அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்

அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் உள்ள 7 அரசினர் சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். இவற்றை சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் சட்டக்கல்வியினை தமிழ்வழி கற்பிக்க வகை செய்யவும் 1953ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் சட்டக்கல்வித்துறை மேல்நடத்திச் செல்கிறது. கோயம்புத்தூர் கல்லூரி 1979-80 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இங்கு பட்ட, பட்டமேற்படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆடவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் இயங்குகிறது.[1]

அரசினர் சட்டக்கல்லூரி, கோயம்புத்தூர்
வகைசட்டக் கல்லூரி
உருவாக்கம்1979
முதல்வர்கே. எசு. கோபாலகிருசுணன்
அமைவிடம், ,
11°02′34″N 76°52′05″E / 11.042886°N 76.867931°E / 11.042886; 76.867931
சேர்ப்புடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.glccbe.ac.in
கோயம்புத்தூர் அரசினர் சட்டக்கல்லூரியின் நுழைவாயில்

வரலாறு

தொகு

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 1979-80 கல்வியாண்டில் துவங்கப்பட்ட மூன்று அரசு சட்டக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் சட்டக் கல்லூரி, மதுரை, அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி ஆகியவை இதர இரு கல்லூரிகளாகும்.

அமைவிடம்

தொகு

தொடக்கத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இயங்கிய இக்கல்லூரி போதிய இடவசதியின்மையால், கோவை நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதமலை அடிவாரத்திற்கு மாற்றப்பட்டு செயற்பட்டு வருகிறது.

வழங்கப்படும் படிப்புகள்

தொகு
  • சட்ட இளநிலைப் பட்டம் (எல்.எல்.பி)
  • சட்ட முதுநிலைப் பட்டம் (எல்.எல்.எம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "HISTORY OF THE COLLEGE". பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.

வெளியிணைப்புகள்

தொகு