அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரியாகும். தமிழ்நாட்டு அரசின் ஏழு சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். தமிழகத்தின் இதர சட்டக்கல்லூரிகளைப் போலவே, இதன் நிருவாகம் தமிழக சட்டக் கல்வித்துறையிடம் உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.[1]

அரசு சட்டக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி
வகைசட்டக்கல்லூரி
உருவாக்கம்1979
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.glctry.ac.in

தொடக்கம்தொகு

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 1979-80 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட மூன்று அரசு சட்டக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் சட்டக் கல்லூரி, மதுரை, அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் ஆகியவை இதர இரு கல்லூரிகளாகும்.

வழங்கும் படிப்புகள்தொகு

இங்கு இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவிகளுக்கான விடுதி வசதியும் உள்ளது.

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

ஆள்கூறுகள்: 10°46′43″N 78°41′45″E / 10.778545°N 78.695878°E / 10.778545; 78.695878