அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்

அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம் என்பது 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்ட மகளிர் செவிலியர் கல்லூரியாகும்.கேரள அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கிவரும் இக்கல்லூரி, பாடத்திட்டங்களுக்காக கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்
வகைஅரசு மகளிர் கல்லூரி
உருவாக்கம்1943; 81 ஆண்டுகளுக்கு முன்னர் (1943)
சார்புகேரளப் பல்கலைக்கழகம் , கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்கேரள அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம், இந்திய செவிலிய மன்றம்
முதல்வர்பேராசிரியர் ஸ்ரீதேவி அம்மா சி
அமைவிடம், ,
8°31′27″N 76°55′36″E / 8.5241°N 76.9267°E / 8.5241; 76.9267
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்gcnt.kerala.gov.in/index.php%20கல்லூரி%20இணையதளம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம் is located in கேரளம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்
Location in கேரளம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம் is located in இந்தியா
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம் (இந்தியா)

இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் செவிலியர் பாடங்களை பயிற்றுவிக்கும் இக்கல்லூரி இம்மாநிலத்தில் துவங்கப்பட்ட முதல் செவிலியர் கல்லூரியாகும். இந்திய செவிலிய மன்றத்தின் மூலம் முனைவர் ஆராய்ச்சி படிப்புகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

1943 ஆம் ஆண்டில் பட்டயப்படிப்புகளை வழங்கும் செவிலியர் இடைநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1963 [2] ஆண்டில், இருந்து கேரளாவில் முதன்முதலில் இளங்கலை திட்டங்களைக் கொண்ட இளங்கலைக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் கீழ் இயங்கிய ஒரு துறையாக இருந்த இக்கல்லூரி தற்போது கேரள அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்[3] கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

படிப்புகள்

தொகு

1963 ஆம் ஆண்டு முதல் இளங்கலை படிப்புகளும், 1987 ஆம் ஆண்டு முதல் முதுகலை படிப்புகளும், 2005 ஆம் ஆண்டு முதல் முனைவர் படிப்புகளும் இக்கல்லூரியில் பாடங்களாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்திலிருந்தே 75 சதவீதத்திற்க்கு மேல் மகளிருக்கான கல்லூரியாக இயங்கி வந்த இது, 2004 ஆம் ஆண்டிலிருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஆண் மாணவர்களையும் சேர்த்து இருபாலர் கல்லூரியாக இயங்கிவருகிறது.

முதுகலையில்

  • குழந்தை மருத்துவம்,
  • மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ செவிலியர்
  • அறுவை சிகிச்சை செவிலியர் மற்றும்
  • சமூக சுகாதார செவிலியர் ஆகிய நான்கு பிரிவுகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.


கேரளாவில் செவிலியர் துறையில் முனைவர் பட்ட படிப்புகளை வழங்கும் ஒரே கல்லூரி இதுவேயாகும்.

1990 ஆம் ஆண்டிலிருந்து, அனைத்து கேரள மருத்துவ நுழைவுத் தேர்வில் பெற்ற இடங்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், ஆனால் தற்போது சேர்க்கைகள், மாணவர்களின் மேல்நிலைப் பள்ளி சான்றிதழ்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்கின்றது.

2008 ஆம் ஆண்டில் இளங்கலை பிரிவின் கொள்திறன் 60 இல் இருந்து 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "திருவனந்தபுரத்திலுள்ள அரசு கல்லூரிகள்".
  2. "Historical Sketch". பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  3. "மருத்துவக் கல்வி இயக்குநரின் கீழுள்ள மருத்துவ நிலையங்களின் பட்டியல்".