர்கூர் அருகேயுள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்பு 5-7-2000 முதல் நிலையாக செயல்படத்தொடங்கியது. இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மேலும் இக்கல்லூரியானது அமைதியான மலைகள் சூழ்ந்த இடத்தில் படிப்பதற்கேற்ப வகையில் அமைந்துள்ளது.

துறைகள்

தொகு

பொறியியல் சார்ந்த துறைகள்

  • தற்போது இந்தக்கல்லூரியில் முழு நேரப்படிப்பில் பொறியியல் சம்பந்தப்பட்ட நான்கு துறைகள் உள்ளன.
  1. மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை
  2. மின்னியல் மற்றும் தகவல் தொடர்பு துறை
  3. கணிப்பொறியியல் துறை
  4. இயந்திர பொறியியல் துறை பரணிடப்பட்டது 2017-09-16 at the வந்தவழி இயந்திரம்

இது தவிர பகுதி நேரப்படிபபில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை உள்ளது

பொறியியல் சாராத துறைகள்

  1. இயற்பியல்
  2. வேதியியல்
  3. கணிதம்
  4. ஆங்கிலம்

இது தவிர நூலகமும் விளையாட்டுகளும் உளளன

அமைப்புகள்

தொகு
  • கல்வியுடன் சேர்ந்த பிற அமைப்புகளும் உள்ளன
  • இரத்ததானம், எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இளம் செஞ்சிலுவை சங்கம் உள்ளது
  • தேசிய மாணவர் படை,மற்றும் மாணவர்களின் கலை மற்றும் பிற மொழிப்புலமைகளை வளர்க்க தமிழ் மன்றம் மற்றும் ஆங்கில இலக்கிய கூட்டமைப்பு ஆகியனவும் உள்ளன.

கல்லூரியில் மாணவர்கள் இந்திய அளவிலான தங்கள் விளையாட்டு திறமைகளை வளர்த்துக்கொள்ள தேவையான விளையாட்டு மைதான வசதிகளும் உள்ளளன.

  • வருடந்தோறும் கல்லூரியின் பழைய மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடி மகிழ அலுமினி கூட்டமைப்பு உள்ளது.

பயணம்

தொகு

இக்கல்லூரியானது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எண் 46 இல் கிரிஷ்ணகிரியிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது. பர்கூரிலிருந்து 3 கிமீ தொலைவில் இக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் ஊரக வளர்ச்சியை எதிர்நோக்ககி இக்கல்லூரி உருவாக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் சுற்று வட்டாரப்பகுதிகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

போக்குவரத்து வசதிகள்

தொகு

கல்லூரியைச் சென்றடைய சாலை போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கல்லூரியின் வழியில் செல்கின்றன. மேலும் நகர பேருந்தின் மூலமாகவும் கிரிஷ்ணகிரியில் அல்ல்லது பர்கூரில் இருந்து செல்ல முடியும்.

மேலும் தொடர்வண்டியின் மூலம் பயணம் செய்ய விரும்புவோர் தர்மபுரி அல்லது திருப்பத்தூர் தொடர் வண்டி நிலையங்களை அடைந்து அங்கிருந்து பேருந்தில் கல்லுரியை அடைய முடியும்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு